Pages

Wednesday, 14 March 2012

சரி தலைப்பிற்கு வருவோம்...


வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம்னு நிறைய யோசித்து மணித்துளின்னு டக்குன்னு மனதில் பிடிபட்டது.ஒரே பிடியாய் பிடிச்சிட்டேன்.
நேரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நானே உணர்த்தவே இந்த பெயர்.

எவ்வளவு தான் முயன்றாலும் நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அது விழலுக்கு இறைத்த நீர் தான்.

என் குட்டி செல்லங்களோட துபாய் வந்த பொழுது கணினி பற்றி தெரியும் அவ்வளவு தான் கையாண்டதில்லை.என் கணவரும் எனக்காக ஹாட்மெயிலில் ஆசையாக ஒரு ஐடி கிரியேட் செய்து கொடுத்தார்.அவர் மெயில் அனுப்ப நான் திறந்து பார்ப்பேன்.ஆனால் அந்த மவுஸ் தான் என் கைக்குள் நிற்கவில்லை.

ஒண்ணுமே தெரியலை,சரி என்று மவுஸ் பிடிக்கத் தெரியாத நான் துபாய் டாக்ஸி ஸ்டாண்ட் பக்கமிருந்த ஒரு இன்ஸ்ட்டியூட்டில் கணினி பேசிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள சேர்ந்தேன். நிஜமாகவே துபாய் டாக்ஸி ஸ்டாண்ட் பக்கம் தான்,பார்த்திபன் அட்ரஸ் சொல்ற மாதிரி இருக்கா? 24 மணி நேரம், தினமும் ஒரு மணி நேரம் 24 நாட்கள் போய் வந்தேன்.word excel எல்லாம் படித்தேன்.முடித்து வந்து ஏதாவது பயிற்சி செய்யவேண்டுமே,எதுவும் செய்யவில்லை, பிள்ளைகளை பார்ப்பதே சரியாக இருந்தது.வெறும் மெயில் பார்ப்பது சாட்டிங் மட்டும் தான்.

ஒரு சில வருடங்கள் கழித்து அபுதாபியில் குடிபெயர்ந்தோம்.திரும்ப மறுமுறை கணினி பற்றி தெரிந்து கொள்ள அங்கேயும் ஒரு இன்ஸ்ட்டியுட்டில் சேர்ந்தேன். சான்றிதழ் எல்லாம் தந்தாங்க.அங்கே எனக்கு அறிமுகமானது சின்னஞ் சிறிய உலகம் அத்தோடு சரி.என் கணவரும்.இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும், நீயே புரிஞ்சுக்கோன்னு சொல்லி விட்டார்.

அப்புறம் பொழுது போகாமல் நானே முயற்சி செய்து அவருடைய உதவியோடு அருகில் இருந்த பள்ளியில் ப்ரைமரி செக்‌ஷனில் இரண்டு வருடம் ஆசிரியையாக வேலை பார்த்தேன், உடல் நலக்குறைவு மற்றும் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த என்று ஆசிரியப் பணியில் இருந்து தற்கால ஓய்வு எடுத்தேன்.அதன் பின் தான் வலையுலகம் அறிமுகமானது. தத்தி தவறி கீழே விழுந்து எழுந்து வலைப்பூ ஆரம்பிக்கிற அளவிற்கு வந்தாச்சு.கூகிள் தருமத்தில் ஓடிக்கிட்டு இருக்கு. ஆரம்பத்தில் தோசையே சுடத் தெரியாத நான் சமையல் ப்ளாக் ஆரம்பிச்சது தனிக் கதை.

விளையாட்டாய் வலைப்பூக்கள் ஆரம்பித்து இத்தனை அன்பான நட்புள்ளங்களை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.

-ஆசியா உமர்.6 comments:

 1. இன்ஸ்ட்டியூட் சென்று கம்பியூட்டர் பேஸிக படித்தீர்களா?பலே.இங்கு நானேதான் தத்து தத்தி கற்றுக்கொண்டேன்.என்னை விட அசமஞ்சங்கள எல்லாம் இங்கு கம்பியூட்டர் ஹேண்டில் செய்ய கற்றுக்கொண்டிருக்கும் பொழுது எப்படி ஆன் செய்வது என்று கூட தெரியாமல் ரோஷத்தில் கற்றுக்கொண்டதுதான்.

  சாட்டிங்,மெயில்,அறுசுவை,என்று ஆரம்பித்து இப்ப பிளாக்கும் திறந்தாயிற்று.

  ஆசியா,உங்களது சுவாரஸ்யமான எழுத்து நடையில் மணித்துளி பிளாகில் பகிருங்கள்.ஆவலுடன் கத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா.ஏதாவது வேலைக்கு செல்லலாம் என்று அப்பொழுது கணினி பற்றி படித்தேன்,அதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கதை,அனுபவம் வேண்டுமே தோழி.சமையற்கட்டை விட்டு வெளியே வர இது ஒரு வழி.

   Delete
 2. வாழ்த்துகள் ஆசியாக்கா.. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி..

  ReplyDelete
  Replies
  1. சகோ.ஸ்டார்ஜன்,வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete
 3. வாழ்த்துக்கள் அக்கா...
  தொடருங்கள்... தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க.

   Delete