Pages

Monday, 4 June 2012

சமையல் டிப்ஸோ டிப்ஸ்..

1.சாதம் உதிரியாக இருந்தால் தான் ஃப்ரைட் ரைஸ் போன்றவை நன்றாக அமையும்.உதிரியாக வர அரிசியை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தேவையான தண்ணீருடன் 20 நிமிடம் ஊற விட்டு வேக விட வேண்டும்.இவ்வாறு செய்வதால் அரிசியின் மேல் ஒட்டியுள்ள அனைத்து மாவுச்சத்தும் போய்விடும்.சாதம் உதிரியாக இருக்கும்.சாதம் வேகும் பொழுது எலுமிச்சம் பழச்சாறு அல்லது எண்ணெய் சில துளிகள் சேர்த்தால் சாதம் பார்ப்பதற்கு ஒரு வித பளபளப்புடன் இருக்கும்.

நூடுல்ஸ் வேக வைத்த பின்பு கொதி நீரை வடித்து குளிர்ந்த நீரை மேல் ஊற்றி வடிகட்டி எடுத்தால் உதிரியாக இருக்கும்.

2. பூரி மொறு மொறுப்பாக இருக்க கோதுமை மாவை பிசைவதற்கு முன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் ரவை கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்தால் மொறு மொறுப்பாக பொங்கி வரும்.

3. தக்காளி இல்லாத நேரத்தில் ஓரிரு டீஸ்பூன் தக்காளி சாஸ் விட்டால் 2 தக்காளி சேர்த்ததற்கு இணையான ருசியை தரும்.

4. கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க உரித்த வெங்காயத்தை 2-4 துண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவிட்டு நறுக்கினால் கண்ணீர் வராது. வெங்காயம் தட்டுப்பாடான நேரத்தில் முட்டை கோஸ் பாதி,வெங்காயம் பாதி என்று உபயோகித்தால் சத்துக்கு சத்தும் ருசிக்கு ருசியுமாச்சு.

5. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் பொழுது 60 சதவிகிதம் பூண்டும் 40 சதவிகிதம் இஞ்சியும் சேர்த்து அரைத்தால் சிறந்த சுவையைத் தரும்.

6. காளிப்ளவரை சிறு துண்டாக நறுக்கி சர்க்கரை கலந்த நீரில் வேக விட்டு எடுத்தால் வெண்மையாக இருக்கும்.உள்ளிருக்கும் புழு பூச்சிகளும் வெளிவந்து விடும்.

7. கத்திரிக்காய் கருப்பாகாமல் இருக்க, கத்திரிக்காய் வெட்டி தண்ணீரில் போடும் பொழுது சிறிது பால் சேர்த்து விட்டால் கருக்காது.சமைத்த பின்பு பார்க்கவும் நிறம் அழகாக இருக்கும்.

8. முட்டை வேக வைக்கும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் முட்டை உடைவதை தவிர்க்கலாம்.

9. மீன்,இறால் போன்ற கடல் உணவுகள் அதிக வாசம் அடித்தால் சிறிது உப்பு,எலுமிச்சம்பழச்சாறு பிசறி 10-20 நிமிடம் வைத்தால் வாடை சுத்தமாக போய்விடும்.மீன் கெடாமல் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்க உப்பு,வினிகர்,மஞ்சள் தூள் பிசறி வைத்தால் புத்தம் புதுசாக இருக்கும்.

10. கறி,கோழி,மீன் சமைக்கும் பொழுது முதலில் அதிக நெருப்பில் வேகவிட்டு பின் குறைந்த நெருப்பில் வேக வைக்க வேண்டும்.இது நன்கு வேக உதவுவதோடு சத்துக்கள் வீணாவதை தவிர்க்கும்.



எல்லா டிப்ஸும் தெரிந்ததாக இருந்தாலும் நிறைய பேர் பயன்படுத்துவதில்லை. டிப்ஸ் உபயோகித்து பாருங்க, பலன் இருக்கும்.


13 comments:

  1. உபயோகமான குறிப்புகள் ஆசியாக்கா!

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி மகி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. தங்களின் சமையல் பற்றிய பதிவுகளில், தலைப்பின் அருகே
    "V" [VEGETARIAN] அல்லது "NV" [NON VEGETARIAN] என்று கொடுத்தால் நன்றாக இருக்குமே!

    இரண்டையும் கலந்து இருபோல பதிவிடுவதையும் தவிர்க்கலாமே!

    This is just my Suggestion only. Madam.

    For your kind consideration, please.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சார்.மகிழ்ச்சி.நல்லது.இனி அவ்வாறு செய்கிறேன்.என் சமையல் ப்ளாக்கில் வெஜ் சமையல் என்று சப் டைட்டில் ஒன்று இருக்கு.

      Delete
  4. அருமையான டிப்ஸ் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  5. அருமையான குறிப்புக்கள்.குறித்து வைத்துக்கொள்ளக்கூட்டிய குறிப்புக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸாதிகா.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  6. பயனுள்ள குறிப்புகள் ஆசியா.

    ReplyDelete
    Replies
    1. இமா வாங்க,மிக்க மகிழ்ச்சி.நன்றி.

      Delete
  7. ஆகா நல்ல பயனுள்ள குறிப்புகள்.
    மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  8. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகம் செய்தவர்-காவியகவி


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம் செய்த திகதி-25.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete