Pages

Friday, 18 May 2012

மருதாணி மருத்துவ குணம்..(டிப்ஸோ டிப்ஸ்)
மருதோன்றியின் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.


1. கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும்,உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.


2. நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.


3. மருதோன்றி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும்.( இந்தக் கோடையில் கூல் கூல் ஜில் ஜில் தான்)


4. மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.


5. மேக நோயால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல்1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.6.பெண்கள் மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


7. மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.


8. மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.


9. வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.


10. மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயைக் கூட குணப்படுத்தலாமாம்.


மருதோன்றி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வருகிறோம். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். எனவே வீட்டுத் தோட்டத்தில் அல்லது முன்புறம், பின்புறம் எங்கு இடமிருந்தாலும் ஒரு மருதோன்றிச் செடியை வளர்த்து அதன் பலனை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த பகிர்வு.

--ஆசியா உமர்.


12 comments:

 1. மருதாணி பற்றி ஒரு அழகிய பகிர்வு அக்கா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 2. மிகவும் பயனுள்ளது அப்படியே எனக்கும் அனுப்பி விடுங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜலீலா.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 3. பயனுள்ள பகிர்வு ஆசியா. நன்றி.

  இங்கு செடி எங்கே கிடைக்கப் போகிறது! ஹ்ம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இமா, வருகைக்கு மகிழ்ச்சி.கிடைத்தால் உங்க தோட்டத்தில் ஒன்று வைக்க முயற்சி செய்யுங்க.

   Delete
 4. பயனுள்ள டிப்ஸ்.மருதாணி என்றதும் எனக்கு ஜலீலாதான் நினைவுக்கு வருவார்.எப்பொழுதும் கயில் மருதாணி சிகப்பு..:)

  எனக்கு வைத்து சிவக்கும் வரை காத்திருக்க பொறுமை கிடையாது ஆசியா:)

  ReplyDelete
 5. நன்றி ஸாதிகா.விரல்களில் வைத்துப்பாருங்கள்.ஒரு மணி நேரம் தான்.ஊரில் எங்க வீட்டில் மருதாணி இருக்கு,யாராவது பறிக்க வரும் பொழுது அப்படியே நானும் வைத்துக் கொள்வதுண்டு.இங்கு அரபு நாட்டில் மருதாணி வைப்பதே அவர்களோடு ஒன்றியிருக்கிறது.நமக்கு ஆசை வரும் அளவு அத்தனை அழகான டிசைனாக இட்டிருப்பார்கள்.

  ReplyDelete
 6. அக்கா மருதாணியும் அதன் மருத்துவ பயன்கள் பற்றிய உங்கள் கருத்து மிகவும் அருமையான பகிர்வு.
  மருதோன்றியின் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. superb....

  ReplyDelete
 7. மிக்க நன்றி விஜி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. Helo Asiya
  I am MAno from trichy. your photos are very nice. thank you for sponsoring free

  ReplyDelete
 9. வருகைக்கு மகிழ்ச்சி மனோ.என்னோட பேட்ச் மேட், ரூம் மேட்டான உன்னை மறக்க முடியுமா? தொடர்பில் இருக்கவும்.

  ReplyDelete