Pages

Saturday, 24 March 2012

ஆதலினால் காதல் செய்வோம் - கவிதைத் தொகுதி


ஆதலினால் காதல் செய்வோம் கவிதைத் தொகுதியை நானும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு காதல் காவியம் என்றே சொல்லலாம். இந்த புத்தகத்தை வாசித்த பின்பு எனக்கு தோன்றியது திரு பொ.ம.ராசமணி அவர்கள் கவியரசன் கண்ணதாசனுக்கு தம்பியோ என்று. அத்தனை கருத்தாழமிக்க கவிதைகள். நெல்லை மக்களின் மனதை தன்னுடைய நகைச்சுவைமிக்க சிறந்த பட்டிமன்ற பேச்சாலும், சொற்பொழிவாலும் கொள்ளை கொண்டவர் இவருக்கு பல்முகம் உண்டு, அற்புதமான கவிஞர், கதை எழுதுபவர், நல்ல ஓவியர், சிறந்த விமர்சகரும் கூட.
முன்னுரை அளித்த பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் ஐயாவைப் பற்றி கூறுகையில், இத்தனை கவிதைகளை எழுதி குவித்தும் கூட தன் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற அடைமொழியை சேர்க்காத தன்னடக்கமுள்ள சிறந்த அறிவாளி என்கிறார்.கவிஞருடைய மென்மையான வரிகளில் நரம்பு கம்பிகளில் எறும்பு ஊரும் சத்தத்தின் நாதம் மெல்ல ஒலிக்கக் கேட்கலாம் என்கிறார்.
திரு.ராசமணி ஐயா தன்னுடைய அணிந்துரையில் 1948 ல் தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எழுதிய காட்டுச்சிறுவன் என்ற சிறுகதை சென்னைதம்பி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும், அதன் பின்பு 60 ஆண்டுகளுக்கு மேலாக பல கதை கவிதை கட்டுரைகள் எழுதியதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ராசமணி ஐயா அவர்கள், எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களை போலித்தனமில்லாமல் நினைத்ததை நயமாக எழுதக் கூடியவரென்றும்,இப்புத்தகத்தை வெளியிட்ட ஹிலால் பிரஸ் உரிமையாளர் சாதிக் அஹமது அவர்களை தன் குடும்பத்தில் ஒருவராக கருதுவதாயும் பெருமை பட பாராட்டியிருக்கிறார்.
பாளையங்கோட்டை. புனித சவேரியார் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் ராசமணி அய்யாவைப் பற்றி குறிப்பிடும் பொழுது சந்தோஷத்தின் ஊற்றுக்கண் அவரென்றும், ரசிகமணி, கவிமணி, பண்டிதமணி என்ற அடைமொழிகள் அவருக்கு உண்டென்றும், கவிஞர்,கதாசிரியர்,சிறந்த விமர்சகர், மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற வழக்காடு மன்றங்களில் நடுவராகவும் இருந்தவர் என்றும் புகழ்ந்து கூறுகிறார். இந்த கவிதை தொகுப்புகளை கவிஞர் 1960-70 களில் எழுதியதாக நினைவு கூறுகிறார்.
மிருக உணர்வைத் தெய்வீக மேன்மை நிலைக்கு மாற்றுகின்ற
அரிய சக்தி காதலாகும் ஆதலால் உலகீர் காதலிப்பீர்”.
என்று ராசமணி ஐயா கூறுவதாக தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நீயின்றி வாழும் வாழ்க்கை வெறும்
நீரில்லாக் குளத்துத் தாமரையாம்
நீரில்லாமல் தாமரை இல்லை.தொடர்ந்து உயிரோடு இருக்க தாமரைக்கு நீர்,காதலனுக்கு காதலி என்று கற்பனை பறவையை பறக்க வானைக் காட்டுகிற கவிஞரின் ஆளுமையைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்கிறார் அவர்.
திரு ராசமணி அய்யாவின் புதல்வி திருமதி சித்ரா சாலமன் அவர்கள், கொஞ்சம் வெட்டி பேச்சு என்ற வலைப்பூவில் சுவையாய் நச்சென்ற பதிவுகள் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் என்பதை வலைப்பூக்களில் உலாவரும் நாம் அனைவரும் அறிந்தததே.
அவர், தான் கவிதை எழுதும் வரத்தை தன் அப்பாவிடமிருந்து பெற்றதாக குறிப்பிடுகிறார். அவர் தம் அம்மாவிற்கு அப்பா தந்த காதல் பொக்கிஷமாக இந்த கவிதைத் தொகுதியை குறிப்பிடுகிறார்.

இக்கவிதைத் தொகுதியைப் பற்றி கருத்து சொல்கிற அல்லது விமர்சனம் செய்கிற அளவிற்கு நான் பெரிய படிப்பாளியும் அல்ல,எழுத்தாளியும் அல்ல என்றாலும், இந்த கவிதைத் தொகுதியை படிக்க வேண்டும் என்ற ஆவலில் ஐயாவின் மகளார் சித்ராவை அணுகிய பொழுது தனது சகோதரி இந்திரா மூலம் உடனே என் முகவரிக்கு புத்தகத்தை அனுப்பி வைத்து விட்டார். ராசமணி ஐயாவின் மீது அவருடைய பிள்ளைகள் கொண்ட பாசத்தை எழுத்தால் விவரிக்க முடியாது. அவருடைய மறைவால் ஒரு நல்ல இலக்கியாவாதியை நாம் இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

ஆதலினால் காதல் செய்வோம் என்ற இக்கவிதை தொகுப்பில் ராசமணி ஐயா அவர்கள் 66 கவிதைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு 1960 முதல் 1973 வரை எழுதி வெளிவந்த கவிதைகளும் இதில் அடங்கும்.
கவிஞர், காதல் ஒன்றுமட்டும் எல்லாக் காலத்தும் நிலைத்திருக்கும்,காதல் கொண்டவர்கள் உலகில் காலத்தை வென்றவர்கள் என்கிறார்.பாரதிக்கு ஒரு கண்ணம்மா,ராசமணி ஐயாவிற்கோ ஒரு தங்கம்மா.
இன்ப துன்பமெல்லாம் தங்கம்மா
இருவரின் பொதுச்சொத்து!
என்றும் உனக்கெனக்கு- எனப்
பிரிக்க உலகில் எதுவுமில்லை” - என்கிறார்.
கண்ணின் இமையாய்க் காத்துவந்த எனது காதலுணர்வைக் கொள்ளையிட்ட வண்ண மொழிசொல் இன்பவத்தான் என்வாழக்கை மரவேர் நீயத்தான் உண்மை இதனைக் கேளத்தான் எனது உயிரும் உலகும் நீயத்தான்
என்பது போன்ற வரிகளால் பெண் மனதை அழகாய் சித்தரித்துள்ளார்.
மனைவியை பெண்ணுக்குள் சிறந்தவள் என்று போற்றுகிறார்..
பேயே கண்டேன்,மானம் விற்பாயோ,காதலிக்க நேரமுண்டு போன்ற தலைப்பில் கவிஞரின் நியாயமான கோபம் வெளிப்படுகிறது.
பூட்டைத் தகர்த்திடுவீர் பழமை போனதென முழங்கிடுவீர்
நாட்டு மருங்கெல்லாம்-விதவை நல்மணம் நடந்திடட்டும்
என்றி விதவைகளுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்.
ஏழைப்பெண் என்ற தலைப்பில் தன் நெஞ்சக் குமுறலை 13 கவிதைகளாக 4 பக்கக்திற்கு படைத்துள்ளார்.
தன் கவிதைகள் மூலம் உயிர்க்காதல் என்றும் அழிவதில்லை என்று ஓங்கி சொல்கிறார் கவிஞர்.
அன்பு நிறைந்த தொண்டினிலே பெண்மை
அடங்கி கிடந்திடப் பார்த்துவிட்டேன் தாய்மை
என்னும் நிலையினிலே பெண்மை என்றும்
ஏற்றம் அடைவதைக் கண்டுகொண்டேன்.
என்று பெண்மையில் தாய்மையைக் கண்டு பூரிக்கிறார்.
முடிவாக கவிஞரின் அத்தனை கவிதைகளையும் இங்கு பதித்திடவே ஆசை, திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் வண்ணம் கவி நடை பிரமிப்பை தருகிறது. 75 பக்கங்களைக் கொண்டுள்ள இப்புத்தகத்தை நிச்சயம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
சிரமம் பாராமல் கேட்டவுடன் புத்தகம் அனுப்பி தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.ராசமணி ஐயாவின் துணைவியார் ப்ளோரா அம்மாவிற்கு என் அன்பு வணக்கங்கள்.
-ஆசியா உமர்.

26 comments:

 1. வாசித்து நேசித்தது மட்டுமில்லாமல் உடன் பகிர்ந்ததும் அழகு ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. Granny வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete
 2. பொ.ம.ராசமணி அய்யாவின் படைப்பான கவிதை தொகுதியை இங்கு நீங்கள் பகிர்ந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு ஆசியாக்கா.. ரொம்ப நன்றி.. நான், அய்யாவின் படைப்புகளை ரொம்ப நாளா படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.. அதற்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை..ம்ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. ஸ்டார்ஜன் கருத்திற்கு மிக்க நன்றி.
   நான் சென்ற வருடம் ஊர் சென்ற சமயம் சித்ராவிடம் புத்தகம் பற்றி விசாரித்த பொழுது அவங்க சகோதரி தொலைபேசி எண் தந்தாங்க,அவங்க கிட்ட பேசினேன்,அவங்க புத்தகம் அனுப்ப முகவரி கேட்கும் பொழுது தான் தெரிந்தது, அவங்களும் எங்க காலணியில் தான் இருக்காங்க என்று,ஆட்டோ டிரைவர் மூலம் கொடுத்தனுப்பினாங்க.ரொம்ப சந்தோஷமாக இருந்தது.பக்கத்தில் இருந்ததால் இலகுவாக பெற்றுக் கொள்ள முடிந்தது சகோ.

   Delete
 3. பட்டிமன்ற உலகில் தனக்கென்றோர் தனியிடம் ஏற்படுத்தியவர் திரு.பொ.ம.ராசமணி அய்யா.இன்றும் நெல்லை அவர் புகழ் சொல்லும்.பகிர்விற்கு நன்றி,சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கரலிங்கம் சார்.மிக்க மகிழ்ச்சி.

   Delete
 4. நம்மோடு சமகாலத்தில்,தந்தை திரு.பொ.ம.ராசமணியின் பாதிப்பால், பதிவுலகில் நகைச்சுவை ததும்ப எழுதி,தனக்கென்றோர் தனிமுத்திரை பதித்துவரும் சகோதரி சித்ராவை மறந்துவிட்டீர்களா, சகோ.

  ReplyDelete
  Replies
  1. சித்ராவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்,கவனிக்கவில்லையா? சகோ.ஒரு முறை திரும்பவும் வாசித்து பாருங்கள்.இப்புத்தகம் நான் வாசிக்க காரணமே அவர் தானே.

   Delete
  2. பார்த்துவிட்டேன். நன்றி.

   Delete
 5. மிக அருமையாக விவரித்துள்ளீர்கள்

  நீங்க எழுதியதை படிக்கும் போதும் அந்த புத்தகத்தை உடனே படித்து பார்க்கனும் போல் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஜலீலா, புத்தகம் ஊரில் இருந்து கொண்டு வந்து வீட்டினுள் அடுக்கி வைத்ததில், வைத்த இடம் மறந்து, இப்பொழுது தான் என் கைக்கு கிடைத்தது.கிடைத்த பின்பு படித்து உடனே இங்கு பகிர்ந்தேன்.நன்றி ஜலீலா.

   Delete
 6. பகிர்வுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஸாதிகா.மகிழ்ச்சி.

   Delete
 7. I am speechless and I am all in tears.......

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சித்ரா வருகைக்கும் கருத்திற்கும்.தொடர்ந்து தாங்கள் வலைபூவில் எழுதி வரும் படி அன்பாக வேண்டிக் கொள்கிறேன்.மிக்க மகிழ்ச்சி சித்ரா.

   Delete
 8. அருமையாக எழுதி இருக்கீங்க, அக்கா.... வெறும் நன்றி மட்டும் சொல்ல என்னால் இயலவில்லை. நீங்கள் மென்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 10. I have enjoyed appa's speeches, and writings. Now I can read his poems too. He will always LIVE in our hearts... :)

  ReplyDelete
  Replies
  1. குமார் கணேசன் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 11. பொ.ம.ராசமணி அய்யாவின் படைப்பான கவிதை தொகுதியில் உள்ள ருசியையும் மனதை ஈர்க்கும் சிறப்பையும் செவ்வனே கோடி காட்டி விட்டீர்கள் உங்கள் பதிவில்..இந்த கவிதை தொகுதி விற்பனைக்கு உள்ளதா,பிரசுர அலுவலகம் யாது என்கிற விவரமும் கொடுத்து இருக்கலாம்..
  அல்லது சித்ரா அவர்கள் ஒவ்வொரு கவிதையாக அவரது வலைப்பூவில் பிரசுரிக்கலாம்..நீங்கள் பெற்ற இன்பத்தை யாவரும் அடையவேண்டும் என்பது என் அவா. சித்ராவின் கவனத்திற்கு இந்த வேண்டுகோள் வைக்கபடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பார்த்தசாரதி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

   நானும் முதலில் புத்தகத்தின் பெயரைச் சொல்லி நெல்லையின் சில புக் சென்டரில் தேடினேன்.கிடைக்காமல தான் சித்ராவை தொடர்பு கொண்டேன்.புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டோர் ஹிலால் பிரஸ்.புத்தகத்தில் விலை கூட குறிப்பிடப் படவில்லை.26,அருள்மணித் தெரு,பாளையங்கோட்டை -627 002 என்ற முகவரியில் கிடைக்கும்.

   Delete
 12. என்ன சொல்வது என்று தெரியல தோழி, அவ்வளவு நிறைவா இருக்கு. திரு.பொ.ம.ராசமணி அவர்களை முன்பே எனது கணவர் மூலம் தெரிந்து கொண்டேன், பிறகு தோழி சித்ராவின் தந்தை என்று அறிந்ததும் மிக மகிழ்வுற்றேன்.

  அவரது பேச்சையும், எழுத்தை பற்றியும் அறிந்து ரொம்ப பெருமையாக சந்தோசமாக இருக்கும். அவரது நகைசுவை அப்படியே சித்ராவிடம் வந்துவிட்டது !

  புத்தகத்தை குறித்து விவரித்த விதம் மிக அருமை...படிக்க தூண்டும் விதமாக எழுதி இருக்கிறீர்கள் தோழி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,கௌசல்யா.நான் இங்கு இலகுவான கவிதைகளையே கோடிட்டு காட்டியுள்ளேன்.நீங்கள் புத்தகத்தை வாசிக்கும் பொழுது ராசமணி அய்யாவின் எழுத்து நடையின் சிறப்பு புரிபடும்.

  ReplyDelete
 14. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  ReplyDelete
  Replies
  1. Anto Rajkumar வருகைக்கு மிக்க நன்றி,மிக்க மகிழ்ச்சி.

   Delete
 15. I am bowled over by all the comments written here. Every one of them seems to have come from the heart. Asiya, congratulations on a very well written book review. You haven't missed any of the main features of his 'kavithais' which have a natural and sincere flow.I am pleased to see the younger generation taking the time to enjoy soul satisfying Tamil poems too. Stay blessed all of you.

  ReplyDelete