Pages

Tuesday, 20 March 2012

2012 உலகம் அழியப் போகுதாமே !!!!????


சூரியச் சூறாவளி பற்றி இப்ப திரும்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க.
2000 -த்தில் உலகம் அழியப் போகுதுன்னு சொல்லி ஒரு பீதியை கிளப்பி விட்டு அது இல்லைன்னு ஆனது.
இப்ப திரும்ப டிசம்பர் 21 -ம்தேதி 2012 -டில் உலகம் அழிவது நிச்சயம்னு அடிச்சி சொல்றாங்களாம்.உஷாரய்யா உஷாரு.இந்தியா பாதியாக பிளந்து விடுமாம்.மலைப் பகுதியில் வசிப்பவர்கள் பிழைச்சிப்பாங்களாம்.
இதெல்லாம் காற்றுவாக்கில் நம்ம காதில் விழுந்ததுங்க.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியதாம்.. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து விட்டதாம். 2012ல் வரப்போகும் சூரியப் புயல் பூமி முழுவதையும் தாக்கப்போவதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதி உறுதிப்படுத்தி உள்ளாராம்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி, இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப் புலங்களை நம்பி இயங்கும் நம் தகவல் தொழில் நுட்ப உலகம், பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வகையில், அதிசக்தி சூரியப்புயல், 2012 அல்லது 2013ல் ஏற்படும் என்பது உறுதி என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறாங்கப்பா.

மேலும் பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் வேறு பலித்து வருகிறதாம். மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது என்று சித்தர் சொல்லி வருகிறாராம்.


உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.
இன்று நாம் பின்பற்றி வரும் தேதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் தேதியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த தேதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.


வீடியோ பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.
இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.
இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.
சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் அய்யம்பெருமாள்.
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் சொல்கின்றனர்.

வீடியோ பார்க்கும் பொழுது எரர் வந்தால் யூ ட்யூபை கிளிக் செய்து பார்க்கவும்.
தகவல் திரட்ட உதவி - கூகிள்.
-ஆசியா உமர்.

5 comments:

 1. அரிய தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸாதிகா.

   Delete
 2. ரொம்ப பிடிச்சது இதுதான்.
  'பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் சொல்கின்றனர்.'

  எல்லாரும் செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்ணு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. Pat xyz வருகைக்கும் தங்கள் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete
 3. இதெல்லாம் சும்மா.. அல்லாஹ் எப்போது உலகத்தை அழிக்கவேண்டுமென்று நினைக்கிறானோ அப்போ அழியும். அல்லாஹ்வின் நாட்டப்படியே உலகம் அழியும். இதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அல்லாஹ், ஒவ்வொரு சம்பவங்களின் மூலமும் உலக அழிவை நமக்கு ஞாபகபடுத்திக்கொண்டு இருக்கிறான்.

  நாம இந்த பூமியில இருக்கிறது கொஞ்ச நாள்தான். அதுலயும் வீணான வதந்திகளை நம்பாம சந்தோசமா இருப்போம். உலகம் அழியும் போது அழியட்டும். அல்லாஹ் போதுமானவன்.

  ReplyDelete