Pages

Sunday, 27 May 2012

நம்பிக்கை ஸ்வரங்கள் - அல் ஐனில்..

அல் ஐன் இந்தியன் சோசியல் செண்டரில் நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற நிகழச்சி சென்ற வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இது மாதிரி நிகழ்ச்சி பார்க்க வேண்டுமென்றால் துபாய் அல்லது அபுதாபி சென்றால் தான் பார்க்க முடியும்.துபாய் தமிழ்ச்சங்கம் ரமேஷ் விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அலைன் தமிழ்க்குடும்பங்களின் உதவியுடன் இங்கும் வந்து நிகழ்ச்சி நடத்தி தந்தார்கள். இந்நிகழ்ச்சியை குறித்து பகிர்வதற்கு முக்கிய காரணம்,மாற்று திறனாளிகள் ( Physically Challenged – Ability Unlimited) அவர்களோட வீல் சேர் பரதநாட்டியம், வீல் சேரில் சூஃபி டான்ஸ், வீல் சேர் யோகா, வீல் சேர் பஞ்சாபி டான்ஸ், ஜெய்ஹோ டான்ஸ் என்று பிரமாதப்படுத்தியிருந்தார்க்ள்.காணக் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

பரத நாட்டியம் ஆடிய பெண்களுக்கு வாய் பேச,காது கேள முடியாதவர்கள்.
ஊனமுற்றவர்களால் வீல் சேரில் இருந்து கொண்டே இப்படி நாட்டியம்,யோகா எல்லாம் செய்ய முடியும் என்பதை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் கண்களில் துளிர்தத நீரை கட்டுப்படுத்த முடியவில்லை, நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் முடிவு வரை அரங்கமே நிசப்தமாக ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருந்தது,
அத்தனை அருமையாக, அந்த குழுவின் குரு பாஷா அவர்களின் 12 வருட கடின உழைப்பால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உலகெங்கும் பல நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி, அவர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.அவர் பொறுப்பில் உள்ள ஆஸ்ரமத்தில் 150 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக தெரிவித்தார்.
அவர்களைப் பற்றி கூறும் பொழுது not disabled, they are differently abled என்று தெரிவித்தார்.தினமும் 6-7 மணி நேரங்கள் கடின பயிற்சி செய்து அவர்கள் இம்மாதிரி நிகழ்ச்சிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.முயற்சித்தால் முடியாதது எதுவுமே இல்லை.

http://www.youtube.com/watch?v=94498P3_qH0

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜய் டீவி புகழ் இப்படிக்கு ரோஸ். அவர் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் ரசிக்கும்படியிருந்தது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் டீவி மானாட மயிலாட புகழ் கோகுலின் நடனம் சூப்பரோ சூப்பர்.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் புகழ் சுசீலா( பார்வை இழந்தவர்) காற்றினிலே வரும் கீதம் பாடல் பாடி அசத்தினார்.அவருடைய கின்னஸ் சாதனை தொடர்ந்து 50 மணி நேரம் பாடல்கள் பாடியதாம்.

நாங்கள் வீட்டில் விஜய் டீவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் ரசித்து பார்ப்பது வழக்கம், லீடிங் கீ போர்ட் ப்லேயர் நிவாஸ் பிரசன்னா உதவியுடன் விஜய் டீவி புகழ் அஜீஸ், சந்தோஷ்,சத்யபிரகாஷ், பூஜா அவர்கள் பாடியதை நேரில் பார்க்கும் பொழுது அவர்கள் கடந்து வந்த பாதையின் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பது உறுதியாக தெரிந்தது. சத்ய பிரகாஷ் பாடிய சுட்டும் விழிச்சுடர் பார் கண்ணம்மாவும், பூஜா பாடிய ஒருநாள் யாரோ பாடலும் மிக இனிமையாக இருந்தது.

சந்தோஷ் பாடிய மன்றம் வந்த தென்றலுக்கு,ஒத்த கண்ணாலே பாடல் மிகவும் ரசிக்கும்படியிருந்தது. சத்யப்ரகாஷ், அவர் சூப்பர் சிங்கர்ஸ் ஃபைனல்ஸில் பாடிய ஓ மணப் பெண்ணே பாடி அசத்தினார்,சந்தோஷ் பூஜா கிளிமஞ்சாரோ பாடல் பாடும் பொழுது அரங்கமே ஆஹா ஆஹா என்று அப்பாடலில் வரும் கோரஸை பாடி மகிழ்ந்தது.அஜீஸ் –பூஜா பாடிய ’இதுவரை’ பாடல் சூப்பரோ சூப்பர். இதனைத் தொடர்ந்து நால்வரும் சேர்ந்து கொலைவெறி பாடலும், வந்தே மாதரம், தாய் மண்ணே வணக்கம் பாடலும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

அனைவருக்கும் அல் ஐன் தமிழ்குடும்பங்கள் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தார்கள்.

6 comments:

 1. அருமையானதொரு நிகழ்ச்சியை அழகாகப் பகிர்ந்துள்ளதற்கு மனமார்ந்த நன்றிகள் + பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. வை.கோ சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

  ReplyDelete
 3. நல்லதொரு நிகழ்ச்சியை பகிர்ந்திருக்கிறீர்கள் அக்கா.
  நான் உங்கள் பதிவு பார்த்துத்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி இங்கு நடந்ததை அறிந்தேன்.
  வெள்ளிக்கிழமை வெட்டியாகத்தான் அறையில் இருந்தேன். தெரியாமல் போய்விட்டதே...

  ReplyDelete
 4. தம்பி குமார் நீங்களும் வந்திருப்பீர்கள் என்றே நினைத்தேன்.அரங்கம் முழுவதும் பேச்சிலர்ஸ் தான் நிரம்பி வழிந்தார்கள்.இனி எனக்கு தெரிந்து ஏதாவது நிகழ்ச்சி என்றால் மெயில் செய்கிறேன்.
  கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. மிகவும் அருமை, அற்புதமான கலை முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இதுவே பெரும் சான்று ஆசியா அக்கா . நல்ல பகிர்வு..

  ReplyDelete
 6. நன்றி விஜி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete