Pages

Friday, 28 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி -5 -தொடர்ச்சி

முற்பகுதி பார்க்க இங்கே கிளிக்கவும்.


Song of the Sea  பார்க்கும் நேரம் நெருங்கியதால் அதற்கு விரைந்தோம், சிறிது காத்திருந்தோம், கூட்டம் நிரம்பி வழிந்தது, இருட்ட ஆரம்பிக்கவும் ஷோ ஆரம்பித்தது. மிகவும் ரசித்து மகிழ்ந்தோம்.

நாங்கள் காத்திருந்த பொழுது கிளிக்கிய படம் இது, இந்த இடத்தில் அப்படி என்னதான் அதிசயமான ஷோ என்ற எங்களுடைய எதிர்பார்ப்பு  வீண் போகவில்லை.
நாங்கள் எடுத்த வீடியோவை கஷ்டப்பட்டு எடிட் செய்து எத்தனை முறை முயன்றும் கூகிளில் அப்லோட் செய்ய முடியலை  இந்த தடவை, எனவே கீழ்கண்ட யுடியூப் லின்க்கை கண்டு மகிழுங்க..நிச்சயம் முழுவதும் பாருங்க..வித்தியாசமான  மியூசிகல் ஃபவுண்டெய்ன் ஷோ. உலகத்திலேயே இந்த கடற்கரையில் மட்டும் தான் நிரந்தரமாக பல மில்லியன் டாலர் செலவில்  ஷோவை பயணிகளைக் கவருவதற்காக அமைத்திருக்கிறார்கள். இதில் லேசர், பய்ரோ டெக்னிக்ஸ், வாட்டர் ஜெட்ஸ், ப்லேம்ஸ், அனிமேஷன், லைவ் மியூசிக் என்று அசத்தலாக இருந்தது. கண்கொட்டாமல் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு நிகழ்வு.
ஷோ முடித்து விட்டு அப்படியே மெதுவாக நடந்து வந்து மோனோ ரெயில் ஏறி மீண்டும் ஹார்பர் ஃப்ரெண்ட் வந்தடைந்தோம்.அங்கு எங்களுக்கு பிடித்த டோஸ்ட் பாக்ஸ் ரெஸ்டாரண்டில் கொஞ்சம் அமர்ந்து ரெஃப்ரெஷ் செய்து விட்டு அப்படியே ஃபுட் ரிபப்ளிக்கில் அவரவருக்கு பிடித்தத்தை வாங்கி இரவு உணவை முடித்துக் கொண்டோம்.

ஃபுட் ரிபப்ளிக்கில்..ப்ரான் ஃப்ரை,டோஃபு ஃப்ரிட்டர்ஸ் அருமை..

டோஸ்ட் பாக்ஸ் ரெஸ்டாரண்ட்டில் டீ, ப்ரெட் டோஸ்ட்  நூடுல்ஸ் வகைகள் நல்லாயிருந்தது.

 ஆரோக்கியமான சைனீஸ் சிக்கன் ஃப்ரைட் நூடுல்ஸ்- வேக வைத்த கீரை, சிக்கன், வேக வைத்த நூடுல்ஸ் ..நமக்கு காரம் தேவை என்றால் தேவைக்கு சேர்த்து கொள்ள கார்லிக் சில்லி தொக்கு (சுவை அபாரம்) சில்லி சாஸ்,சோயா சாஸ், சிக்கன் கிளியர் சூப்போடு தருகிறார்கள் (ஒன்லி 6 சிங்கப்பூர் வெள்ளி தான்..


டோஸ்ட் பாக்ஸில் வேலை செய்யும் இந்த தாத்தாவிற்கு 80 வயதிற்கும் மேல் இருக்கும், அந்த வயதிலும் தட்டு கழுவி டேபிள் சுத்தம் செய்து கொண்டிருந்தார். நாங்கள்  சென்ற மூன்று முறையும் அவரைப் பார்த்தோம். சரி அவருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்கலாம் என்று 5 வெள்ளி கொடுத்தோம், அவர் வாங்க மறுத்து போட்டோவிற்கு மட்டும் போஸ் கொடுத்தார்.ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து  மீண்டும் எம் ஆர் டியில் செங்காங் வந்தடைந்தோம். மறுநாள் செண்டோசா தீவில் இருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு போகும் திட்டம் இருந்ததால் எப்படா வீடு வந்து சேர்வோம், கண் அயரலாம் என்று வந்த எங்களை நாங்கள் வரும் வரை தூங்காமல் காத்திருந்த குட்டீஸைப் பார்த்தவுடன்  களைப்பெல்லாம் பறந்து விட்டது, அவர்களோடு சிறிது நேரம் கழித்து விட்டு கண்ணை மூடியது தான் தெரியும், அப்படியொரு நிம்மதியான தூக்கம் கண்களைத் தழுவியது...12 comments:

 1. அங்கங்கே வரும் அழகிய உருவங்கள்... (கண்ணொளி) அந்த வியப்பை விட 80 வயதிற்கு மேலும் வேலை செய்கிறார் என்பது தான் வியப்பு...!

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் உற்சாகமான கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. அருமையான ஷோ... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் நேரத்தை செலவு செய்து ஷோவை கண்டு களித்து கருத்தும் தெரிவித்த கோவை2தில்லி(ஆதிக்கு) மிக்க நன்றி,மகிழ்ச்சி.

   Delete
 3. அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் படங்களுடன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா.

   Delete
 4. //சரி அவருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்கலாம் என்று 5 வெள்ளி கொடுத்தோம், அவர் வாங்க மறுத்து போட்டோவிற்கு மட்டும் போஸ் கொடுத்தார்.ஆச்சரியமாக இருந்தது.//

  இப்படியும் சிலர் உலகில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆச்சர்யம் ஆனாலும் உண்மை தான். ;)

  பதிவு அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  vgk

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ சார்.ஜப்பானியர்கள் மாதிரியே சீனர்களும் எந்த வயதிலும் நல்ல சுறு சுறுப்பாய் உழைக்க கூடியவர்களாய் தெரிந்தார்கள்.

   Delete
 5. அருமையான பகிர்வு...
  அழகான காணொளி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 6. இந்த இடுகை சிங்கப்பூரிலிருந்தே படித்தேன். அப்போ கருத்துச் சொல்ல முடியவில்லை. பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இமா..!

   Delete