Pages

Tuesday, 3 April 2012

ஃபுஜெய்ரா மலைப் பயணம் / Fujairah Mountain Driveஃபுஜெய்ரா நான்கு வருடங்களுக்கு முன்பு சென்று வந்தது.மகளுக்கு விடுமுறை எங்கேயாவது நீண்ட தூரம் ட்ரைவ் போகலாம் எனும் பொழுது நினைவிற்கு வந்தது இந்த த்ரில்லான மலைப் பயணம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இந்த ஃபுஜெய்ரா பரப்பளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஃபுஜெய்ரா மட்டும் கிழக்கு கடற்கரை ஒமான் வளைகுடாவில் உள்ளது. மற்ற ஆறு அமீரகங்கள் மேற்கில் பாரசீக வளைகுடாப் பகுதியில் உள்ளது. ஃபுஜெய்ரா மலைப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மற்ற அமீரகங்கள் பாலைவனப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வருடம் ஒரு பயிர் செய்யும் அளவு இங்கு மழை கூட பெய்து வருகிறது.இந்த பயணத்தை வீடியோவில் பாருங்க.மூன்று நிமிடம் தான்.

நாங்கள் கிளம்பிய அன்று அல் ஐனில் மணல் புயல் (Sand Storm)என்ற வானிலை அறிக்கை.தெரிந்தே தான் கிளம்பினோம்.ஷார்ஜா அடைந்த பின்பு மணல் புயல் நின்று ரோடு தெளிவாக தெரிந்தது.ஹத்தா - முனை என்ற இடம் வரை மலைப் பாதை.(Hatta Round about - Munai - Mountain Drive)போகும் பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜாலியாக இருந்தது.ஒரு கிலோ மீட்டர் மலையைக் குடைந்து அமைத்த குகைப் பாதையில்(Tunnel) செல்வதற்கு த்ரில்லாக இருந்தது.

.ஃபுஜைராவில் இருந்து குர்ஃபக்கான் (Kor Fakkan) கடற்கரை சென்று இளைப்பாறிவிட்டு திரும்பலாம் என்பது தான் திட்டம்.வீட்டில் இருந்து கிளம்பி 3 மணி நேர பயணம்.மதியம் மூன்று மணிக்கு போய் அங்கு சேர்ந்தோம்.

இதோ உங்கள் பார்வைக்காக மலைப் பாதை.

மலை ரோட்டில் ஆட்டு மந்தைகள், கழுதைகளையும் கண்டோம்.ஊரில் கூட அதிகம் காணாததை கண்ட பொழுது உடனே படம் எடுத்தாச்சு.

இது குகைப் பாதை.வீடியோவில் பார்த்து இருப்பீர்கள்.

குர்ஃபக்கான் பீச் வந்து சேர்ந்தோம்.படத்தில் காணும் மரங்கள் முழுவதும் கீச் கீச் என்று சிட்டுக் குருவிகள் சத்தம்.சரி நாமும் ஒரு குருவியையாவது படம் எடுத்து போடலாம் என்றால் சிட்டாக பறந்து விடுகின்றன.
நல்ல பசி.நான் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து சென்ற சிக்கன் பிரியாணி,புதினாத்துவையல், சிக்கன் சீக் கபாப்,அ.கோ.மு
பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது.

சாப்பிட்ட பின் ஊஞ்சல்,கடல் நீரில் கால் நனைத்து விட்டு எடுத்து சென்ற ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ குடித்து விட்டு தெம்பாக போட்டிங் செல்ல கிளம்பினோம்.அரைமணி நேர படகு சவாரி .குளு குளு இதமான காற்று சூப்பராக இருந்தது.மனசே ரிலாக்ஸ் என்று சொன்ன மாதிரி அப்படியொரு அமைதி.

படகில் சென்று துறைமுகத்தை அருகில் காண முடிந்தது.

ஒருவர் ஜாலியாக பாரசூட்டில் வட்டமடித்து கொண்டிருந்தார்.

படகு பயணத்தின் போது சிறிது தொலைவில் மலையுடன் இருந்த பகுதியை ஐலேன்ட் என்று அதனையும் வட்டமடித்து காட்டினார் படகோட்டி.


திரும்ப மனமே இல்லாமல் திரும்பினோம்.

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு அங்கு சுடச் சுட சுட்டு தந்த சிக்கன் டிக்கா,மட்டன் டிக்கா வாங்கி சாப்பிட்டு விட்டு கிளம்பியாச்சு.

ஆஹா! இதுவரை பயணம் சுகமாகத் தான் இருந்தது.திரும்பி குகை வழியாக வந்து மலைப் பாதை வந்தது.மலைப் பாதையில் 15 கிலோ மீட்டருக்கு விளக்கு கம்பம் இல்லை. இருட்டில் காரில் அதிக வெளிச்சத்தை போட்டு ஓட்டி வந்தோம். யாரும் இல்லாமல் மயான அமைதி.கும்மிருட்டு.தூரத்திற்கு ஒரிரு கார் சர் சர்ரென்று போய் வந்தது.எதிரில் கார் வரும் பொழுது லோ பீமில் லைட் போட்டு கார் எங்களை கடந்த பின்பு ஹைபீம் லைட் போட்டு மெதுவாக என் கணவர் காரை ஓட்டி வர நாங்கள் பயத்துடன் அமர்ந்திருந்தோம்.

ஒரு வழியாக ஹத்தா ரவுண்டபௌட் வந்தடைதோம்.வெளிச்சமாக கீழே காணும் முக்கோண கோட்டை மாதிரி கட்டடம் பார்த்தவுடன் தான் எனக்கு மூச்சே வந்தது.
சரி இனி சர்ரென்று அல் ஐன் வந்தடையலாம் என்ற நிம்மதி பெருமூச்சோடு செக் போஸ்ட் வந்தால் அங்கே தான் எங்களுக்கு ஆப்பு காத்திருந்தது.நாங்கள் வரும் பொழுதும் இந்த செக் போஸ்ட் வழியாத்தான் வந்தோம்.அப்ப அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி எதுவும் சொல்லாமல் எங்கள் வண்டியை நிறுத்தி பார்த்து விட்டு அனுப்பி விட்டார்.ஒரு 20 கிலோமீட்டருக்கு ஒமானைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த செக்கிங்.நாங்கள் முன்பொரு சமயம் வந்த பொழுது இந்த செக்கிங் இல்லை.அதனால் அதை பற்றி பெரிதாக எதுவும் யோசிக்க வில்லை.

எங்கள் வண்டியை நிறுத்த சொன்னார்கள்.என் கணவர் ஐடியை பரிசோதித்தார்கள்.விட்டுவிடுவார்கள் என்று நினைத்தோம்.எங்க கிட்ட பாஸ்போர்ட் அல்லது எங்களோட எமிரேட் ஐடி கேட்டார்கள்,அப்ப தான் எங்களுக்கு எங்களோட ஐடி கார்டை வீட்டில் வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.நீங்க இந்த வழியாக போக முடியாது.வண்டியை ஓரங்கட்டுங்கன்னு என் கணவரிடம் அவர்கள் சொல்ல சும்மாவே தெனாலி கமல் அளவிற்கு பயப்படும் நான் என்ன ஆகியிருப்பேன்னு யோசிங்க.பக்குன்னு இருந்துச்சு.என்னுடன் இருப்பது என் மனைவியும்,மகளும் என்று சொன்னால் நம்பினால் தானே..ஐடியைக் காட்டி விட்டு போ என்று சொல்ல என்ன செய்ய என்று நின்று கொண்டிருந்தோம்.என் கணவர் அந்த இரவு வேளையில் எங்களை தனியாக விட்டு விட்டு சென்று வீட்டில் போய் ஐடி எடுத்து வரவேண்டும்.வேற வழி?

தீடீரென்று அந்த செக்யூரிட்டிமீண்டும் எங்களிடம் வந்து, திரும்பி போய் ஷார்ஜா ரோடு வழியாக போங்க என்று சொல்லவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று வண்டியை திருப்பி விட்டு வந்தோம்.

திரும்பவும் அந்த இருட்டு மலைப் பகுதியில் பயணம்.இப்ப அந்த திரில்லை மிகவும் ரசித்து பயணத்தை தொடர்ந்தோம்.செக் போஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சியோ என்னவோ எப்பொழுது எங்கு சென்றாலும் திரும்பி வரும் பொழுது தூங்கி வ்ழியும் நான் முழுப் பயணமும் விழித்தே வீடு வந்து சேர்ந்தேன்.

ஆகவே ஃபுஜைரா போகும் பொழுது ஹத்தா வழியாக சென்றால் மறக்காமல் எல்லாருக்கும் எமிரேட்ஸ் ஐ டி அல்லது பாஸ்போர்ட் எடுத்துட்டு போங்க.

அப்பாடா ! ! !

எங்களுடைய ஒமான் முசந்தம் பயணம், துபாய் உல்லாசப் படகு பயணம் காண இங்கு செல்லவும்.

பயணங்கள் முடிவதில்லை.
குறிப்பு: படங்களைப் பெரிதாக பார்க்க படத்தை கிளிக்கவும்.

-ஆசியா உமர்.

8 comments:

 1. Nice trip..enjoyed reading it!

  15km-kku light ilaainu bayappadareenga...Inge 40-50mile kaatukkulla pora maathiri Ellaam road irukku Asiya Akka,come to US! ;)

  ReplyDelete
 2. கருத்திற்கு மிக்க நன்றி மகி.இன்னும் ஏராளமான போட்டோஸ் இருக்கு.அத்தனை view -விலும் நாங்க இருக்கோம்.அதனால் சில படங்கள் தான் இணைக்க முடிந்தது.இருட்டில் பயணம் செய்தது இதுவே என் முதல் அனுபவம்.அதனால் கொஞ்சம் பயம் தான்.வருகைக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. அருமையான படங்கள்.மிக அருமையான பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி,

  ReplyDelete
 4. மிக்க நன்றி ஸாதிகா.வருகைக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. ஆசியா அந்த படகு சவாரி எனக்க்கு ரொம்ப் பிடிக்கும்
  தங்கை புஜெராவில் இருந்த போது சென்றோம்,
  அப்ப்டி சென்றது மனசே ரிலாக்ஸ் என்று நான் திரும்பி மனமில்லாமல் தான் வந்தேன்.

  செக் போஸ்ட் அனுபவும் முன்பு ஒரு முறை உண்டு பேமிலியா போனதால் விட்டுட்டாங்க

  ReplyDelete
 6. நன்றி ஜலீலா,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. மிக்க நன்றி சீனி.வருகைக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete