Pages

Monday, 22 October 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - நிறைவுப் பகுதி - 7 - பார்வைகள் பலவிதம்

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 5 தொடர்ச்சி
பகுதி - 6
மேற்கண்ட பகுதிகளைக்  கிளிக்கினால் முந்தைய பகிர்வுகளை வாசிக்கலாம்.

பகுதி -7
ஐந்தாம் நாள்  காலை திட்டப்படி  DUCKWTOUR


செல்வதற்கு சிங்கப்பூர் ஃப்ளையர் பக்கம் தான் பிக் அப். எனவே எங்கள் 
காலை சிற்றுண்டி பிடித்தமான யாகுன் காயா டோஸ்ட் ஹார்லிக்ஸ் ஃப்ராஸ்டி தான் அன்றும்.நாங்கள் DUCW TOUR முடித்தவுடன் நண்பரின் குடும்பம் வந்து எங்களை அவர்கள் காரில் ஜூராங் பறவைகள் பூங்காவிற்கு அழைத்து செல்வதாய் திட்டம்.
DUCKW TOUR எனபது வேறொன்றுமில்லை, சிட்டி டூர் போலவே தான், ஆனால் அரைமணி நேரம் ரோட்டில் சுற்றுப்பயணம் மீதி அதே வாகனம் நீரில் இறங்கி உல்லாசமாய் சுற்றிவிட்டு திரும்ப ஏறிய இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். கேப்டன் எக்ஸ்ஃப்லோரர் என்று அந்த வாகனத்திற்கு பெயர்.பார்ப்பதற்கு வாத்து போல் வடிவமைத்து  

இருந்தார்கள்.
கைடு விளக்கத்துடன் திரும்பவும் நகர் உலா, எஸ்ப்லானட், சிங்கப்பூர் ஸ்கைலைன்ஸ், சுப்ரீம் கோர்ட், வார் மெமோரியல் என்று மீண்டும் வலம் வர தீடீரென்று ரோட்டில் போய்க் கொண்டிருந்த வாகனம் சிங்கப்பூர் நதியில் தண்ணீர் தெரிக்க குதித்தது, கைடு 1 2 3 என்று சொல்ல அனைவரும் அந்த அனுபவத்திற்கு காத்திருந்து ரசித்தோம். அப்டியே அமைதியான நதியில் மெரினா பே சாண்ட்ஸ், மெர்லையன், எஸ்ப்லானட் தியேட்டர் நதிக்கரையில், மீண்டும் சிங்கப்பூர் ஸ்கைலைன்ஸ் என்று காட்சிகளும் இயற்கை எழிலும், காணப்பெறாத அழகிய காட்சிகளோடு  உலா மிக மகிழ்ச்சியாக இதமாக இருந்தது. முடித்து விட்டு வரவும் காத்திருந்த நண்பர் குடும்பத்தோடு ஜுராங்க் பேர்ட்ஸ் பார்க் கிளம்பினோம்.

அம்மாடி! `பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்` என்ற பாடல் வரிகள் தான் மனதில் வந்து போனது. எட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அறுநூற்றூக்கும் மேற்பட்ட பிரிவுகள், வகைகள் நாம் கண்டு மகிழும் வண்ணம் அழகிய மழைக் காட்டில் பயணித்து கண்டு ரசிக்கும் வண்ணம் பூங்கா அமைந்திருந்தது. எடுத்த புகைப்படங்கள் எண்ணற்றவை எதைப் பகிர எதை விட அத்தனையும் கண்ணிற்கு விருந்து தான்.. 


பூல் ஆம்பி தியேட்டரில் லைவ் ஷோ. பறவைகளின் அணிவகுப்பு, செய்த வித்தைகள் மற்றும் பேசும்,பாடும் கிளியை பார்க்க மிக்க ஆர்வமாக இருந்தது.

மதியம் அவர்கள் எங்களுக்காக அன்பாக செய்து  எடுத்து வந்த தேங்காய்ப்பால் புளியோதரை, புதினா துவையல், உருளைக்கிழங்கு ஃப்ரை, சிக்கன் சுக்கா என்று அந்தக் கானகத்தில் கிடைக்காத அருமையான விருந்து., நீரோடை அருகே அமைக்கப்பெற்ற குடிலில் போடப்பட்டிருந்த மேஜை நாற்காலியில் அமர்ந்து வசதியாக மதிய உணவை முடித்து விட்டு அப்படியே நடந்து நடந்து, உண்டது செரிக்க, எண்ணற்ற வண்ணமயமான பறவைகளைக் கண்டு உற்சாகமாக உலா வந்தோம்.
3 மணிக்கு ஆம்பிதியேட்டரில் லைவ் ஷோ பார்க்க விரைந்தோம். அழகிய பெயர்கள் கொண்ட பறவைகள் செய்த சாகசங்கள் சொல்லில் வடிக்க முடியாது. நேரில் பார்க்க அத்தனை அழகு. ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாதலால் வியர்வை தான் கொஞ்சம் அதிகம். ஷோ முடிந்ததும் பார்க்க எத்தனையோ இடங்கள் இருந்தும் எங்களுக்கு 9 மணி ப்லைட், 6 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டிய நேரம் என்பதால் கிளம்ப முடிவெடுத்தோம்.
நண்பர் வரும் வழியில் அவர் வேலை செய்த கப்பற்தளத்தையும் சுற்றி காண்பித்தார். அடுத்து ஒரு முக்கியமான இடத்தை பார்த்து விட்டு பயணத்தை முடித்துக் கொள்வோம் என்றார். அப்படி என்ன முக்கியமான 
இடம். அதனை உங்களால் நிச்சயம் கணிக்க முடியாது
அந்த இடம், ஆம் .. நாம் இறுதியில் செல்லும் இடம். சிங்கப்பூர் சிமெட்ரி மயானபூமி அமைந்த இடம், அமைதியாய் பறந்த புல்வெளியில் சீனர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, இந்துக்களுக்கு என்று தனித்தனியாய் அமையப் பெற்றிருந்தது. பார்த்து விட்டு கனத்த அமைதியுடன்          
திரும்பினோம்
ஆஹா ! நான் சிங்கப்பூர் நினைவாக வாங்கியதை நீங்கள் பார்க்க  வேண்டாமா? இதோ உங்கள் பார்வைக்கு..
வீடு வந்து ரெஃப்ரெஷ் செய்து கிளம்பத்தான் நேரம் சரியாக இருந்தது
கிளம்பப் போகிறோம் என்று வீட்டில் உள்ள குட்டீஸ்க்கு தெரிந்து விட்டது.
என்னிடம் மெதுவாய் வந்து, ஆமாம் நீங்க ஊர் போறீங்களா? என்ற குட்டிப் பொண்ணு, அக்கா என்னோடு விளையாடவேயில்லையே ! எப்ப என்னோடு விளையாடுவா ? என்று ஏக்கத்தோடு கேட்டுவிட்டு சோகமாக அவளுடைய அறையில் சென்று கதவை மூடிக் கொண்டாள். எனக்கும் என் மகளுக்கும் மனசு மிகவும் சங்கடமாகி விட்டது. நீ துபாய் வா அங்கு வந்து விளையாடலாம் என்று சொல்லி சமாதானம் செய்து விட்டு கிளம்பினோம். ஆனால் குழந்தையல்லவா? சமாதானம் ஆகவில்லை...
நண்பர் குடும்பமும், தம்பியும் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவிட்டு மகிழ்ச்சியாக விடை பெற்று சென்றார்கள்,
பயணங்கள் முடிவதில்லை...

முக்கிய குறிப்பு:

என் பயண அனுபவத்தை தவறாது  வாசித்து கருத்து தெரிவித்து உடன் பயணித்து எழுத ஊக்குவித்த  அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி..
வீடியோ பகிர்வுகளை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


இணையத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்புத்தோழி முத்துச்சரம் ராமலட்சுமி தன்னுடைய சிங்கப்பூர் பயண அனுபவத்தை அவரின் கேமரா பார்வையில் பல பாகங்களாகப் பகிர்ந்திருக்கிறார். இதோ ! கிளிக்கவும்.

விரைவில் சந்திப்போம்..!


10 comments:

 1. நா அடுத்தமாசம் சிங்கபூர் போரேன் உங்க பதிவு உபயோகமா இருக்கும் ராமலஷ்மி பக்கமும் போயி பாக்கிரேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க லஷ்மிமா, வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.தங்கள் பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

   Delete
 2. மிகச்சிறப்பான பதிவு. படங்களும் அருமை. சிங்கப்பூரிலே என்னுடைய நெருங்கிய சொந்தங்கள் நிறைய இருப்பதாலும் அவர்கள் அடிக்கடி அனுப்பும் எழுதும் விஷயங்களாலும், ஓரளவு எனக்கு நன்றாகவே தெரியும். இப்போ உங்கள் பதிவு மூலம் மேலும் தெரிந்து கொண்டேன்.
  கடைசியில் உள்ள சிங்கம் போன்ற பீங்கான் பொம்மைகள் ஒருசிலர் நினைவுப்பரிசாகத் தந்துள்ளனர். என் வீட்டு ஷோகேஸில் அவைகள் உள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

  [மெயில் தகவல்களுக்கும் நன்றியோ நன்றிகள்]

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி வை.கோ சார். கருத்திற்கு நன்றி.

   Delete
 3. அடிக்கடி செல்லும் எனக்கு சாதாரணமாக தெரிந்த சிங்கப்பூர் உங்கள் பார்வையில் வித்யாசமாக அழகாக தெரிந்தது. பறவைகள் பூங்காவில் கிளிக்கு உணவு கொடுத்தீங்களா? நம்ப தோளில் உட்கார்ந்து அவை செய்யும் அட்டகாசம்... இனிமையான அனுபவம். இவ்வளவு தூரம் வந்த உங்களை பார்க்க முடியாமல் போனதில் மட்டுமே வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. கவிசிவா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.தூசியில்லாமல் பசுமையாக இருப்பது எங்களைக் கவர்ந்த ஒன்று.கிளிக்கு உணவு கொடுக்கலை.ஜுராங்க் பார்க்கில் தான் அதிகம் நேரம் செலவிடமுடியாமல் போய்விட்டது.
   ஒவ்வொருத்தர் பார்வையிலும் நிச்சயம் வித்தியாசம் தான்,சமீபத்தில் விசிட் போன என் தோழியை அவ்வளவாக கவரவில்லை சிங்கப்பூர்..அதனால் தான் அந்த தலைப்பே வைத்தேன்...

   Delete
 4. அழகான பயணத் தொடர். ரசித்தவற்றை மற்றவருக்கும் பயனாகும் வகையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். படங்களும் நன்று. எனது தொடருக்கு இணைப்புக் கொடுத்திருப்பதற்கும் நன்றி ஆசியா:)!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலஷ்மி. கருத்திற்கு மகிழ்ச்சி.

   Delete
 5. படங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்... அவ்வளவு அருமை... அழகு...

  இனிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி...

  தங்களின் பதிவுகளை நான் மட்டுமல்ல... வீட்டிலும் படிப்பார்கள்... நீங்கள் பதிவை பகிரும் போது, எனக்கு இப்போது மெயிலில் அனுப்பியது போல் தெரியப்படுத்தவும்... (ரொம்ப சிரமம் கொடுக்கிறேனோ...?) Blogger Dashboard-ல் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை...

  நன்றி...
  dindiguldhanabalan@yahoo.com

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார். இந்த போஸ்டிங் டேஷ்போர்ட் ரீடிங் லிஸ்டில் இல்லை.தொடர்ந்து வந்து கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கும்,வீட்டிலும் பார்ப்பதையறிந்தும் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete