Pages

Sunday, 16 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் / பகுதி -4 -ஒளியும் ஒலியும்

ஆங்.. எதில் விட்டேன், நைட் சஃபாரியில் ட்ராமில் ஏறி உட்கார்ந்தோமா? ட்ராம் கிளம்பியது கேமராவில் ஃப்லாஷ்க்கு தடை, அதனால் படம் எடுக்கும் வேலை இல்லை.எனவே வீடியோவை ஆன் செய்தோம், இரவில் வனவிலங்குகளை மரங்கள் அடர்ந்த காட்டில் சென்று பார்ப்பது நமக்கு மிகவும் பிரமிப்பு,குழந்தைகளுக்குப் பயம். இயற்கையாக இரவில் வனவிலங்குகள் உள்ள காடு வழியாக பயணம் செய்தால் எவ்வாறு ஒலி,ஒளி இருக்குமோ அப்படியே அச்சுறுத்தும்படி இருந்தது.

ட்ராம் ஸ்டேஷனில் ட்ராம் வந்து காலியாக நின்ற பொழுது...
ட்ராமில் பதிவு செய்யப் பட்ட ஒலி நாடாவில் கைடு விளக்கம் தர மெதுவாக ட்ராம் நம்மை அழைத்துச் சென்றது. இடையில் சலசலத்து ஓடும் நீரோடைகள், சில்வண்டுகளின் ஓசைகள், தவளை சத்தம், விலங்குகளின் உருமல்கள் என்று அனைத்து அனுபவமும் நம்மை எதிர்கொண்டது. இடையில் இறங்கி கால்நடையாக வனத்திற்குள் நடந்தும் விலங்குகளைப் பார்க்கலாம். நாங்கள் சென்றது சனிக்கிழமையாதலால் வார இறுதி விடுமுறைக் கூட்டம் நிறைய இருந்தது எனவே வரிசையில் நின்று ட்ராமில் ஏறுவதற்கே நேரம் ஆகிவிட்டது, காத்திருந்த நேரத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். அத்துடன் விலங்குகளின் லைவ் ஷோ (இரவு9.30 மணிக்கு) பார்க்க வேண்டும், ஆதி வாசிகள் நெருப்போடு விளையாடும் நடனமும் காண வேண்டுமே என்ற ஆவலில், ட்ராமில் இருந்து இறங்காமலேயே வனத்தை ட்ராமிலேயே சுற்றி அனைத்து விலங்குகளயும் கண்டு ரசித்தோம்.
அங்கிருந்து நேரே லைவ் ஷோ. முதல் வரிசையில் உட்கார இடம் கிடைத்தது. ஒவ்வொரு விலங்குகளூம் இங்கும் அங்கும் ஓடியும் விளையாடியும், வித்தைகள் காட்டியும் மகிழ்வித்தது. மேகி என்ற மலைப்பாம்பு தீடீரென்று காணாமல் போய் பார்வையாளர்கள் மத்தியில் வந்து விட்டதாக பீதியை கிளப்பி, பின்பு அந்த பெரிய பாம்பை மக்கள் மத்தியில் இருந்து பிடித்து வந்து, பார்வையாளர் ஒருவரை அழைத்து அவர் தோளில் போட்டு விட்டு விளக்கெல்லாம் அணைத்து, அனைவரும் மேடையில் இருந்து மறைந்த காட்சி பீதியை கிளப்பி பெருத்த கரகோஷத்தையும் ’’வும் போட வைத்தது.
ஷோ முடியவும் அடுத்து, மட மடவென்று ஆதிவாசிகள் நடனம் காண விரைந்தோம். கூட்டம் நிரம்பிவிட்டது எனவே பக்கவாட்டில் நின்றவாறே கண்டு களித்தோம். நைட் சஃபாரியின் ஹைலைட் இந்த ஷோ எனலாம்.பின் வரும் வீடியோவில் சில கிளிப்ஸ் இருக்கு.
அந்த பிந்திய இரவு வேளையில் பலர் கூட்டம் அலை மோதும் உணவு விடுதிகளில், ஃபிஷ் ஸ்பா என்றும், ஷாப்பிங் என்றும் பிஸியாக இருந்தார்கள் .டாக்ஸிக்காக பலர் வரிசையில் காத்திருந்தார்கள். நாங்கள் மறுநாளும் சுற்ற வேண்டியதிருந்ததால் கிளம்பிவிட்டோம்.
என் கணவரின் நண்பர் அந்த இரவு வேளயிலும் அவர் காரில் எஙகள் இருப்பிடத்தில் கொண்டு விட்டு விட்டு சந்தோஷமாக அடுத்த சந்திப்பை குறித்து விட்டுச் சென்றார்கள்.

வீடியோ எடுத்ததைப் பகிரலாம் என்று எடிட் செய்ய ஆரம்பித்தால் அத்தனையும் கும்மிருட்டாகாவே இருந்தது, எப்படியிருந்தாலும் சரி என்று தான் இந்த சின்னப் பகிர்வு. நாங்கள் பார்த்ததை எல்லாம் பகிர முடியாவிட்டாலும் இந்தப் பகிர்வைப் பாருங்க.
விரைவில் சந்திப்போம்...!
முந்திய பகிர்வுகளை வாசிக்க கிளிக்கவும்.

பகுதி - 1


16 comments:

 1. //ஆங்.. எதில் விட்டேன், // ;)))))

  ஆரம்பத்திலேயே நல்ல நகைச்சுவை வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. வை.கோ.சார் தொடர் எழுதி ஒரு வாரம் ஆகிவிட்டது இல்லையா? அதான்..விரைவில் முடிக்க வேண்டும்,இன்னும் மூன்று நாட்கள் பாக்கியிருக்கே.மிக்க மகிழ்ச்சி.

   Delete
 2. //என் கணவரின் நண்பர் அந்த இரவு வேளயிலும் அவர் காரில் எஙகள் இருப்பிடத்தில் கொண்டு விட்டு விட்டு சந்தோஷமாக அடுத்த சந்திப்பை குறித்து விட்டுச் சென்றார்கள்.//

  இதுபோன்ற நண்பர்கள் இருந்தால் வெளிநாடு செல்லும் நமக்கு மிகவும் செளகர்யமாகவே இருக்கும்.

  இந்த தங்கள் சிங்கப்பூர் பயணக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து வாசித்து விட்டு கருத்திட்டு ஊக்கபபடுத்துவதற்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

   Delete
 3. கூடவே அழைத்து சென்று காட்டியது போல் உணர்வை எற்படுத்துகின்றது உங்கள் வரிகளில்,

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஸாதிகா.

   Delete
 4. தங்களின் பயண பகிர்வு சுவாரஸ்யமாக உள்ளது... தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

   Delete
 5. அருமையான பயணம். பாம்பு பீதி படிக்கும் எங்களையும் கலவரப்படுத்தி விட்டது....:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை2தில்லி.நாங்களும் பயந்தே விட்டோம்.

   Delete
 6. ரொம்ப நல்ல இருந்தது. பாம்ப பிள்ள மாதிரி தூக்கிட்டு வந்தாஙக்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜலீலா கருத்திற்கு மகிழ்ச்சி.

   Delete
 7. லைவ் ஷோ நாங்கள் பார்க்கவில்லை. பகிர்வு அருமை ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலஷ்மி.லைவ் ஷோ பார்க்க சுவாரசியமாக இருந்தது.

   Delete
 8. குட்டீஸ் கூட போனதால் நிறைய விஷயம் உங்களை ஈர்த்திருக்கிறது. பார்க்காத விடயங்களெல்லாம் உங்கள் பகிர்வுகள் மூலம் பார்க்க முடிகிறது. நன்றி.

  ReplyDelete
 9. நன்றி இமா.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,

  ReplyDelete