Pages

Thursday, 15 March 2012

ஒரு பாடல் ஒரு ஹதீஸ்

தாங்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் மணித்துளியில் வாரம் ஒரு கருத்தாழமிக்க இஸ்லாமிய பாடலும் படிப்பினையூட்டும் வாழ்க்கை பாடமும் பகிரலாம் என்றுள்ளேன்.



நான் அல்ஹாஜ்.இசைமுரசு.நாகூர் E.M. ஹனீபா அவர்களின் தீவிர ரசிகை.பொதுவாக நாங்கள் குடும்பத்துடன் எங்கேயும் நீண்ட தூரம் பயணம் போகும் பொழுது காரில் நாகூர் ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்பதுண்டு.எங்கள் இருவருக்கும் ஒரே ரசனை.என் கணவரிடம் ஐநூற்றுக்கும் மேலான இஸ்லாமிய பாடல் கலெக்‌ஷன் இருக்கு.ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து எனலாம்.இந்த சீரிய சிறிய பாடலை கேட்டு பாருங்க.இன்னும் ஏராளமான எண்ணற்ற தத்துவ பாடல்கள் இருக்கு.இனி இந்த பகுதி தொடர்ந்து வரும்.

அடுத்து ஹதீஸ்; நான் காதால் கேட்டது.

ஷைத்தானின் முடிச்சு:
நாம் ஒவ்வொருவரும் தூங்கும் பொழுதும் ஷைத்தான் நம் தலைமாட்டில் மூன்று முடிச்சுகளை வைத்து விடுகிறானாம்.
அந்த முடிச்சை நாம் அவிழ்த்து விட்டால் அன்றைய நாள் நமக்கு நிச்சயமாக நல்ல நாளாக அமையும்.
எப்படி அவிழ்ப்பது?
1.நாம் தூங்கி அதிகாலை படுக்கையில் இருந்து சோம்பலில்லாமல் எழுந்தால் முதல் முடிச்சு அவிழ்ந்து விடும்.
2.இரண்டாவது முடிச்சு ஒளு செய்து விட்டால் (கை முகம் கால் அலம்புதல்) அதுவும் அவிழ்ந்து விடும்.
3. ஒளூ செய்து விட்டு தொழுது விட்டால் (இறைவனை வழிபடல்) மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுமாம்.

சைத்தானின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இது முதல் வழி.இது மாதிரி சின்ன சின்ன ஹதீஸ்கள் மூலம் வாழ்க்கை பாடங்களை எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.

(ஹதீஸ்- இறைத்தூதர் மொழிந்தது,வாழ்ந்து காட்டியது)

-ஆசியா உமர்.

பின் குறிப்பு:
தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் எனக்கும் ஊக்கமாக இருக்கும்.



4 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    மிக பிரபலமான அர்த்தமுள்ள பாடல்.அழகான ஹதீஸ்,நல்ல பதிவு சகோ..:-))

    ReplyDelete
    Replies
    1. வஅலைக்கும் ஸலாம்.மிக்க நன்றி ஆயிஷா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

      Delete
  2. ஹதீஸுdan மிக அருமையான மணித்துளியை பகிர்ந்து இருக்கீங்க,
    எனக்கும் நாகூர் ஹனிபா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜலீலா.

      Delete