Pages

Thursday, 30 August 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் / Joyful Singapore - பகுதி -2 - அட இதப் பாருடா!


முதல் நாள் மாலை திட்டமிட்டபடியே நாங்கள் ஆன்லைனில் புக் செய்த Singapore flyerகிளம்பி சென்றோம். அது ஒரு பேக்கேஜ் டூர், அதனுடன் City Sight Seeing, DUKW tour மூன்றும் சேர்ந்தே வரும். நாங்க பயணம் கிளம்ப இரண்டு வாரம் முன்பே அங்கு பார்க்க வேண்டிய சில இடங்களுக்கு ஆன் லைனில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தோம். நேரில் சென்று எடுப்பதை விட ஆன்லைன் புக்கிங் சௌகரியம் என்று தான் சொல்ல வேண்டும்.City Sight Seeingமறுநாளும்,DuckW Tourசெல்ல, ஐந்தாம் நாளை தேர்வு செய்து மாற்றிக் கொண்டோம்.

பின்பு அன்று இரவு Marina Bay Sands – Sky Park சென்று பார்க்க முடிவு செய்தோம்.

Flyer –ருக்கான ஆன்லைன் டிக்கெட்டுக்கான படிவத்தை கவுண்டரில் கொடுத்தவுடன், ஒரு கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, பின்பு எங்களுக்கு எத்தனை டிக்கெட்டோ அத்தனைFlyer lucky key chain மற்றும்Singapore Traditional Food Trial –கூப்பன் சிங்கப்பூர் வெள்ளி 5 மதிப்பானதையும் ஒவ்வொருவருக்கும் இணைத்து தந்தார்கள்.


இந்த புகைப்படம் DUCW TOUR பொழுது படகில் இருந்து எடுத்தது.

உலகின் மிகப்பெரிய ஜெயண்ட் வீலான சிங்கப்பூர் ஃப்ளையர் பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது.28 கேப்ஸ்யூல்(குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டிகள்) கொண்டது. 165 மீட்டர் உயரம் கொண்டது.கூட்டத்திற்கு தகுந்த படி ஒவ்வொரு பெட்டியிலும் ஆட்களை 15-20 நபர் என்ற படி ஏற்றினார்கள். பெட்டியினுள் அமர்ந்தும் பார்க்கலாம், நின்றும் பார்க்கலாம். ஒவ்வொரு அடியாய் எடுத்து வானில் நடந்து பார்த்தால் எப்படியிருக்கும்,அந்த மகிழ்ச்சி. அந்த வீல் சுற்றுவதே தெரியவில்லை. மெது மெதுவாய் வானில் நகர்ந்து சென்று மொத்த சிங்கப்பூர் சுற்றுவட்டாரத்தையும் அணுஅணுவாய் பார்த்த, இல்லை இல்லை.. ரசித்த திருப்தி. கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுவோமே அந்த மாதிரி காட்சிகளைக் கண்ட மகிழ்ச்சி. முக்கால் மணி நேர உலா. இறங்க மனமில்லாமல் இறங்கினோம்.என் கணவர் வீடியோ விடாமல் எடுத்துக் கொண்டு இருந்ததால் என்னால் முடிந்த பொழுது கிளிக்கிய சில படங்களைப் பகிர்கிறேன்.


இது கேப்ஸ்யூலின் உட்புறத் தோற்றம்.


பாதுகாப்பான கட்டமைப்பு.

ஏறுவதற்காக பெட்டி அருகே வந்த பொழுது கிளிக்கியது.

எங்கள் பெட்டியில் இருந்து எங்கள் முன் சென்ற பெட்டியை கிளிக்கியது.
ரம்யமான காட்சிகளில் எங்கள் புகைப்படமும் சேர்ந்து இருப்பதால் நிறைய படங்கள் பகிரமுடியலை.

மேலேயிருந்து கிளிக்கிய சிங்கப்பூர் சாலைகள்.

மாலையில் ஃப்லையரில் இருந்து சிங்கப்பூர் அழகை ரசித்த நாங்கள், விளக்கொளியில் மெரினா பே சாண்ட்ஸ்(Marina Bay Sands ) பார்க்கச் சென்றோம். 57 மாடிகள் கொண்டது. மூன்று கட்டிடங்களை இணைத்து மேலே sky park , நீச்சல் குளம் என்று அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்து பார்க்க சிங்கப்பூர் இரவு வெளிச்சத்தில் ஒரு தேவலோகமாக காட்சியளித்தது.அத்தனை அழகு.வானில் பறந்து சென்று வருவது போல் சுற்றி சுற்றி ரசித்தோம். சுற்றிலும் கண்ணாடி தடுப்பு சுவர்.அதனால் நின்றவாறும், உட்கார்ந்தும் வசதியாக அனைத்தையும் காற்று வாங்கிக் கொண்டே இதமாக கண்டுகளிக்க முடிந்தது.

மெரீனா பே சான்ட்ஸ்.

இரவு வெளிச்சத்தில் ரசித்த காட்சிகள்...


எங்கேயிருந்து பார்த்தாலும் ப்ளையர் தெரியுது பாருங்களேன்.

பின்பு சிங்கப்பூர் ஃபுட் ட்ரையலில் வாங்கிய ஸ்நாக்ஸ் & ட்ரிங்க்ஸ் ரசித்து சாப்பிட்டு விட்டு கிழே இறங்கி MRT -யில்(இரயிலில்) ஜாலியாக வீடு பின்னிரவு வந்து சேர்ந்தோம். பயணம் வந்த களைப்பு, சுற்றிப் பார்த்த களைப்பு என்ற அசதியில் நல்ல தூக்கம் கண்களை கட்டிப்போட்டது.


ஆரோக்கியமான உணவு வகைகள். மசாலாவுடன் உணவு சாப்பிட்டு பழக்கமான நமக்கு இதெல்லாம் பிடிக்குமா என்ன?
பிரசித்திபெற்ற சிங்கை உணவான டம்ப்ளிங்ஸ்.

மறுநாள் எங்களின் இரண்டாம் நாள் மிக தடபுடலாக இருக்கும் என்று அறியாமல் தயாரானோம்.


14 comments:

 1. feel like once again going to singapore. Nice pictures asiya akka

  ReplyDelete
  Replies
  1. உஸ்மான் வருகைக்கு மகிழ்ச்சி.இன்னொருமுறை சான்ஸ் கிடைத்தால் போய் வா.எனக்கும் மிகவும் பிடித்துப் போன நாடாகிவிட்டது.

   Delete
 2. ;) அருமையான பகிர்வு. அழகான படங்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வை.கோ ஐயா மிக்க நன்றி.வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 3. Replies
  1. சீனி வருகைக்கு மகிழ்ச்சி.ஒரே எழுத்தில் கருத்தை சொல்ல்யிருக்கீங்க சகோ.நன்றி.

   Delete
 4. படங்கள் அட்டகாசம்... இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

   Delete
 5. எனக்கும் சிங்கை பிடிக்கும். அழகா இருக்கு படங்கள். அருமையான பகிர்வு ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. இமா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.என் மகள் மொபைலில்,என் கேமராவில் என்று கிளிக்கிய படங்கள் ஏராளம்.இந்த ஃப்ளையர் படம், மெரினா பே சாண்ட்ஸ் படம் நிறைய இருக்கு,ஒவ்வொரு இடம் போகும் இவற்றை ஒவ்வொரு வியூவில் கிளிக்கி எக்கச்சக்காமாவிட்டது.படத்தில் எதைப் பகிர எதை விடன்னு தெரியலை இமா.

   Delete
 6. அழகிய வர்ணனை தோழி.ஜெயண்ட் வீலை பற்றி உங்கள் விவரிப்பை பார்த்ததும் இதற்காகவே சிங்கை செல்ல வேண்டும் போல் உள்ளது.கடந்த புதன் அன்று ஓணம் விடுமறையில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வி ஜி பி சென்று ஜெயண்ட் வீலில் மட்டும் மூன்று முறை சவாரி..:)

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.இது ஃபன் சிட்டி ஜெயண்ட் வீல் போல் இருக்காது அசைவே இல்லாமல் நாம் ஒரு ரூமில் இருந்து நகரை வலம் வருவது போல் இருக்கும்.City View இதில் இருந்து பார்க்கும் பொழுது அட்டகாசமாக இருக்கும்.

   Delete
 7. படங்களும் பகிர்வும் அருமை ஆசியா.

  ReplyDelete
 8. மிக்க நன்றி,மகிழ்ச்சி ராமலஷ்மி.

  ReplyDelete