Pages

Friday, 16 March 2012

மயிலோடு உறவாடு..

காணக் கண்கொள்ளாக் காட்சி.
இத்தனை வருடங்கள் துபாயில் இருந்தும் இந்த மயில்கள் ஆடும் ஷபீல் அரண்மனை தெரியாமல் போனது தான் ஆச்சரியம்.

அத்தனைப் பெண்களும் கண்டு மயங்கிட
ஆண் மயிலைத் தான் ஆண்டவன்
இத்தனை அழகாக படைத்திருக்கிறான்
மயிலின் இந்த தோகைக்கு முன்னால்
பெண்கள் எத்தனை அழகான முந்தானை வைத்து
சேலை கட்டினாலும் தோற்றே போவார்கள்.

வரவேற்ற அழகான மயில்.

குழந்தைகளோடும் கொஞ்சி விளையாடும் மயிலின் மாண்பு.

ஆண் மயிலிற்கு பின்னால் பாந்தமாய் பெண் மயில்கள்.ஓட்டம் பழகும் நம் மக்களைக் கண்டு சற்றும் அசராமல் நிற்பதை பாருங்கள்.

என்னைப் பார் என் அழகைப்பார்


இந்த இரண்டு நிமிட வீடீயோ பகிர்வை நிச்சயம் பாருங்க.

video

மயில் கூட்டமாக பார்க்கும் பொழுது அப்படியொரு பிரமிப்பு மனதிற்கு.அதனோடு கூட பறவைக் கூட்டமும் கொள்ளை அழகு.

எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் ஐந்துப்பூ பீடி உரிமையாளர் ஜனாப்.ஹமீது அவர்கள் ஆசையாக ஒரு மயிலை வளர்த்து வந்தார்களாம்.அதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுமாம்.அவர் தீடீரென்று காலமாகி விட அவர் அடக்க ஸ்தலத்தின் அருகிலேயே இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் உயிரை விட்டதாம் அந்த மயில்.எங்கள் ஊரில் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

குளிரில் வாடிய மயிலிற்கு போர்வை போர்த்திய கடைஏழு வள்ளல்களில் ஒருவரான பேகன் வரலாறும் நாம் நினைவில் கொள்வோம்.

பின் குறிப்பு:
இது வரை பார்க்கவில்லை என்றால் துபாயில் இருப்பவரகள் விடுமுறை நாட்களில் ஷபீல் பேலஸ் ஒரு முறை சென்று வாங்க.வெளிநாட்டு பயணிகள் கூட்டம் எப்பொழுதும் அலை மோதும்.காலை வேளையில் நாங்கள் சென்ற சமயம் பேலஸே அமைதியாக இருந்தது.மயில்கள் தோகை விரித்து ஆடியது.உணவு போடும் பொழுது கூட்டமாக பறந்து வரும் அழகும் பார்க்க வேண்டிய ஒன்று.வீடியோவில் பார்த்து இருப்பீங்க.நாங்கள் அடிக்கடி போக விரும்பும் இடம் இது.

--ஆசியா உமர்.

22 comments:

  1. மயில் அழகு காணக் கண் கோடி வேண்டும். எங்கள் ஊரில் அதிகம் இருக்கிறது. இங்கு வீடியோவில் கூட்டமாய் பார்க்கும் போது சந்தோஷத்திற்கு அள்வேயில்லை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தம்பி குமார்.உங்கள் ஊர் எந்த ஊருன்னு தெரியலையே!

      Delete
  2. மயில் என்றாலே அழகு தான், மிக அருமை

    ReplyDelete
  3. வீடியோவும் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. ஜலீலா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.ஆமாம் மயில் பார்ப்பதற்கு மிகவும் அழகு தான்.

      Delete
  4. ஷார்ஜா ஹம்ரியாவில ஒரு அரபி வீட்டில் கிட்டதட்ட 15 மயில்கள் வித விதமான சைசில இருக்கு . பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் . ஆனா சத்தம்தான் அவ்வ்..அவ்வ்வ் கர்ண கொடூரம் ஹி...ஹி... :-)).

    பிடிக்க போனா கொத்த வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  5. போட்டோஸ் சூப்பர் :-)

    ReplyDelete
    Replies
    1. சகோ.ஜெய்லானி வருகைக்கு நன்றி.பேலஸில் அதிக சத்தத்தை நாங்க கேட்கலை.அந்த அரபி வீடு அந்த மயில்களுக்கு பிடிக்க்லையோ! என்னவோ!:))).

      Delete
  6. மயில் ஆடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்னே ஒரு அழகு.. இறைவனின் படைப்பு.... சுப்ஹானல்லாஹ்..

    ///எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் ஐந்துப்பூ பீடி உரிமையாளர் ஜனாப்.ஹமீது அவர்கள் ஆசையாக ஒரு மயிலை வளர்த்து வந்தார்களாம்.அதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுமாம்.அவர் தீடீரென்று காலமாகி விட அவர் அடக்க ஸ்தலத்தின் அருகிலேயே இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் உயிரை விட்டதாம் அந்த மயில்.எங்கள் ஊரில் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.////

    நானும் ஊரில் கேள்விபட்டிருக்கிறேன்..

    நல்ல பகிர்வு ஆசியாக்கா..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டார்ஜன்.இங்கு மால் ஷாப்பிங் என்று அடிக்கடி போய் தான் பொழுது போக்க வேண்டியிருக்கு,இப்படி இடங்களுக்கும் போய் வருவது மனதிற்கு உற்சாகமாக இருக்கும்.

      Delete
  7. மயில்! பெயரைக்கேட்டாலே ஒரு மயக்கம் வரத்தான் செய்கிறது!!

    அழகாக பகிர்வு, நன்றி ஆசியாக்கா.

    ReplyDelete
    Replies
    1. சகோ.அக்பர் நீங்க எந்த மயிலை சொல்றீங்க.ஹி.ஹி.
      வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

      Delete
  8. மயிலும் அழகு; உங்கள் பகிர்வும் அழகு; புதிய ப்ளாக் ஸ்பாட்டுக்கு வாழ்த்துகள். சகோ

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் காதர்.

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எல்.கே.மிக்க மகிழ்ச்சி.

      Delete
  10. நல்ல பகிர்வு ஆசியாக்கா! அழகு மயில்கள்! அந்த நீளத்தோகை மயிலை பார்க்கப் பார்க்க பரவசமா இருக்கு!:)

    வீடியோ நல்லா இருக்கு..உணவுண்ண கூட்டமாக நிற்கும் மயில்கள்,அந்த வெள்ளைப்பறவைகள் எல்லாமே அருமை!

    வீடியோவில் நீங்களும் பசங்களுமா தெரியறீங்க?;)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மகி.அந்த வெள்ளைப் பறவைக்கூட்டம் ஷி கல்ஸ்.விடியோவில் நாங்க இல்லை,ஷார்ஜாஅண்ணன் குடும்பம்.மகிழ்ச்சி மகி.

      Delete
  11. கண்ணைக்கவரும் அருமையான படங்கள்.புகைப்படத்தில் பார்க்கும் பொழுதே இத்தனை மனம் கவர்கிறதே.நேரில் பார்த்தால்..அருமையான பகிர்வு ஆசியா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும்.மயிலே மயிலே இறகு போடுன்னு பின்னாடியே சுற்றினோம்.ஒன்று கூட கிடைக்கலை,எங்க மைனி கையால் பிடித்து எடுத்தாங்க,அப்பவும் கைக்கு கிடைக்கலை.ஒடித்து எடுக்க முடியலை,சிறிய கத்திரி இருந்தால் கட் செய்து எடுத்திருபோம்.அடுத்த முறை போகும் பொழுது இறகோடு தான் திரும்பனும்.

      Delete
  12. மிகவும் அருமை.
    நான் பேருந்தில் செல்லும் பொழுது மயில் நிற்பது, ஓடுவது, தோகையை விரிப்பது எல்லாம் பார்த்து இருக்கிறேன், புகை படமும் எடுத்து இருக்கிறேன் .

    ஆனால் உங்களால் தான் மிக அருக்கில் ஆண் மயில் தோகை விரித்து நிற்பது கண்டேன் அக்கா.

    மயிலின் அழகை உங்கள் வீடியோ மூலமாகத்தான் அக்கா பார்த்தேன். ஆனால் என்னால் அந்த இடத்திற்கு வரமுடியாது என்று நினைத்தால் ரொம்ப கவலையாக இருக்கு அக்கா....

    ReplyDelete
    Replies
    1. விஜி மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.இது மாதிரி மயில் தோகை விரிப்பதை பார்க்கும் வாய்ப்பு நிச்சயம் உங்களுக்கும் கிடைக்கும்.

      Delete