Pages

Monday, 26 March 2012

ஆயிரம் பொன் கிடைச்ச மாதிரி...நன்றி நேசம் + யுடான்ஸ்..




நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகளில் என்னுடைய வலி சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது.
ஆயிரம் பொன் கிடைத்த மாதிரி அப்படியொரு சந்தோஷம்.என் மனம்கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.




எனக்கு பதிவுலகில் இது இரண்டாவது பரிசு.முதல் பரிசு தமிழ்மணம் 2010 -தில் நடத்திய பதிவர்களுக்கான போட்டியில் பெண் பதிவர்கள் பிரிவில் என்னுடைய எம்மா சிறுகதைக்கு முதல் பதக்க பரிசு கிடைத்தது.

அன்பான நட்புள்ளங்களோடு சந்தோஷங்களைப் பகிர்வதில் ஒரு சந்தோஷம். பகிரும் பொழுது அவை இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

என் எழுத்திற்கும் ஊக்கமளித்து எழுத தூண்டிய பதிவுலக ஜாம்பவான்களுக்கும், என் குடும்பத்தாருக்கும்,அன்பான நட்புள்ளங்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.

தாங்கள் அனைவரும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினால் என் எழுத்துப் பயணம் தொடரும்,தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!

-ஆசியா உமர்.




18 comments:

  1. வாழ்த்துகள் சகோ. தொடர்ந்து அசத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசியா

    மேன் மேலும் உங்கள் எழுத்து பணி தொடர்ந்து பல பரிசுகள் வெல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

    வலி , வைத்த பேரே அருமை

    நல்ல விழிப்புணர்வு கதையும்ம் ,அருமையான் வட்டார பேச்சு நடை கதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி ஜலீலா.

      Delete
  3. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது ஆசியா. வாழ்த்துகளும் பாராட்டுகளும். அதுவும் ஒரு நல்ல விஷயத்துக்காக எழுதிய சிறுகதை என்பதில் ஆயிரம் அல்ல இலட்சம் பொன் கிடைத்ததாக மகிழலாம். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலஷ்மி.உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.உங்கள் அனைவரின் ஊக்கம் தான் என்னையும் எழுத வைக்கிறது.

      Delete
  4. ரொம்ப சந்தோஷமாக உள்ளது தோழி.இன்னும் உங்கள் திறமைக்கு பறபல பரிசுகள் கிடைக்கும் மேலும் பல பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா,வாழ்த்திற்கும் வருகைக்கும் ம்கிழ்ச்சி.

      Delete
  5. சலாம் ஆசியாக்கா. மிக்க சந்தோஷம் :) பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாலைக்கும் ஸலாம்.வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

      Delete
  6. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா.

      Delete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அப்பாவி.வருகைக்கும் மகிழ்ச்சி.

      Delete
  8. வாழ்த்துக்கள் ஆசியாக்கா! இன்னும் மென்மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி மகி.நீங்களும் போட்டியில் கலந்திருக்க்லாம்.

      Delete
  9. Replies
    1. மிக்க நன்றி விஜி. வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

      Delete