Pages

Wednesday, 11 April 2012

அரைகுறை...


கொஞ்ச நாளாய் எல்லாமே அரைகுறையாய் இருப்பது போல் ஒரு உணர்வு. எதையுமே நிறைவாய் செய்ய முடியலை.இப்படி புலம்புபவர்களுக்கு தான் இந்த பகிர்வு.

ஒரு நேரத்தில் ஒன்று என்று முடிவெடுத்து செய்து முடிக்காதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளில் ஈடுபட்டு சரிவரச் செய்யாமல் எல்லாம் தோல்வியாக முடிந்து, பின்னர் எதைச் செய்தாலும் தோல்வியாக முடிகிறதே என்று புலம்பி, தன்னைத் தானே தாழ்வுபடுத்தி கொள்வதில் பிரயோஜனமில்லை.

அலையும் மனம் இருந்தால் எதிலும் சாதிக்க முடியாது.

முழுக்கவனம் செலுத்தி ஒரு காரியத்தில் இறங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது. எங்க ஊர் பேச்சுவாக்கில் இப்படி பட்டவர்களை அரை வேக்காடு என்போம். சில நேரம் நான் ஒரு வேலையும் ஒழுங்காக செய்யாமல் ஒரு நாளை வீண் செய்து விடுவேன்.

இந்த மாதிரி வீணடிக்காமல் இருக்க என்ன செய்யலாம், திட்டமிடனும் என்ன தான் திட்டமிட்டாலும் ஒன்றும் வேலைக்கு ஆகலையா? திட்டத்தை எழுதி எடுங்கள்,ஒவ்வொரு வேலையும் முடியும் பொழுதும் டிக் செய்து விடுங்கள்.

நான் பொழுதே போகலை, சுத்த போர் என்று புலம்பிய பொழுது என் கணவர் எனக்கு என் நேரத்தை பிரித்து அட்டவணையிட்டு சமையலறை கதவில் ஒட்டினார்.அதிகாலை தொழுகை ஆரம்பித்து இரவு வரை என் கடமைகள் அட்டவணையில் இருந்தது, அதன் படி செய்ய ஆரம்பித்தால் ஒரு நாளிற்கு 24 மணி நேரம் போதாது.நாம் தான் எதற்கும் அசராதவங்களாச்சே!..ஹி.ஹி..

காலையில் இருந்து இரவு வரை திட்டமிட்டு நேரத்தை செலவு செய்து பாருங்களேன், நிச்சயம் அந்த நாள் இனிய நாளாக அமையும்.

உதாரணமாக காலையில் 5-7, 8-10, 11-1 வரை என்று திட்டமிட வேண்டும்.காலையில் இதை செய்ய வேண்டும், மாலையில் இதை செய்ய வேண்டும், இன்றைக்குள் இதை முடிக்க வேண்டும் என்று மனதில் நிறுத்தி செயல்களை செய்ய வேண்டும்.கவனம் சிதறும் பொழுதெல்லாம் செய்ய நினைத்த காரியத்தை செய்து முடித்தோமா என்று சுயசோதனை செய்து கொள்ளலாம்.

எதிலும் முழுமை என்பது இல்லை, முழுமைத்தனமை எனபதும் முடியாத காரியம், முடிந்தவரை செம்மையாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலே முழுதிருப்தி கிடைக்கும்.

எந்த வேலையை செய்ய எத்தனிக்கும் பொழுதும் அதில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது,தொடர்ந்து ஒரே வேலையில் ஈடுபடுவது சோர்வைத் தரும்.வேலை செய்யும் பொழுது வேலையில் கவனம், சாப்பிடும் பொழுது அதில் கவனம், தூங்கும் வேளையில் தூங்குவதில் கவனம் என்று ஒன்றன் பின் ஒன்றாக செய்ய வேண்டும். இப்படி திட்டமிட்டால் நிச்சயம் அரைகுறை என்ற பெயரில் இருந்து தப்பித்த சந்தோஷம் கிடைக்கும்.

திட்டமிட்டு செயல்களை செய்து முடிக்கும் பொழுது கிடைக்கும் மன திருப்தி தான் வெற்றி,முயற்சி செய்து பாருங்க நிச்சயம் முடியும்.

-ஆசியா உமர்.

6 comments:

  1. திட்டமிட்டு செயல்களை செய்து முடிக்கும் பொழுது கிடைக்கும் மன திருப்தி தான் வெற்றி,முயற்சி செய்து பாருங்க நிச்சயம் முடியும்.//அழகிய அறிவுரை.அருமையான வாழ்வியல் கட்டுரை.தொடருங்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸாதிகா.கருத்திற்கு மகிழ்ச்சி.

      Delete
  2. வருகைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  3. மிக அருமையான பகிர்வு
    சரியாக பிளான் பண்ணலன்னா அன்று வேலையே பார்த்தமாதிரி இருக்காது

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஜலீலா.ஒரு டைரிக்கு பதில் இந்த ப்ளாக் மனதில் உள்ளவைகளை எழுத.அவ்வளவே.வருகைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete