Pages

Saturday, 12 January 2013

வீட்டிலேயே கார்பெட் சுத்தம் செய்வது எப்படி?




கார்பெட் வாஷ்க்கு வெளியே கொடுத்து வாங்குவதில்ஆகும் செலவிற்கு  நாம் புதிய கார்பெட்டே வாங்கிவிடலாம்.
வீட்டில் வாஷ் செய்து காயப்போடும் அளவு இடம் இருந்தால் நாமே இந்த வேலையை இலகுவாக செய்து விடலாம்.தேவை நாம் கழுவும் இடத்தில் தண்ணீர் பைப் இருக்க வேண்டும்.

தேவையானவை:
தாராளமாக தண்ணீர் - பைப்புடன், சோப்பு பவுடர்,ப்ரெஷ்..

1. முதலில் அழுக்கான கார்ப்பெட்டை சுத்தம் செய்ய அதனில் வேக்குவம் போட்டு தூசியை நீக்கி விட வேண்டும்.
2.கார்பெட் எந்த இடத்தில் வைத்து சுத்தம் செய்யப் போகிறோமோ அந்த இடத்தை  தண்ணீர் கொண்டு அலசி விட வேண்டும்.
3.கார்பெட்டை சுருட்டி எடுத்து கழுவும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும்.
4. முதலில் வெறும் தண்ணீரை,பைப் கொண்டு  கார்பெட் மீது பீச்சி அடித்து கழுவ  வேண்டும்.
5.பின்பு அதன் மீது சோப்புத்தூள்( வாஷிங் பவுடர்) ஆங்காங்கு தூவ வேண்டும்.
6.அதன் மேல் லேசாக தண்ணீரை தெளித்து ப்ரெஷ் கொண்டு நன்றாக அழுக்கு போக தேய்க்க வேண்டும்.முழுவதும் தேய்த்த பின்பு தண்ணீர் கொண்டு பீய்ச்சி அடித்து இரண்டு மூன்று முறை கழுவ வேண்டும்.
7.இப்பொழுது கார்பெட் தண்ணீரை உறிஞ்சி மிக கனமாக இருக்கும்.அதில் இருக்கும் தண்ணீரை பிழிய திரும்பவும் கார்பெட்டை சுருட்ட வேண்டும்.தண்ணீர் வழிந்தோடும்.
8.சுருட்டிய கார்பெட்டை, மற்றொருவரின் உதவி கொண்டு, தூக்கி சுவற்றில் சாய்த்து வைத்தால் தண்ணீர் முழுவதும் ஒரு அரைமணி நேரத்தில் வடிந்து விடும்.வடிந்த தண்ணீரை தள்ளிவிட வேண்டும்.
9.அதற்குள் நாம் கார்பெட் அலசிய இடம் காய்ந்து விடும்.
10.அதே இடத்தில் கார்பெட்டை விரித்து காய வைக்கவும்.ஒரே இடத்தில் போட்டபடி இருக்கக் கூடாது.காய்ந்து கொண்டு இருக்கும் பொழுது அதனை இழுத்து சிறிது தள்ளி போட வேண்டும்.இல்லாவிடில் கார்பெட்டின் ஈரம் அடியில் அதே இடத்தில் இருக்கும், காய விடாது.


11.சுள்ளென்று வெயில் அடித்தால் காலை பத்துமணிக்கு கார்பெட் கழுவினால், மாலை நான்கு மணிக்குள் காய்ந்து விடும்.


பின்பு திரும்ப சுருட்டி எடுத்து சென்று எங்கு விரிக்க வேண்டுமோ அங்கு விரித்து கொள்ளலாம்.



பின் குறிப்பு:
ஒரே நாளில் கார்பெட் காயவில்லை என்றால் காய்ந்தளவு சுருட்டி வைத்து விட்டு மறுநாள் வெயிலில் காய வைத்து உபயோகிக்கலாம்.மொட்டை மாடியில் பைப் வசதியிருந்தால் அங்கு கழுவி காயவைத்து உபயோகிக்கலாம்.சிறிய கார்பெட் என்றால் ஒருவரே வாஷ் செய்து விடலாம். பெரியது என்றால் அதன் தூக்கி போட, காயவிட உதவிக்கு ஆள் தேவைப்படும்.

Wednesday, 2 January 2013

ஒரு சிறிய பகிர்வு பெரிய மகிழ்ச்சி....


பல திறமைகள் இருந்தும் எந்தவித பந்தாவும் இல்லாமல் அழகான அமைதியான மனோ அக்காவை (திருமதி மனோ சாமிநாதன்) நம் தமிழ் வலைப்பூ உலகமே அறியும்.நான் என் ஆங்கில சமையல் வலைப்பூவில் ஒரு சிறிய அளவிலான சமையல் குறித்த போட்டியை அக்டோபர் மாதம் நடத்தி  அதில் பங்கு கொண்டவர்களுக்கு ,ஐந்து முக்கிய விஷயங்களின் அடிப்படையில் சிறந்த குறிப்புக்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பரிகளும் வழங்கப்பட்டு விட்டன.இதனைப் பற்றி உங்கள் அனைவரிடமும் பகிர்வதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி.

அன்பு அக்காவின்  வலைப்பூக்கள்
தமிழ் வலைப்பூ - முத்துச் சிதறல்
ஆங்கில வலைப்பூ- Mano's Delicious Kitchen

மனோ அக்காவை இந்த போட்டியை நடத்த நடுவராக பொறுப்பேற்று உதவுமாறு அன்புடன் கேட்ட பொழுது அவர்கள் இந்தியாவில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்கள். .என்றாலும் போட்டியைக் குறித்த தகவல்களை மிகவும் பொறுமையாக கேட்டறிந்து,  ஊரில் இருந்து திரும்பியவுடன்,  சிறப்பாக முடித்தும் தந்து உதவினார்கள்.ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதனை திறம் பட முடித்து தருவதில்  `அவர்களுக்கு நிகர் அவர்களே` என்பது அத்தனை நிச்சயம்.

என் எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டு அவர்கள் வேலையாகவும், உடல் நலக் குறைவாகவும் இருந்த சமயங்களில் கூட பரிசுக்குரியவரை தேர்வு செய்யும் விஷயத்தில் உதவிய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
மிக இலகுவாக எல்லாம் வெற்றியாளரை தேர்வு செய்யவில்லை.
சொன்னவாறு குறித்த நேரத்தில் அட்டவணையிட்டு மதிப்பெண் போட்டு குறிப்புகள் பரிமாறிய விதம், விரிவான விளக்கம், புதிதான கண்டுபிடிப்பு செய்திகள், டிப்ஸ்,சுவை என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்து தந்தார்கள்.

இது மனோ அக்கா மதிப்பெண் போட்டு முடிவை அறிவித்து அனுப்பிய அட்டவணை. இது போல் மூன்று பக்கங்கள்.அவர்களின் தேர்வு லேசானதில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி.

மிக்க நன்றி  என்ற ஒரு வார்த்தையில் முடித்து விட முடியுமா? அன்பு அக்கா.

அந்தப் போட்டி குறித்த தகவல்கள் ஐந்து பகுதிகளாகத் தொகுத்து அளித்தேன்.ஐந்தாவது பகிர்வில்,  முடிவாக பரிசுக்குரிய வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
பரிசுத்தொகையும் அனுப்பப் பட்டு அவர்கள் அனைவரும் பெற்றுக் கொண்ட பின்பே இங்கே பகிர வேண்டும் என்ற காரணத்தாலேயே இத்தனை நாட்கள் தாமதமானது.
போட்டி பற்றிய பொறுப்பை எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பரிசுக்குரியவர்களை தேர்வு செய்ய எங்களுக்கு உதவுவாயாக என்று வேண்டியதோடு சரி.
அவனின் நாட்டப்படியே எல்லாம் நடந்தது என்பது முதல் பரிசுக்குரியவர் செய்த அந்த மகத்தான செயல் மூலம் விளங்கியது.
நீங்கள் கீழ்கண்ட இந்த ஐந்து இணைப்புகளையும்  கிளிக் செய்து  பார்த்தால் போட்டி பற்றிய முழு விபரமும் தெரிந்து கொள்வீர்கள்.


போட்டி பற்றிய அறிவிப்பும் இணைக்கப்பட்ட சமையல் குறிப்புகளும். - பகிர்வு - 1

பெறப்பட்ட குறிப்பு விபரங்கள் கலந்து கொண்டவர்கள் வலைப்பூ லின்குடன் -பகிர்வு - 2

முடிவு அறிய காத்திருப்பு - பகிர்வு - 3

முடிவு அறிவிப்பு, பரிசு பற்றிய விபரம், விருதுகள் - பகிர்வு - 4

இறுதியாக முடிவான வெற்றி போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு -
பகிர்வு - 5

பகிர்வு ஐந்தில் பரிசு பெற்றவர்களின் வலைப்பூக்கள் இணைப்புகள் உள்ளது கிளிக் செய்து பாருங்கள்..



 ஆதரவளித்த அன்பான நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி..