Pages

Saturday, 1 December 2012

முழு நேர ப்ளாக்கரா ?

 சென்ற இரு முறை ஊர் சென்ற பொழுதும் எனக்காக புத்தகப் பரிசுப்  பார்சல் பிரிக்கப்படாமல் காத்திருந்தது.முதல் முறை தமிழ்மணம் பரிசுக் கூப்பனிலும்  மறுமுறை நேஷம் யுடான்ஸ் பரிசுக் கூப்பனிலும் பெற்றது.
போகும் பொழுது இங்கிருந்து முப்பது - நாற்பது கிலோ எடை எடுத்துச் செல்லலாம், ஆனால் அங்கிருந்து வரும் பொழுது 20 கிலோ + ஹேண்ட் லக்கேஜ் தானே கொண்டு வர முடியும்.
இரண்டு முறை பார்சல் கட்டும் பொழுதும் அதிக எடை வந்தால் பார்சல் கட்டி தருபவர்கள் இந்தப் புத்தகக் குவியலை எடுத்து வெளியே வைத்து விடுவார்கள்.அடுத்த முறை வரும் பொழுது வாசித்துக் கொள் என்று சொல்வதே வழக்கம்.

இப்படியாக பரிசு புத்தகங்கள் வாசிக்கப் படாமலே இருந்து வந்தது. ஒருவழியாக பரிசு புத்தகத்தில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் அடங்கியதை மட்டும் நிறைய பண்டங்களை தியாகம் செய்து எடுத்து வந்து விட்டேன்.
இங்கு  தான் நேரம் கிடைக்கும், வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.  தற்சமயம் வீட்டில் பேச்சு கூட செந்தமிழாகத்தான் ஆகிவிட்டது. கல்கியின் எழுத்தினை நான் போற்றி எழுத தேவையே இல்லை. நாமெல்லாம் + 2 வரை தமிழ் படித்தோம், ஆனால் என் பிள்ளைகளுக்கு முழுமையாக தமிழை கற்க முடியாத சூழல் அமைந்தாலும் எழுதும் வாசிக்கும் அளவு ஓரளவு தெரியும். அப்படியே விட்டு விட்டால் மறந்து விடுவார்கள். இந்தப் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்படும் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இப்புத்தகத்தினை எடுத்து வாசித்து விட்டு பழந்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கும் பொழுது அத்தனை ஆனந்தமாக உள்ளது.

பெருநாள்  சமயம் என் கணவரின் நண்பர்களை குடும்பத்தோடு அழைத்திருந்தோம்.
நண்பர் ஒருவர் என் கணவரிடம், உங்கள் மனைவிக்கு வீட்டில் எப்படி பொழுது போகிறது ? என்று கேட்டார்.
(நானும் என் கணவரிடம் நான் வலைப்பூவில் எழுதுவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன், ஆனால் பாருங்க இவர் போட்டு உடைத்து விட்டார்.)
மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ  இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே ! பார்க்கலாம்.
அவ்வ்வ்.....!

14 comments:

 1. Pengal blog vaithaley.. Veethil anaivarum sollum ore varthai eppa paaru computer monnadiye irukura endru thaan. veethai pillaigalai parpathu avagaluku theriyaathu.. pillaigalai book kai padika solluga...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஃபாயிஜா கருத்திற்கு மகிழ்ச்சி.

   Delete
 2. ஹா ஹா.. புத்தக வாசிப்பு நிறைய கற்றுக்கொடுக்கிறது. நல்ல பகிர்வு ஆசியாக்கா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்..

   Delete
 3. //மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே ! பார்க்கலாம்.//

  ;)))))

  //இந்தப் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்படும் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இப்புத்தகத்தினை எடுத்து வாசித்து விட்டு பழந்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கும் பொழுது அத்தனை ஆனந்தமாக உள்ளது.//

  கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி வை.கோ.சார்.

   Delete
 4. எங்கள் வீட்டில் இருந்தாலும் பொன்னியின் செல்வன் நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. படிக்க வேண்டும்.

  சுஜாதா அவர்களின் ஏதோ புத்தகம் உள்ளது படத்தில். என்ன புத்தகம்?

  முழு நேர பிளாக்கரா....:))

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி ஆதி.சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் அனைத்து பாகமும் வாங்கியிருந்தேன்...

   Delete
 5. சந்தோசம்... முழு நேர பிளாக்கருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி தனபாலன் சார்.

   Delete
 6. ////மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே ! பார்க்கலாம்.////

  :) :) Congrats! :) :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி மகி.

   Delete
 7. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இதை பார்த்ததும் தான் எனக்கு இப்ப உடான்ஸ் பரிசு ஞாபகமே வருது

  இனி தான் வாங்கனும்/

  ஏன் கேட்கிறீங்க நான் இரண்டு வருமாக பிலாக் பைத்தியமாக இருந்தேன்.

  // என்ன செய்வது நாம் எல்லோருக்கும் மனசோர்வடைந்து கண்டத யோசிக்காம நம்மை வருத்தி கொள்ளாமல் நாம் இப்படி மற்றவர்களுக்கு உதவி கொண்டு இருக்கோம், அதுவும் நல்லது தானே.//

  இப்ப தான் வேலைகள் அதிகமாக அதிகமாக இதில் அதிக நேரம் உட்கார முடியவில்லை.
  இருந்தாலும் ஒரு முறை உட்கார்ந்தால் ஒரேயடியாக 20 குறிப்பு கிட்ட எல்லாத்தையும் எடிட் செய்துட்டு தான் எழுந்திருப்பது.


  ReplyDelete