Pages

Saturday, 22 December 2012

உலகின் உயரமான கட்டிடம் / At the Top - Burj Khalifa



உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா துபாயில் அமையப் பெற்று கிட்டதட்ட மூன்று வருடமாகிவிட்டது என்றாலும் அங்கேயே சுற்றி வரும் எங்களுக்கு இந்த மாதம் தான் At the Top போகும் வாய்ப்பு கிடைத்தது.இக்கட்டிடம் 2004 செப்டம்பர் மாதம் கட்ட ஆரம்பித்து 2010 ஜனவரியில் முடிவடைந்து 4 ஆம் தேதி கோலாகலமாகத் திறப்பு விழா நடந்ததை உலகே அறியும்.
புர்ஜ் கலீபா கட்டிடம் கீழ்காணும் சிறப்புடையது.
உலகின் அதி உயரக் கட்டிடம்
160 மாடிகள், 828 மீட்டர் அதி உயரம் (2 716.5 அடி)
உலகின் அதிக மாடிகளை உடைய கட்டிடம் 
மனிதர்களால் உருவாக்கப் பட்ட அதி உயர் கட்டமைப்பு (free standing structure)
உலகிலேயே அதிக உயரமும் நீண்ட தூரமும் செல்லக் கூடிய Lifts.
3000 வாகனம் நிறுத்தும் வசதி, 11 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தோட்டமும் (பார்க்), ஆறு நீர்த்தடாகங்களும் கொண்டது.
57 elevators  8 escalators களை கொண்டது 
30 கட்டுமான கம்பெனிகள் சேர்ந்து 100 நாடுகளை சேர்ந்த 12 000 தொழிளாளிகளால் 6 வருடங்களில் (2004 - 2010)உருவாக்கப்பட்டது.




ஆன் லைனில் புக் செய்து சென்றால் நூறு திர்ஹம் தான்,ஆனால் அங்கு கவுண்ட்டரில் நேரில் போய் டிக்கட் எடுத்து செல்ல 400 திர்ஹம்.நாங்கள்  முன்பே புக் செய்து தான் போனோம்.இரவு நேரம் செல்ல 
முயற்சி  செய்தோம்.ஆனால் பகல் 10.30 மணிக்கு தான் செல்ல முடிந்தது.


டிக்கெட் கவுண்டரில் பார்த்தால் எல்லாவேளையும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.நேரில் போய் 400 திர்ஹம் கொடுத்தால் கூட டிக்கெட் கிடைப்பது சிரமம் தான்.


ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சர்ரென்று நம்மை 124 வது மாடிக்கு லிஃப்ட் அழைத்து செல்வது மிக ஆச்சரியமாக இருந்தது.மேலே சென்று மிக ஆர்வமாக  சென்று பார்த்த பொழுது கிளிக்கியது.


இப்படி கண்ணாடியால் நிறுவபெற்ற இடத்தில் இருந்து துபாய் நகரை நாம் பார்த்து மகிழலாம்.

கீழே அவ்வளவு நெருக்கமாக ஏகப்பட்ட கட்டிடங்கள் பார்த்த கண்களுக்கு மேலே சென்றவுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிடங்களைப் பார்த்த பொழுது அதீத பிரமிப்பை உணரவில்லை என்பதே நிஜம்.ரசிப்பதற்கு கட்டிடங்கள் மட்டுமே தெரிந்தது,தூரத்தில் உலக வரை படம் போல் உருவாகிக் கொண்டிருக்கும் தீவு அமைப்பை காணமுடிந்தது.
டெலஸ்கோப்பில் பார்க்க 10 திர்ஹம் -இரண்டரை நிமிடம் மட்டுமே பார்க்க முடியும்.

புர்ஜ் கலீபாவின் நிழல் விழுவதை இந்தப் படத்தில் காணலாம்.







கிட்ட தட்ட ஒரு மணிநேரம் மேலே உட்கார்ந்தும் நின்றும் ரசித்து மகிழ்ந்தோம்.
10 திர்ஹம் இந்த மிஷினில் போட்டு நாமே கீழ்காணும் துட்டை உருவாக்கி எடுத்துக் கொள்ளலாம்.நான்கு வகையாகக் கிடைக்கிறது.


அங்கு சென்றதின் நினைவாக ஒரு சின்ன புர்ஜ் கலீபா வடிவம் காந்தம் வைத்தது, ஃப்ரிட்ஜில் ஒட்டுபடியான ஒன்றை மட்டும் வாங்கி வந்தோம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்.


சுற்றிப்பார்த்து விட்டு சும்மா வரமுடியுமா?
அப்படியே சூப்பரான சீஸர்ஸ் சாலட்,பிஸ்ஸா,பாஸ்தா என்று பிள்ளைகளுக்கு பிடித்த அயிட்டம்..




மொத்தத்தில்  ஒரு திரில் அனுபவம்...




2 comments:

  1. nalla pakirvu...

    mikka nantri sako...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete