Pages

Monday, 24 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி -5 - அடேங்கப்பா...!


மூன்றாம் நாள் காலை வழக்கம் போல் விரைவாக செண்டோசா தீவு போவதற்கு ரெடியானோம். காலையில் தம்பி வீட்டில் அருமையான வெஜ் சாலட் மிக்ஸ் வித் டோஸ்டட் ப்ரெட் ரெடியாக இருந்தது, யம்மி. வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் MRT  ஸ்டேஷன் இருந்தது. ஏற்கனவே எங்களிடம் இரயில், பஸ் பாஸ் அவர்கள் தந்து இருந்ததால் செண்டோசா செல்வதற்காக ஹார்பர் ஃப்ரண்ட் என்ற ஸ்டேஷன் சென்றோம்.


தம்பி வீட்டில் சாப்பிட்ட மெக்டொனால்ட் ப்ரேக்ஃபாஸ்ட் உங்களுக்காக..என் மகளுக்கு பிடித்த மாதிரி தினமும் ப்ரேக்ஃபாஸ்ட் ..ஒவ்வொரு நாளும் எங்களை பார்த்து பார்த்து கவனித்ததை மறக்க முடியவில்லை ...:)))))) ..
செண்டோசா ஸ்டெஷனில் இருந்து மோனோ இரயிலில் ,மெர்லையன் ஸ்பாட், கேபிள் கார் ரைடும், அண்டர்வாட்டர் வேர்ல்ட் இன்னும் பல இயற்கை காட்சிகளும் இந்த வீடியோவில் இருக்கு. எத்தனை அழகாக நம்மை தமிழில் வரவேற்கிறாங்க பாருங்க..
ஆங்காங்கு இப்படி பலகை வைத்து நமக்கு மலாய் சொல்லி தராங்க.

அங்கு  செண்டோசா டிக்கெட் கவுண்டர் போய் நாங்கள் முதலில் செண்டோசா மோனோ ரெயிலுக்கு டிக்கெட்டும், பின்பு SONG OF THE SEA  டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டோம்.(அதற்கு தீவில் டிக்கெட் கிடைக்க சிரமமாக இருக்கும் என்பதால்) மற்றவற்றிற்கு செண்டோசா தீவில் சென்று  வாங்கிக் கொள்ளலாமாம், டிக்கெட் கவுண்டர் பக்கம் இருக்கும் FOOD REPUBLIC – கில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டோம்.

மோனோ ரெயிலில் செண்டோசா தீவின் அழகை ரசித்துக் கொண்டே  போய் பிரமாண்டமான மெர்லையன் சிலை (வீடியோவில்,முதல் புகைப்படத்தில் பார்த்திருப்பீங்க) பக்கம் இறங்கிக் கொண்டோம்.அங்கு நீர்வீழ்ச்சிகளின் அழகை பார்த்துக் கொண்டே நிற்கலாம். செண்டோசா தீவில் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கு, இதனை மூன்று பகுதியாக பிரித்திருக்கிறார்கள், ஒவ்வொரு பகுதியையும் சுற்றி பார்க்க திறந்த பஸ் ஓடிக்கொண்டேயிருக்கு. பஸ்ஸில் ஏறி சுற்றி பார்க்க கியூவில் நின்று ஏற வேண்டும், நடந்து நடந்து சுற்றி பார்ப்பது சிரமம் என்பதால் அங்கங்கு பஸ்ஸில் ஏறியும் சுற்றி பார்த்தோம். 

முதலில் கேபிள் காருக்கு டிக்கட் வாங்கி அதனில் ஏறி சுற்றி விட்டு வந்தோம், மிக அழகாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. கேபிள் காரில் ஒரு பக்கம் கிளம்பி மறுபுறம் இறங்கி கொஞ்சம் ரிஃப்ரெஷ் செய்யலாம்.ஃப்ரெஷ் ஜூஸ் தந்தார்கள் .திரும்ப ஏறிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். 

4டி மேஜிக்ஸ் பார்த்தோம். த்ரில்லாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. முடித்து வெளியே வந்தோம், மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே ரெஸ்டாரண்ட் இருந்தது, அந்த வேளையில் மதிய உணவை முடித்து விட்டு,ஒரு ட்ராம் ரைட் போனோம். நேச்சர் வாக் போகும் பொழுது மழையும் தூறலும் ஆஹா.கையில் குடையிருந்ததால் பிடித்துக் கொண்டு அட்டகாசம் தான். பட்டர்ஃப்லை பார்க்,அப்படியே நடந்து சென்றால் அழகான வண்ண வண்ண கிளிகள் கையில் வைத்து படம் எடுக்க 20 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்தால் போட்டோ எடுக்கலாம். இது மாதிரி ஆங்காங்கு கேமரா வைத்துக் கொண்டு ஆட்களைப் பார்க்கலாம். 10 அல்லது 20 சிங்கப்பூர் டாலர் கொடுத்தால் கையில் சுடச் சுட விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் புகைப்படங்கள் எடுத்து தருவார்கள்.

இந்த வீடியோ டால்ஃபின் ஷோவின் போது எடுத்தது. நீங்கள் முழுதும் பார்த்த திருப்தி கிடைக்கும்.


டால்ஃபின் ஷோவில் இந்த ஷீல்ஸ் செய்த அட்டகாசத்தை வீடியோவில் பார்த்திருப்பீங்க..

மதியம் திட்டப்படி அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்பின் ஷோ பார்த்து மகிழ்ந்தோம். துபாய் அட்லாண்டிஸ் அக்வேரியம் ஏற்கனவே பார்த்திருந்ததால் எங்களுக்கு சிங்கப்பூர் அண்டர் வாட்டர் வேர்ல்ட் சுமாராகத் தான் தெரிந்தது. அடுத்து சிலோசா பீச் பக்கம் போனோம், அங்கும் என்னால் நடக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் ஒப்பன் பஸ்ஸில் பீச் ஓரம் ஒரு ரைடு. மாலை வேளையில் காற்று முகத்தில் அடிக்க பஸ் வேகமாக போகும் பொழுது கடற்கரையின் அழகு மனதிற்கு மிக இதமாக இருந்தது.

Song Of the Sea பார்ப்பதற்காக விரைந்தோம். கூட்டம் வேறு அலைமோதியது..இருட்டும் வரை காத்திருந்தோம்...
அடுத்தப் பகிர்வில்...


14 comments:

 1. Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி சகோ. சீனி.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 2. அருமையான படங்களுடன் அழகாக, அழகான சிங்கப்பூரினை எங்களுக்கும் சுற்றிக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கும் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.மகிழ்ச்சி.

   Delete
 3. படங்களுடன் பகிர்வு அருமை...

  மிக்க நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார், நான் தான் நன்றி சொல்ல வேண்டும்,வந்தது மட்டுமல்லாமல் கருத்து சொன்னமைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

   Delete
 4. அப்படியே நாங்க போய் வந்த இடமெல்லாம் ஒரு முறை ரீகால் ஆகிவிட்டது
  என் பிள்ளாகில் என் பிள்ளை க்ள் போட்டோ அது கேபுள் காரில் எடுத்தது தான், அது ரொம்ப எனக்கு ரொம்ப பிடிச்ச போட்டோ.
  செந்தோஷா கேபுள் காரெல்லாம் மறுபடி போய் பார்க்கனும்

  நாங்கள் எங்க சொந்த காரங்க வீட்டில் தங்கி இருந்தோம். சிங்கப்பூர் பயணம் 10நாளும் சூப்பராக இருந்தது.

  ReplyDelete
 5. நன்றி ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.செண்டோசா பார்ப்பத்ற்கு மட்டும் மூன்று நாட்கள் முழுதாக தேவைப்படும் போல,அவ்வளவு இருக்கு.நாங்கள் ஐந்து நாட்கள் மட்டும் சிங்கப்பூர் போனதால் இது ஒருநாள், யுனிவர்சல் ஸ்டுடியோ ஒருநாள் என்று தான் ப்ளான் செய்ய முடிந்தது.

  ReplyDelete
 6. வீடியோ அருமை ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலஷ்மி.வீடியோ எடிட் செய்து போடுவதற்கு தான் மிகவும் சிரமம்.நாங்க இல்லாமல்,ஆடியோ எடிட் செய்ய என்று வேலை அதிகமாகிவிட்டது.
   ஆனாலும் பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி.

   Delete
 7. பயணம் அருமையாக இருந்திருக்கும். படிக்கும் எங்களுக்கே உற்சாகமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி கோவை2தில்லி.

   Delete
 8. எனக்கும் திரும்பப் போன மாதிரி இருக்கு ஆசியா. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ஆமாம் இமா.உங்க சிங்கப்பூர் போட்டோஸ் அங்கே பார்த்தேன்.அருமை

  ReplyDelete