Pages

Tuesday, 4 September 2012

2C

ஊர் சென்று திரும்பி வந்து அலமாரியை ஒதுங்க வைத்த பொழுது தான் அந்தக் கட்டுக்கடிதங்கள் என் கண்ணில் பட்டது. ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன நினைவுகள்.

நான் நினைத்து கூடப் பார்க்காத அந்தப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு சிறிய கதை எனலாம்.

அபுதாபியில் எங்கள் வீடு இருந்த இடம் சுற்றி பள்ளிக்கூடங்கள் வரிசையாக இருக்கும். எதிர் வீட்டு சிந்து டீச்சர், ஆசியா சும்மா தானே வீட்டில் இருக்கீங்க, எங்க ஸ்கூல் பக்கத்தில் தானே இருக்கு, வந்து சிவியை கொடுங்க, கூப்பிட்டால் வாங்க, என்றவுடன், எனக்கும் ஆசை மனதில் துளிர்விட ஆரம்பித்தது. இவரிடம் சொல்லி அனுமதி பெற்று, சிவியையும் கொடுத்து விட்டு வந்தேன், கொடுத்த ஒரு வாரத்தில் அழைப்பு வந்தது, கையும் ஓடலை, காலும் ஓடலை, ஸ்கூல் ப்ரின்சிபல் சொன்ன ஒரே வாக்கியம், உங்க குவாலிபிக்கேஷன் பிரச்சனை இல்லை, நீங்க எப்படி பிள்ளைகளை நிர்வகிக்கிறீங்க எனபதை நாங்க 15 நாட்கள் கவனித்து நீங்கள் வேலையில் தொடர்வதை முடிவு செய்து தெரிவிப்போம் என்றபொழுது என்னால் நம்ப முடியவில்லை. என்னை முதலில் பாடம் எடுக்க சொன்னது 4, 5 வகுப்புகளுக்கு Social Studies ,பெரிய பிள்ளைங்க தானே சமாளித்து விடலாம்னு சரி என்று வகுப்பறைக்கு சென்ற பின்பு தானே தெரிந்தது ஆசிரியப்பணி எத்தனை சிரமமானது என்று. காலையில் 7.50 மதியம் 1.50 வரை பள்ளி நேரம். எங்க வீட்டில் பிள்ளைங்க காலை 6.30 மணிக்கும், அவர் 6.45 க்கும் கிளம்பிடுவாங்க, மதியம் என் பிள்ளைகள் திரும்ப 2.15 மணிக்கு வந்ததால் எனக்கு வேலைக்கு போய் வந்தது இலகுவாகவே தெரிந்தது, பள்ளிக்கூடமும் ஐந்து நிமிட வாக்கிங் தான்.

என் பணியில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு தொடரலாம்னு பச்சைக் கொடியை காட்டினாங்க. நான் ஆசிரியையாக மகிழ்ச்சியாகவே பவனி வந்தேன். மூன்று மாதம் கழித்து என்னை அழைத்து, நீங்க இப்படியே தொடர்வது பிடித்திருக்கிறதா? என்று கேட்ட பொழுது, அறிவியல் பாடம் எடுக்கவே விருப்பம் என்று தெரிவித்தேன், அவர்களும் என்னை 2C வகுப்பாசிரியையாக போட்டு 2,3,4 வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் படி சொன்ன பொழுது மிக சந்தோஷமாக இருந்தது. விபரத்தை சிந்துவிடம் சொன்ன பொழுது, 2 C யா? அது வாலுங்க உள்ள வகுப்பாச்சேன்னு சொன்னாங்க, நான் சமாளித்து விடுவேன் என்று உள்ளே நுழைந்த பின்பு தான் தெரிந்தது அந்த குழந்தைகளின் சுட்டித்தனம், தினம் ஒரு பிரச்சனை நான் ப்ரின்சிபல் ரூமிற்கு செல்லாத நாளே இல்லை எனலாம். ஆனாலும் ஆண்டு இறுதியில் இரண்டாம் வகுப்பில் 2C தான் OVER ALL PROFICIENCY AWARD வாங்கி என்னை பெருமைபடுத்தினார்கள்.


இந்த மடல்கள்
2c மாணவ மாணவிகள் எனக்கு அன்பாக தந்தது. என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்களை எழுதி ஆச்சரியப்படுத்தியிருந்தார்கள்.


வருட இறுதியில் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அன்பாய் தந்த மடல் இது.

அந்தக் குழந்தைகள் எனக்கு எழுதிய அன்பு மடல்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் இந்த ஆசிரியர் தினத்தில் பெருமைப்படுகிறேன். என்னிடம் அந்த வயதில் அவர்கள் எதிர்பார்த்தது ஒரு தாயாக தோழியாக பழக வேண்டும் என்பதைத் தான், அதனைப் புரிந்து செயல்பட்டதால் எனக்கும் வெற்றி கிடைத்தது. அந்தக் குழந்தைகள் அன்பில், அந்த வருடம் ( 06-07) திக்கு முக்காடிப் போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

15 comments:

 1. தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. ஒரு ஆசிரியையாக இருந்து குழந்தைகளிடம் கிடைக்கும் அன்பு ஒரு பாக்கியம் தான்.ஆசியா மிஸ் அன்பான மிஸ் ஆக இருந்திருப்பீங்கன்னு தெரியும்..இனியும் நீங்கள் ஆசிரியை பணியை தொடர்ந்து நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி தளிகா.யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் தளிகா.விரைவில் நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

   Delete
 3. படங்களும் பகிர்வு நெகிழ்ச்சியை தந்தது.வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி ஸாதிகா.கருத்திற்கு மகிழ்ச்சி.

   Delete
 4. //என்னிடம் அந்த வயதில் அவர்கள் எதிர்பார்த்தது ஒரு தாயாக தோழியாக பழக வேண்டும் என்பதைத் தான், அதனைப் புரிந்து செயல்பட்டதால் எனக்கும் வெற்றி கிடைத்தது. // ;)))))

  அழகான படைப்பு. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வை.கோ சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete
 5. அன்பான அருமையானா டீச்சர் நீங்க இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. //அன்பான அருமையானா டீச்சர் நீங்க இல்லையா?//

   எங்கள் வீட்டில் இந்த கடிதங்களை உம்மாக்கு வந்த லவ்லெட்டர்ஸ் என்று தான் எல்லாரும் செல்லமாக சொல்லுவாங்க..அவ்வளவு அன்புன்னா அன்பு..போங்க ஜலீலா உங்களுக்கு ரொம்ப குறும்பு.

   Delete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் நன்றி தனபாலன் சார்.பார்த்து கருத்தும் தெரிவித்தாயிற்று.மிக்க மகிழ்ச்சி.

   Delete
 7. அன்பின் ஆசியா ஓமர் - மலரும் நினைவுகள் அருமை - அசைபோட்டு ஆனந்தித்து பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. மிக்க நன்றி சீனா சார்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. அருமையான டீச்சர் நீங்கள்.நல்ல பகிர்வு.

  ReplyDelete