Pages

Thursday, 22 March 2012

அனைவரும் விரும்பி கேட்கும் இஸ்லாமிய பாடல்

அல்ஹாஜ் இசைமுரசு நாகூர் E.M. ஹனீபா அவர்கள் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் மர்ஹூம் கிளியனூர் அப்துல் ஸலாம் அவர்கள்.மிகவும் கருத்தாழமிக்க இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.



ஒரு பாடல் ஒரு ஹதீஸ் பகுதியில் இன்று இந்த பாடலை கேட்டு ரசித்திருப்பீர்கள்.

இன்றைய ஹதீஸ்:
மிகச் சிறந்தது எது ? என ஓர் ஆடவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது,அவர்களுடைய பதில்:
உணவை மற்றவருக்கு நீர் உண்ணக் கொடுப்பது மற்றும் நீர் அறிந்த மற்றும் அறியாதவருக்கு ஸலாமை கூறுவதுமாகும் என்று சொன்னார்களாம்.

--ஆசியா உமர்.

9 comments:

  1. நான் விரும்பி கேட்கும் பாடல். பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.ஸ்டார்ஜன்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

      Delete
  2. நாகூரு ஹனீபாவின் பாடல்கள் எல்லாமே விருப்பமானவை.அதிலும் இந்தப்பாட்ல்கள் அனைத்தையும் விட மிக விருப்பமானவை.ஹனீபாவின் கம்பீரக்குரலில் எத்தனை முறை கேட்டாலும் நெகிழ வைத்து கண்கள் கலங்க வைக்கும் பாடல் அது.\

    அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
    அலையின் மீதும் மழையின் மீதும் ஆட்சி செய்பவன்

    ஆஹா ... கவிஞர் என்ன அழகாக எழுதி உள்ளார்.இத்தனை நாட்களாக இப்பாடலை எழுதிவரைப்பற்றி தெரியாது.உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  3. வருகைக்கு மகிழ்ச்சி ஸாதிகா.இந்த பாடலின் வரிகளுக்காகவும்,இசைமுரசுவின் குரலுக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

    ReplyDelete
  4. அருமையான பாடல்.. ஆசியா. மன நம்பிக்கை அளிக்கும் ஒன்று..

    ReplyDelete
    Replies
    1. வாங்க முத்துலட்சுமி.உங்கள் வருகை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.பொதுவாய் இந்தப் பாடலை கேட்கும் பொழுது எழும் மனஎழுச்சிக்கு அளவேது.
      நன்றி கருத்திற்கும் வருகைக்கும் !

      Delete
  5. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல். மறைந்த கிருபானந்த வாரியாரே இதை பற்றி பல மேடைகளில் சொல்லியுமிருக்கிறார் சகோ. இந்தப் பாடலை எழுதிய அப்துல் ஸலாத்தின் மருமகன் எனது நண்பர் தான். சவுதியில் தான் அவருமிருக்கிறார்.

    ReplyDelete
  6. நன்றி சகோ.அப்துல் காதர்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. மிக அருமையான பாடலும் ஹதீஸும், நான் அடிக்கடி முனு முனுத்து கொண்டு இருக்கும் பாடல் இது..

    ReplyDelete