Pages

Wednesday, 10 October 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி - 6- கொண்டாட்டம் கும்மாளம் !


நான்காம் நாள் அதிகாலை சுறுசுறுப்பாக எழுந்து திட்டமிட்டபடியே யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு கிளம்பிச் சென்றோம். ஆன்லைனில் இரண்டு வாரம் முன்பே டிக்கெட் புக் செய்திருந்தோம். டிக்கெட் புக் செய்யும் பொழுது எக்ஸ்ப்ரஸ் பாஸ் வாங்கி விடுங்கள், வரிசையில் காத்திருக்காமல் நமக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தான், தனியாக ஒரு லைனில் விரைவாக சென்று மடமடவென்று அனைத்து ஃபன் ட்ரைவ், ஷோக்களையும் கவர் செய்ய வசதியாக இருக்கும்.. என்ன எக்ஸ்ட்ரா 30 டாலர் கொடுக்க வேண்டும் அவ்வளவே ! சென்டோசா போனது போலவே ஹார்பர் ஃப்ரெண்ட்  சென்று, செண்டோசா ஸ்டேஷனில் மோனோ ரெயிலில் போய், வாட்டர் ஃப்ரண்ட் ஸ்டேஷனில் இறங்கி யுனிவர்சல் ஸ்டுடியோ சென்றோம்.. கிட்டதட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து இருந்தனர். பிரம்மாண்டமாக இருந்தது. 

வீடியோ பகிர்வு உங்களுக்காக...

யுனிவர்சல் ஸ்டுடியோ ஹாலிவுட், மடகாஸ்கர், ஃபார் ஃபார் அவே, தி லாஸ்ட் வேர்ல்ட், தி ஏன்சியண்ட் ஈஜிப்ட், சைஃபை சிட்டி, நியூயார்க் சிட்டி என்ற பகுதிகளைக் கொண்டிருந்தது.


ஓவ்வொரு பகுதியிலும், ப்லாக் பஸ்டர் மூவி, டெலிவிஷன் ஷோ, ஃபேமஸ் கேரக்டர்கள் தோற்றம்மளிப்பது, டைனிங், ஷாப்பிங் என்று அதிசயிக்கும்படியிருந்தது.

முதலில் ஹாலிவுட் தான் எங்கள் பார்வையில் பட்டது, அங்கு நுழைந்தவுடன்  விதம் விதமாக தொப்பி ஒரு இடத்தில் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது, அதனை போட்டு அனைவரும் படம் எடுத்தபடியிருந்தார்கள், நாங்களும் படம்  எடுத்துக் கொண்டோம், அந்த புகைப்படங்கள் இப்பொழுது பார்த்தாலும் மிகவும் ரசிக்கும்படியிருக்கிறது. ஹாலிவுட் கேரக்டர்கள் ஆங்காங்கு வலம் வந்து கொண்டிருந்தார்கள், சார்ளி சாப்ளின் போலவே ஒருவர் அங்கே நடந்து வரவும் அவருடன் இருந்து போட்டோ எடுக்க ஒரே கியூ தான். அவருடைய சேட்டைகள் மிக நகைச்சுவையாக பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது, அந்த இடம் ஹாலிவுட் போலவே அமைப்பு, கட்டிடங்கள், வீதியின் அமைப்பு, நிறுத்தப் பட்டிருந்த . டைடானிக் கப்பல், இப்படி ஒவ்வொன்றும் நின்று நிதானமாக ரசிக்கும்படியிருந்தது, ஆனால் ஒரு நாளுக்குள் யுனிவர்சல் ஸ்ட்டுடியோவை முழுவதும் பார்க்க வேண்டும், அனைத்து ஷோவும் போக வேண்டும் என்ற ஆர்வம் எங்களை மிகவும் துரிதப்படுத்தியது. அனைத்துமே பிரமிப்பாகவே இருந்தது. ரெஃப்ரெஷ் செய்ய 
அங்கு யோகர்ட் ஐஸ்கிரீம், ஸ்னோ மெல்ட்ஸ் என்று ருசித்தோம்.

சை-ஃபை சிட்டியில் உலகின் மிக  நீளமான டுவெல்லிங் - ரோலர் கோஸ்டர் போக ரெடியானோம்.. அதனில் ரெட் லைன், ப்ளூ லைன் என்று இரண்டு வகையாக இருந்தது, அம்மாடி ! நாங்கள் முதலில் ரெட் லைனில் சென்று வந்தோம், அதுவே எனக்கு போதும் என்றாகிவிட்டது, ப்ளூலைனில் நான் வரவில்லை என்று கீழே அமர்ந்து கொண்டேன். என் டிக்கெட்டிற்கு நான் போகாத எல்லா ஷோவுக்கும் திரும்பவும் என் மகள் போய் வந்தாள் என்பது வேறு  விஷயம்.ட்ரான்ஸ்ஃபார்மர் ரைட் - இது 3 டி ஷோ. ட்ரான்ச்ஃபார்மர்களுடன் அவ்வ்.. என்ன மிரட்டல்,என்ன சத்தம் போய் விட்டு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு ஏன்சியண்ட் ஈஜிப்ட் நோக்கி சென்றோம்..


ஏன்சியண்ட் ஈஜிப்டின் அமைப்பு நிஜத்தை அப்படியே பிரதிபலிப்பதாய் இருந்தது. சிலைகள் பிரம்மாண்டமாய் வடிவமைக்கப்பட்டு திகிலூட்டும் அழகுடன் காணப்பட்டது..வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே தம்பி , அக்கா நிச்சயமாய் மம்மி ரைட் போங்க ( ரிவெஞ்ச் ஆஃப் தி மம்மி) என்று சொன்னதால் அது ரொம்ப இண்ட்ரெஸ்டிங் போல என்று ஆசையாய் ஆர்வமாய் பல முன்னேற்பாட்டுடன் செல்ல, அம்மாடி ஒருத்தரை திகிலூட்ட நினைத்தால் மம்மி ரைட் அனுப்பி வைத்தால்  போதும், இதயம் பலகீனமானவர்கள் போகாமல் இருப்பது நல்லது, பீதி என்றால் அப்படியொரு பீதி.

முடித்து விட்டு வெளியே வந்த பின்பு அப்பாடா என்றிருந்தது. இது மாதிரி ரைடுகள் போகும் பொழுது நம்ம பொருட்கள் அனைத்தும் மணிபர்ஸ்,மொபைல் உட்பட வைக்க லாக்கர் வசதியிருக்கு.திரும்பி வந்து பத்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.

மதியம் லேசாக பசியெடுக்க ஆரம்பித்ததும் வீட்டில் பார்சல் கட்டி தந்த சிக்கன் ஃப்ரைட் ரைஸ், கோபி மஞ்சூரியன், நெல்லை மிக்சர் அசத்தலாய் சாப்பிட்டு விட்டு  தி லாஸ்ட் வேர்ல்ட் செல்ல ரெடியானோம்.

லாஸ்ட் வேர்ல்ட்டில். ஜுராசிக் பார்க் அங்கு ரேபிட் அட்வென்ச்சர் ஹைட்ரோ எலெக்ட்ரிக் ப்லாண்ட் ரைட் போகும் பொழுது மாற்று உடை தேவைப்படும், முழுவதும் நனைந்து விடுவோம், பாலிதீன் ஓவர் கோர்ட் விற்பனையில் இருந்ததால் வாங்கி உபயோகித்துக் கொண்டோம்..
இந்த ரைடிற்கு க்யூ காத்திருக்க நாங்கள் எக்ஸ்ப்ரஸ் பாஸ் வாங்கியதால் உடன் சென்று வந்தோம் அதுவொரு புதிய அனுபவம்.

அடுத்து கனோப்பி ஃப்லையர், இந்த ரைட் மேலே அப்படியே பறந்து ஜுராசிக் பார்க் முழுவதும் சுற்றி பார்க்கலாம்.

அடுத்து ஆம்பர் ராக் கிளைம்ப், பாறை மாதிரியான அமைப்பு, டைனோசர் பற்றிய அனைத்து சமாச்சாரங்களும் கண்டு வரலாம்..


அடுத்து 3 மணிக்கு வாட்டர் வேர்ல்ட்  ஷோ சென்றோம். ஹாலிவுட் சண்டைக் காட்சிகளை நேரில் பார்த்தது போல் இரண்டு கோஷ்டிக்கு இடையே மோதல் காட்சிகள் ,குண்டு வீசப்பட்டு, நெருப்பு பற்றியெறியும்.நேரில் பார்க்க அதிசயமாய் இருக்கும்.
படகுகள், ஹெலிகாப்டர் சண்டைகள் மோதல்கள், ஆண், பெண் சாகசங்கள் என்று நேரில் காட்சியமைப்பு படக் காட்சிகளை லைவ் ஷோ பார்த்தது போல் இருந்தது அட்டகாசம் தான்..

ஃபார் ஃபார் அவே
4 D ஸ்ரெக் அட்வென்ச்சர் மிகவும் திரில்லாக இருந்தது. நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று.


மடகாஸ்கர் 

சின்ன குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்..இங்கு படகில் ஒரு ரைடு, அதில் அப்படத்தில் வரும் கேரக்டர்கள் நம்மோடு அளாவளாவார்கள். கார்ட்டூன் உலகில் நுழைந்து அவைகள் நம்மிடம் பேசுவதும், மிரட்டுவதும், விளையாடுவதும், பாடுவதும் ஆடுவதும்.. நல்ல இண்ட்ரெஸ்டாக இருந்தது. கொஞ்சம் பயப்படாமல் போன் ரைடு இது தான்.

நியூயார்க் சிட்டி

உண்மையில் நியூயார்க் சிட்டிக்குள் நுழைந்த உணர்வு, இங்கு ஒரு அரங்கினுள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லைட் கேமரா அக்‌ஷன் ஷோ. இதுவும் பார்க்க வேண்டிய ஒன்று..பயங்கர திகிலூட்டும் விதமாக நியூயார்க் தாக்கப்படுவது ,கடல்,கப்பல், படகு என்று பிரம்மாண்டமாக இருந்தது..நெருப்பு, தண்ணீர் என்று லைவ் காட்சிகளுடன்...

அப்பாடி ஒரு வழியாக எல்லா ஷோவும், ரைடும் முடிந்தளவு பார்த்தோம், எனக்கு நினைவு வந்தவற்றை பகிர்ந்திருக்கிறேன்.

காலையில் கிளம்பும் பொழுதே தம்பி, நேராக லிட்டில் இந்தியா வந்திடுங்க, ஷாப்பிங் போய்விட்டு இரவு முஸ்தபா ஷாப்பிங் செண்டர் ரூஃப் டாப்பில் இருக்கும் 24 மணி நேரமும் இயங்கும் உணவகத்தில் டின்னர் பண்ணலாம் என்று சொன்னதால் 7 மணிக்கு ஷோ முடிந்தவுடன் அப்படியே கொஞ்சம் வேடிக்கை பார்த்து விட்டு லிட்டில் இந்தியாவிற்கு கிளம்பிவிட்டோம்.

என் கணவர் முன்பே ஷாப்பிங் என்று எதுவும் பெரிதாக வைத்துக் கொள்ளாதே , யு.ஏ.இ.-யில் கிடைக்காதது எதுவும் இல்லை, என்று சொல்லியிருந்தார். ஆனாலும் சில பொருட்கள் வாங்க ஆசை, நோ ஷாப்பிங் என்று உறுதியாக சொன்னதால் சாக்லெட், பிஸ்கெட்ஸ் என்பன போன்றவற்றை மட்டும் கொஞ்சம் வாங்கி விட்டு சும்மா ஒரு சுற்று சுற்றி விட்டு டின்னருக்கு கிளம்பினோம். முஸ்தபாவிற்குள் நகைக்கடையை சும்மா பார்க்கலாமேன்னு  போய்ப் பார்த்தோம், துபாய் கோல்ட் சூக்கே ஒரு கடைக்குள் இருப்பது போல் நகைகளை குவித்து வைத்திருந்தார்கள். கடைக்குள் நுழைந்தால் அனைவரின் டேஸ்ட்டுக்கு தகுந்தபடியும் நகைகள் ஒரே கடையில் வாங்கும்படியாயிருந்தது தான் சிறப்பே..

டின்னரில் நம்ம ஊர் டேஸ்ட்டில் வெரைட்டியாக வெஜ் நான்வெஜ் என்று சாப்பிட்டு விட்டு டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் மாலை 6 மணிக்கு ஊர் கிளம்ப வேண்டும், எனவே பயணத்திற்கு எல்லாம் தயார் செய்து விட்டு தான் தூங்கவே சென்றோம்.

விடிந்தால் சிங்கப்பூர் பயணத்தின் ஐந்தாம் நாள், இரண்டு இடங்கள் போக முடிவு செய்திருந்தோம். என் கணவரின் நண்பர் லீவு போட்டு விட்டு அவர் குடும்பத்துடன் எங்களுடன் அன்று முழுவதும் கழிப்பதாக சொல்லியிருந்தார்...

சந்திப்போமா ....

நிறைவுப் பகுதி - 7


நன்றி -கூகிள்.

14 comments:

 1. எங்கள் ரசனை வேறாக இருந்தது. உள்ளே போகவில்லை. இருந்தாலும் மிஸ் பண்ணாமல் எனக்கு இடத்தை சுற்றிக் காட்டீட்டீங்க. தாங்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இமா, வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
   என்னால் சுற்ற முடியாத நேரம் அங்கு போடப் பட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டேன்..உட்கார்ந்தே சில நேரம் தூங்கியும் விட்டேன்..என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.என் கணவர் எடுத்த வீடியோ கிளிப்பிங்கை பார்த்து நினைவு படுத்தி தான் இதைப் பகிர முடிந்தது.உடனே எழுதவில்லை என்றால் மற்ந்து விடுகிறதே!

   Delete
 2. nalla sutrulaa...


  nalla pakirvum...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க வருகைக்கும் கருத்திற்கும் சகோ.

   Delete
 3. அருமையான படங்கள், அற்புதமான விளக்கங்கள். எல்லாமே ஒரே பளீச் பளீச் ... பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வை.கோ.சார் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

   Delete
 4. அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆதி,வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 5. படங்களும் விரிவான பகிர்வும் அருமை ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. ராமலஷ்மி மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.உங்கள் சிங்கப்பூர் பகிர்வும் அருமை..

   Delete
 6. படங்களுடன் கொண்டாட்டம்... சூப்பர்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார் கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

   Delete
 7. ரொம்ப அருமையாக சிங்கப்பூரை உங்களுடன் இரண்டாம் முறையாக ஒரு வளம் வந்தாச்சு,
  உங்கள் பயணக்கட்டுரை மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஜலீலா.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

   Delete