Pages

Tuesday, 6 November 2012

அல் ஐன் ஒரு சுற்றுலாத்தளம்...! - பகுதி -1


ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஐன் ஒரு பாலைவனச் சோலை.அபுதாபியில் உள்ள இரண்டாவது பெரிய நகரம்.ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட (லேட்) ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பிறந்த இடம். துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் வானுயர்ந்த கட்டிடங்கள், மால்களின் அணிவகுப்பு, பலவகையான அட்டகாசமான பொழுது போக்குகள் என்று ஜெகஜோதியாக காட்சியளிக்கும். ஆனால் அல் ஐனோ அமைதியாய், பசுமையாய் சுத்தமாய் அரபு நாட்டு பாரம்பரிய மக்களோடு அசத்தலாய் இருக்கும். விழாக்கால விடுமுறை நாட்களில் மற்ற அமீரகவாசிகள்     தங்கள் பொழுதைக் கழிக்க அல் ஐன் வருவது சகஜம். அந்நாட்களில் 
மட்டும் அல் ஐன் ஜே ஜே என்று இருக்கும். 

அல் ஐன் மற்றும் சுற்றுப்புற நகரத்தின் மக்கள் தொகை 3,70,00. பரப்பளவு 
200 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு தான். ஐக்கிய அரபு அமீரத்தின் மொத்த பரப்பளவு 82,000 சதுர கிலோமீட்டர், சூழ்ந்த கடற்பரப்பு 1318 கிலோமிட்டர். ஆனால் இன்லேண்ட் வாட்டர் பூஜ்ஜியம்.  இந்நகரம் துபாயிலிருந்து 140 கிலோ மீட்டரும் அபுதாபியில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. ஒமான் நாட்டு பரப்பை ஒட்டியே அல் ஐன் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் அழகான மணற்பரப்புகளுடனும் பாலைவனத்தின் அழகைக் கண்டு ரசிக்கும் வண்ணமும், ஆங்காங்கு பேரீச்சை தோப்புக்களுடனும் அமைந்திருக்கும். நகரின் மையத்தில் கூட பேரீச்சை தோப்புகளைக் காணலாம். ( எங்க வீட்டு பின்னாடி கூட அல்ஜிமி ஒயாசிஸ் )
அல் ஐன் என்றாலே நினைவிற்கு வருவது ஜெபல் ஹஃபீத், கிரீன் முபஸ்ஸரா, ஹிலி ஃபன் சிட்டி, ஹிலி ஆர்க்கியாலாஜிகல் பார்க், அல் ஐன் வனவிலங்குப் பூங்கா ,டவுன் ஸ்கொயர், ஜாஹ்லி ஃபோர்ட் பார்க், அல் ஐன் பேலஸ் அருங்காட்சியகம், அல் ஐன் பேரடைஸ், அழகழகான ரவுண்டபௌட்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தொடர்ந்து அல் ஐன் பற்றிய பகிர்வுகளைக்காண காத்திருங்கள்...

7 comments:

 1. படங்களும் பகிர்வும் அருமை... தொடர்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி,இது என் சமையற்தளத்தில் பகிர்ந்தவையே.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.இன்னும் அலைன் பற்றி சிலவற்றை பகிர விருப்பம்.சிங்கப்பூரை பற்றி பகிர்ந்தாச்சு. நாங்க இருக்கும் ஊர் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தான் சகோ.

   Delete
 2. அருமை !

  அல்-அயின் பகுதியை நேரில் பார்த்த திருப்தி

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. மிக்க நன்றி நிஜாம்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. அல் அய்னின் அமைதியான அழகு மிகவும் பிடித்த ஒன்று. இந்த பெருநாள் லீவுக்கு குடும்பத்துடன் வர திட்டமிட்டது சில காரணங்களால் இயலாமல் போனது. உங்கள் கட்டுரையும், படமும் மீண்டும் அல் அய்ன் போகும் ஆசையை தூண்டுகிறது.

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நூருல் அமீன்.இப்ப வெதர் நல்லாயிருக்கு.இனி ஃபெப்ரவரி வரை சூப்பராக இருக்கும்.விடுமுறை நாட்களில் முழுமையாக ஒரு ரவுண்டடித்து விடுங்கள் சகோ.

  ReplyDelete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete