Pages

Wednesday, 2 January 2013

ஒரு சிறிய பகிர்வு பெரிய மகிழ்ச்சி....


பல திறமைகள் இருந்தும் எந்தவித பந்தாவும் இல்லாமல் அழகான அமைதியான மனோ அக்காவை (திருமதி மனோ சாமிநாதன்) நம் தமிழ் வலைப்பூ உலகமே அறியும்.நான் என் ஆங்கில சமையல் வலைப்பூவில் ஒரு சிறிய அளவிலான சமையல் குறித்த போட்டியை அக்டோபர் மாதம் நடத்தி  அதில் பங்கு கொண்டவர்களுக்கு ,ஐந்து முக்கிய விஷயங்களின் அடிப்படையில் சிறந்த குறிப்புக்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பரிகளும் வழங்கப்பட்டு விட்டன.இதனைப் பற்றி உங்கள் அனைவரிடமும் பகிர்வதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி.

அன்பு அக்காவின்  வலைப்பூக்கள்
தமிழ் வலைப்பூ - முத்துச் சிதறல்
ஆங்கில வலைப்பூ- Mano's Delicious Kitchen

மனோ அக்காவை இந்த போட்டியை நடத்த நடுவராக பொறுப்பேற்று உதவுமாறு அன்புடன் கேட்ட பொழுது அவர்கள் இந்தியாவில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்கள். .என்றாலும் போட்டியைக் குறித்த தகவல்களை மிகவும் பொறுமையாக கேட்டறிந்து,  ஊரில் இருந்து திரும்பியவுடன்,  சிறப்பாக முடித்தும் தந்து உதவினார்கள்.ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதனை திறம் பட முடித்து தருவதில்  `அவர்களுக்கு நிகர் அவர்களே` என்பது அத்தனை நிச்சயம்.

என் எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டு அவர்கள் வேலையாகவும், உடல் நலக் குறைவாகவும் இருந்த சமயங்களில் கூட பரிசுக்குரியவரை தேர்வு செய்யும் விஷயத்தில் உதவிய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
மிக இலகுவாக எல்லாம் வெற்றியாளரை தேர்வு செய்யவில்லை.
சொன்னவாறு குறித்த நேரத்தில் அட்டவணையிட்டு மதிப்பெண் போட்டு குறிப்புகள் பரிமாறிய விதம், விரிவான விளக்கம், புதிதான கண்டுபிடிப்பு செய்திகள், டிப்ஸ்,சுவை என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்து தந்தார்கள்.

இது மனோ அக்கா மதிப்பெண் போட்டு முடிவை அறிவித்து அனுப்பிய அட்டவணை. இது போல் மூன்று பக்கங்கள்.அவர்களின் தேர்வு லேசானதில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி.

மிக்க நன்றி  என்ற ஒரு வார்த்தையில் முடித்து விட முடியுமா? அன்பு அக்கா.

அந்தப் போட்டி குறித்த தகவல்கள் ஐந்து பகுதிகளாகத் தொகுத்து அளித்தேன்.ஐந்தாவது பகிர்வில்,  முடிவாக பரிசுக்குரிய வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
பரிசுத்தொகையும் அனுப்பப் பட்டு அவர்கள் அனைவரும் பெற்றுக் கொண்ட பின்பே இங்கே பகிர வேண்டும் என்ற காரணத்தாலேயே இத்தனை நாட்கள் தாமதமானது.
போட்டி பற்றிய பொறுப்பை எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பரிசுக்குரியவர்களை தேர்வு செய்ய எங்களுக்கு உதவுவாயாக என்று வேண்டியதோடு சரி.
அவனின் நாட்டப்படியே எல்லாம் நடந்தது என்பது முதல் பரிசுக்குரியவர் செய்த அந்த மகத்தான செயல் மூலம் விளங்கியது.
நீங்கள் கீழ்கண்ட இந்த ஐந்து இணைப்புகளையும்  கிளிக் செய்து  பார்த்தால் போட்டி பற்றிய முழு விபரமும் தெரிந்து கொள்வீர்கள்.


போட்டி பற்றிய அறிவிப்பும் இணைக்கப்பட்ட சமையல் குறிப்புகளும். - பகிர்வு - 1

பெறப்பட்ட குறிப்பு விபரங்கள் கலந்து கொண்டவர்கள் வலைப்பூ லின்குடன் -பகிர்வு - 2

முடிவு அறிய காத்திருப்பு - பகிர்வு - 3

முடிவு அறிவிப்பு, பரிசு பற்றிய விபரம், விருதுகள் - பகிர்வு - 4

இறுதியாக முடிவான வெற்றி போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு -
பகிர்வு - 5

பகிர்வு ஐந்தில் பரிசு பெற்றவர்களின் வலைப்பூக்கள் இணைப்புகள் உள்ளது கிளிக் செய்து பாருங்கள்..



 ஆதரவளித்த அன்பான நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி..

8 comments:

  1. தாங்கள் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் யாவும் உண்மையே.

    நான் அவர்களை “அஷ்டாவதானி” என்று குறிப்பிடுவது உண்டு.

    அதாவது ஒரே நேரத்தில் எட்டு வேலைகளில் முழு கவனமும் செலுத்தி, மிகுந்த ஞாபக சக்தியுடன், அத்தனையயும் நினைவில் நிறுத்தி, அனைத்து எட்டு வேலைகளையும், சிறிதும் பிழையில்லாமல் பிசிறு இல்லாமல், வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளவர்களையே ”அஷ்டாவதானி” என்று அழைப்பார்கள்.

    >>>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,மிகச் சரியாக சொன்னீர்கள்..கருத்திற்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

      Delete
  2. இந்தப்போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்ட திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும், தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வை.கோ சார்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்க ஒரு கருத்து சொன்னால் அது இங்கு நூறு பேர் கருத்திற்குச் சமம்.

      Delete
    2. நான் இதனை வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை மேடம்.

      அன்புச்சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு நான் வலத்தளத்திற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் மூலம் பழக்கம் உண்டு.

      என்னை ஓர் வலைப்பதிவு தொடங்கி எழுதச் சொல்லி மிகவும் வற்புருத்தியவர்களும், அதனால் அது நம் மனதுக்கு ஓர் வடிகாலாக அமையும் என்று சொன்னவர்களும் அவர்களே..

      நான் என் வலைப் பதிவினைத் தொடங்கி முதன் முதலாக ஓர் சிறுகதை 02.01.2011 அன்று வெளியிட்டபோது அதற்கு முதல் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தியவர்களும் அவர்களே.

      வெளிநாட்டில் வாழும் பதிவர்களில், நான் முதன் முதலாக நேரில் சந்தித்துப் பேசிய பதிவரும், இதுவரை இவர்கள் மட்டுமே.

      இவர்களின் அருமை பெறுமைகளை ஓரளவு அறிந்துள்ள நான் இவர்களைப்பற்றி என் பதிவுகளின் பின்னூட்டப்பகுதிகளில் சிறப்பித்து எழுதுவதும் உண்டு. மற்றவர்களுக்கும் இவரின் மென்மையும், மேன்மையும், திறமையும் தெரிய வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே அது போல நான் எழுதுவது உண்டு.

      அன்பு, பாசம், பொறுமை, பன்முகத்திறமைகள் என எல்லாம் ஒருங்கே இவர்களிடம் அமைந்துள்ளது.

      சிறந்த நிர்வாகியாகவும், தொழிலதிபராகவும் இருப்பது மேலும் சிறப்பாக உள்ளது.

      எல்லா விஷயங்களையும் கலந்துகட்டியாக எழுதும் மிகச்சிறந்த எழுத்தாளராகிய இவர் ஓர் நல்ல ஓவியரும் என்பதைத் தெரிந்து, நான் மிகவும் மகிழ்ந்து போனேன்.

      இவரைப்பற்றியும் இவரின் சில படைப்புகள் பற்றியும் சமீபத்தில் 26.12.2012 அன்று திருமதி உஷா அன்பரசு அவர்கள் வலைச்சரத்தில் மீண்டும் அடையாளம் காட்டியிருந்தார்.

      அதற்கு நான் கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களில் கூட, இவரைப்பற்றி நான் அறிந்த ஒருசில சிறப்புச் செய்திகளைச் சொல்லியுள்ளேன்.

      அதற்கான இணைப்பு இதோ:
      http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_26.html

      அன்புடன்
      கோபு

      Delete
    3. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே..நானும் பார்த்து பேசியிருக்கிறேன் சார்.அவர்கள் பிசியாக இருக்கும் பொழுது நான் போன் செய்தால், ஆசியா நான் பின்பு அழைக்கிறேன்,என்று சொல்லி நான் திரும்ப அழைப்பதற்கு முன்பே அவர்களே அழைத்து பேசுவார்கள்.மிகவும் பெருந்தன்மை மிக்கவர்கள்.இன்னமும் சொல்லவேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.அக்காவிற்கு புகழ்ச்சி பிடிக்காதே!

      Delete
  3. அன்பு ஆசியா!

    என்னை அன்பின் காரனமாக மிக அதிகமாய் புகழ்ந்திருக்கிறீர்கள். ஒரு விஷயத்தை ஒத்துக்கொன்டால் அதை ஒழுங்காகவும் திருத்தமாகவும் செய்து தர வேன்டும் என்பதில் எப்போதும் நான் கவனமாக இருப்பேன். அதுவும் அன்பு சகோதரி ஆசியாவின் அன்பிற்கு மதிப்பளித்து செய்ய வேண்டி வந்தபோது, அக்கறையும் ஈடுபாடும் அதிகமாகவே அமைந்து விட்டது. அவ்வளவு தான்! என்னை இங்கே அறிமுகபப்டுத்தி இருப்பதற்கும் என்னைப்பற்றி க‌ருத்துக்கள் சொல்லி இருப்பதற்கும் அன்பார்ந்த நன்றி ஆசியா!

    என்னைப்பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உயர்வாகவே சொல்லி வரும் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி அக்கா..:) !

      Delete