Pages

Sunday, 9 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி-3 - மழையோ அன்பு மழை!


எங்களின் இரண்டாம் நாள் சிங்கப்பூரில் இனிதே விடிந்தது. அன்றைய நாள் ப்ரோகிராம் படி City Sight Seeing , Zoo, Night Safari என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதில் சிறு மாற்றம் வந்தது, என் கணவரின் பள்ளிக்கூட கடலூர் நண்பர் அன்றைய நாளை எங்களோடு கழிக்க விரும்பி மதியம் விருந்திற்கு அழைத்திருந்தார். சரி என்று சிட்டி டூர் முடித்து விட்டு அவர்கள் வீடு செல்லலாம் என்று ஜூவை ஒத்தி வைத்தோம்.

வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது எப்ப வேண்டுமானாலும் மழை பெய்யும், ஆளுக்கொரு குடை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அத்துடன் இரயில்,பஸ் பயணத்திற்கான கார்டும் தந்ததால் சிங்கப்பூரில் எங்கள் போக்குவரத்து மிக இலகுவாக சிரமமில்லாமல் இருந்தது.கிளம்பும் பொழுதே சிலு சிலுவென்று அழகான தூறல். ரசித்தவாறு பஸ்ஸில் சென்று சிட்டி டூர் கிளம்பும் ஸ்பாட்டை அடைந்தோம்.

அங்கு இருந்த ரெஸ்டாரண்ட் யாகுன் காயாடோஸ்ட் மிகப் பிரசித்தம், அங்கு கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்தோம். அங்குள்ள காயா டோஸ்ட் ,ஹார்லிக்ஸ் ஃப்ராஸ்டி மிக அருமை.ஊர் வரும் வரை மூன்று முறை அதனை ருசித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.வீட்டில் வந்து இந்த இரண்டு ரெசிப்பியும் ட்ரை செய்தும் பார்த்தாச்சு.அந்தளவிற்கு வர நம்ம என்ன யாகுன்னா என்ன?


அங்கிருந்து கிளம்பும் பொழுது மழை விட்டிருந்தது. எங்களோடு பயணிக்க அன்று ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர் மட்டுமே இருந்தனர். மொத்தம் ஆறு பேரே உள்ள பஸ் டிரைவர் ( மிக வயதானவர்) வர, நாங்களும் அவரைத் தொடர்ந்து சென்றோம். டிரைவர் ஏறி அமர்ந்தார், நாங்கள் பின்னால் அவர் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடித்தான் சென்றோம். நாங்கள் ஏறினோமா உட்கார்ந்தோமான்னு கூட கவனிக்காமல் வண்டியை எடுத்தார். பஸ்ஸில் மேல் தளத்தில் திறந்த வெளியில் அமரலாம் என்று படியேறும் பொழுதே பஸ் நகரத் தொடங்கி விட்டது. சமாளித்து சென்று விரைவாக அமர்ந்தோம். வயதான அந்த ட்ரைவர் அத்தனை சுறு சுறுப்பு.

ஏறி மேல் தளத்திற்கு சென்று திறந்த வெளியில் அமர்ந்தால் மழை தூர ஆரம்பித்து விட்டது.

நல்ல மழையுடன் ஊர் சுற்றல்.அதுவும் ஒரு செம அனுபவம். திரும்ப பலமுறை நகரை வலம் வந்தது வேறு விஷ்யம்.

பஸ் நகர ஆரம்பிக்கவும் மழை நன்றாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. கைடு உதவியுடன் அனைத்து இடங்களையும் கண்டு களித்தோம். கிட்டதட்ட ஒரு மணி நேரம் நகரை வலம் வந்திருப்போம். சிங்கப்பூர் ஃப்ளையரில் இருந்து கிளம்பி வழியில் மெரினா பே சாண்ட்ஸ், எஸ்ப்லானட் மால்,மெர்லைன்( அதிர்ஷட சின்னம்) பார்க், ஃபெஸ்டிவல் மார்க்கெட், கிரீதா ஐயர் ரோடு- சைனா டவுண், புத்தர் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜாமியா மஸ்ஜித், மாடர்ன் சிங்கப்பூர்கிளார்க் குவெ , பொட்டானிக்கல் கார்டன், ஆர்ச்சட் ரோடு, லிட்டில் இந்தியா, ரஃபில்ஸ் ஹோட்டல்,சன் டெக் சிட்டி என்று ஒரு வலம் வந்து திரும்ப கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம்.வழியில் சில வான் உயரக் கட்டிடங்கள் பார்த்தாலும் எங்களுக்கு பிரமிப்பாக இல்லை, ஏனெனில் துபாய், அபுதாபியில் வாயைப் பிளந்து ஆன்னு பார்க்கும் வானுயர கட்டிடங்களின் அணிவகுப்பு இருக்கும்.

நீங்களும் அப்படியே வீடியோவில் சிங்கப்பூரை சுற்றி பாருங்க, எல்லா முக்கியமான இடங்களும் இதில் பகிர்ந்திருக்காங்க.
நானும் இவர் நாங்கள் எடுத்த வீடியோவை எடிட் செய்து தருவார், போடலாம் என்று இருந்தேன், அது பெரிய வேலை இப்ப முடியாது என்றதால் இந்தப் பகிரல். எனக்கும் நான் பார்த்த இடங்கள் மறந்து போகும் முன் பதிவு செய்தாக வேண்டுமே!

மதியம் விருந்திற்கு அவரின் நண்பர் வீடு சோச்சுகாங் (Chou Cho Kang- Residential Area) பகுதிக்கு போக வேண்டும். டாக்ஸி பிடித்து சென்றோம். மீண்டும் நகர் உலா. ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் அதன் பசுமையும் தூய்மையும் சலிக்காது. தூசி இல்லை, சுத்தமாக இருக்கு,மக்களின் சுறு சுறுப்பு, இது தான் எனக்கு சிங்கப்பூரில் மிகவும் பிடித்த விஷயம். கார்களில் பறப்பதைக் காட்டிலும் மக்கள் இங்கு சைக்கிள்களில் பறக்கிறார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வசதி மிக அருமை. எங்கும் எதிலும் ஆட்டோமேஷன். அரைமணி நேரத்தில் சோச்சுகாங் போய் சேர்ந்தோம். இயற்கை மழையில் நனைந்தது போதாது என்று அங்கு அன்பு மழை. எங்களுக்காக ஒரு கெட்டுகெதர் ஏற்பாடு செய்திருந்தாங்க. மிக அருமையான விருந்து. அப்புறம் பக்கத்தில் இருந்த நண்பரின் சகோதரர் வீட்டிற்கு சென்றோம். அங்கு சென்று இளைப்பாறிவிட்டு மாலையும் விருந்தோம்பல் முடிந்து வெளியே கிளம்பினோம்.

விருந்து சாப்பிட்டு முடிந்தவுடன் தான் நினைவு வந்தது,அவசரமாக கிளிக்கியது.


ஏழு மணிக்கு மேல் தான் நைட் சஃபாரி, சரி அதுவரை லிட்டில் இந்தியா சென்று வரலாம் என்று முடிவெடுத்து, அங்கே சென்றோம். அப்படியே ஒரு கண்ணோட்டம், நம்ம ஊர் உணவகங்கள், முஸ்தபா ஷாப்பிங் செண்டர் என்று ஒரு உலா, இரவு உணவையும் நம்ம ஊர் உணவகத்தில் பார்சல் வாங்கி விட்டு நைட் சஃபாரிக்குப் புறப்பட்டோம். அன்று முழுவதும் நண்பரின் அன்பு கவனிப்பில் திக்குமுக்காடிப் போனோம்.

கியூவில் நின்று டிக்கட் வாங்கி, பின்பு அங்கும் அவர்களுடன் ஒரு ரவுண்டடித்து விட்டு,விண்டோ ஷாப்பிங் சென்றோம். ட்ராம் வரவும் நாங்கள் ஏறி அமர்ந்தால், கும்மிருட்டு, கிளம்பினோம்...

16 comments:

 1. சிங்கப்பூர் பயணத்தில் தங்களுடன் நாங்களும் அன்பு மழையில் நனைந்தோம். அருமையான காட்சிகள். விளக்கங்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. வை.கோ சார் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

   Delete
 2. சிங்கப்பூர் பயணம் உங்களோடு சேர்ந்து நாங்களும் சுற்றுவது போல் உள்ளது.பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆதி நலமா? பார்த்து நாளாகிறதே!உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.வருகைக்கு நன்றி.

   Delete
  2. oasiyilaeyae engalaiyum ungaludan azhaithu sendramaikku mikka nandri dea
   r aasiya.............

   Delete
  3. //oasiyilaeyae engalaiyum ungaludan azhaithu sendramaikku mikka nandri dear aasiya.............//

   அக்கா,வந்து ரசித்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி.

   Delete
 3. படங்கள் அருமை... இனிய அனுபவ பகிர்வு... சந்தோசம்... நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 4. அனுபவப் பகிர்வு... படங்களுடன் அழகு அக்கா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 5. இதை பார்க்க பார்க்க நாங்க் போன கேபிள் கார், அண்டர் வாட்டர் வோல்ட்,எம் ஆர் டி , எல்லாம் நினைவுக்கு வருது.

  மறுபடியும் போகனுமுன்னு தோனுது

  ReplyDelete
  Replies
  1. ஜலீலா வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.எங்களுக்கும் கூட இன்னொரு முறை போகும் அளவு மிகவும் பிடித்து விட்டது.

   Delete
 6. மிக்க நன்றி வருகைக்கு ராமலஷ்மி!

  ReplyDelete
 7. படித்து எங்கள் அனுபவங்களை இரைமீட்டுக் கொண்டேன்.

  ReplyDelete
 8. வருகைக்கு மகிழ்ச்சி இமா,சிறிய அழகிய நாடு அல்லவா?இது எனக்கு ஒரு டைரி குறிப்பு போலத்தான் இமா.

  ReplyDelete