Pages

Saturday, 12 January 2013

வீட்டிலேயே கார்பெட் சுத்தம் செய்வது எப்படி?




கார்பெட் வாஷ்க்கு வெளியே கொடுத்து வாங்குவதில்ஆகும் செலவிற்கு  நாம் புதிய கார்பெட்டே வாங்கிவிடலாம்.
வீட்டில் வாஷ் செய்து காயப்போடும் அளவு இடம் இருந்தால் நாமே இந்த வேலையை இலகுவாக செய்து விடலாம்.தேவை நாம் கழுவும் இடத்தில் தண்ணீர் பைப் இருக்க வேண்டும்.

தேவையானவை:
தாராளமாக தண்ணீர் - பைப்புடன், சோப்பு பவுடர்,ப்ரெஷ்..

1. முதலில் அழுக்கான கார்ப்பெட்டை சுத்தம் செய்ய அதனில் வேக்குவம் போட்டு தூசியை நீக்கி விட வேண்டும்.
2.கார்பெட் எந்த இடத்தில் வைத்து சுத்தம் செய்யப் போகிறோமோ அந்த இடத்தை  தண்ணீர் கொண்டு அலசி விட வேண்டும்.
3.கார்பெட்டை சுருட்டி எடுத்து கழுவும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும்.
4. முதலில் வெறும் தண்ணீரை,பைப் கொண்டு  கார்பெட் மீது பீச்சி அடித்து கழுவ  வேண்டும்.
5.பின்பு அதன் மீது சோப்புத்தூள்( வாஷிங் பவுடர்) ஆங்காங்கு தூவ வேண்டும்.
6.அதன் மேல் லேசாக தண்ணீரை தெளித்து ப்ரெஷ் கொண்டு நன்றாக அழுக்கு போக தேய்க்க வேண்டும்.முழுவதும் தேய்த்த பின்பு தண்ணீர் கொண்டு பீய்ச்சி அடித்து இரண்டு மூன்று முறை கழுவ வேண்டும்.
7.இப்பொழுது கார்பெட் தண்ணீரை உறிஞ்சி மிக கனமாக இருக்கும்.அதில் இருக்கும் தண்ணீரை பிழிய திரும்பவும் கார்பெட்டை சுருட்ட வேண்டும்.தண்ணீர் வழிந்தோடும்.
8.சுருட்டிய கார்பெட்டை, மற்றொருவரின் உதவி கொண்டு, தூக்கி சுவற்றில் சாய்த்து வைத்தால் தண்ணீர் முழுவதும் ஒரு அரைமணி நேரத்தில் வடிந்து விடும்.வடிந்த தண்ணீரை தள்ளிவிட வேண்டும்.
9.அதற்குள் நாம் கார்பெட் அலசிய இடம் காய்ந்து விடும்.
10.அதே இடத்தில் கார்பெட்டை விரித்து காய வைக்கவும்.ஒரே இடத்தில் போட்டபடி இருக்கக் கூடாது.காய்ந்து கொண்டு இருக்கும் பொழுது அதனை இழுத்து சிறிது தள்ளி போட வேண்டும்.இல்லாவிடில் கார்பெட்டின் ஈரம் அடியில் அதே இடத்தில் இருக்கும், காய விடாது.


11.சுள்ளென்று வெயில் அடித்தால் காலை பத்துமணிக்கு கார்பெட் கழுவினால், மாலை நான்கு மணிக்குள் காய்ந்து விடும்.


பின்பு திரும்ப சுருட்டி எடுத்து சென்று எங்கு விரிக்க வேண்டுமோ அங்கு விரித்து கொள்ளலாம்.



பின் குறிப்பு:
ஒரே நாளில் கார்பெட் காயவில்லை என்றால் காய்ந்தளவு சுருட்டி வைத்து விட்டு மறுநாள் வெயிலில் காய வைத்து உபயோகிக்கலாம்.மொட்டை மாடியில் பைப் வசதியிருந்தால் அங்கு கழுவி காயவைத்து உபயோகிக்கலாம்.சிறிய கார்பெட் என்றால் ஒருவரே வாஷ் செய்து விடலாம். பெரியது என்றால் அதன் தூக்கி போட, காயவிட உதவிக்கு ஆள் தேவைப்படும்.

15 comments:

  1. கார்பெட் டிசைன் ரொம்ப நல்லாருக்கு.. உங்க வீட்டில் உள்ளதா ஆசியாக்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன். இங்கே வீட்டில் நானே கார்பெட் வாஷ் செய்யும் பொழுது ஏற்பட்ட அனுபவங்களைத்தான் பதிவாய் பகிர்ந்தேன்.மற்றவங்களுக்கு பயன்படலாம் என்பதால் இந்த பகிர்வு..:)!

      Delete
  2. nalla tips.. inga ithu pool pannamudiyaathu fulla wood thaan. sunnai parkavry mudiyaathu. aathuku eethoo shmpoo irukaam aathani oothi clean pannanum endru solluraga. aanal aathanai pathi theriyalai...

    ReplyDelete
    Replies
    1. ஃபாயிஜா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சும்மா தானே இருக்கோம்னு,வெளியே கொடுக்காமல் நானே வாஷ் செய்தேன்,பளிச்சென்று இருந்தது.நம்ம ஊரில், யு.ஏ.இ.-யில் அடிக்கும் வெயிலில் இப்படி அலசி காயப் போடலாம்.

      Delete
  3. அட..சூப்பர் பதிவாக உள்ளதே.வீட்டிலுள்ள ஒரு க்வில்ட் 7 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங் மெஷினில் போட இயலவில்லை.லாண்ட்ரியில் கொடுத்து வாஷ் பண்ண செய்தால் அதற்கு கூலி 500 ரூபாய்.அப்படியே கட்டி லாஃப்டில் போட்டு விட்டேன்.க்வில்ட்டுக்கே இப்படி என்றால் நீங்கள் சொன்னார்ப்போல் கார்பெட் வெளியில் வாஷ் பண்ண கொடுக்கும் விலையில் புதிதாக வாங்கியே விடலாம்.

    நானும் இதே முறையில் மொட்டை மாடியில் வைத்து கழுகி மொட்டை மாடி சுவரில் காயப்போட்டு எடுப்பேன்.சின்ன மாற்றம் சோப்புக்கு பதில் ஷாம்பூ உபயோகித்தால் கார்பெட்டின் பள பளப்பு மங்காமல் இருக்கும்.

    தோழி,சும்மா சொல்லக்கூடாது.உங்கள் வீட்டு ரெண்டு கார்பெட்டுமே அழகோ அழகு.கார்பெட் விரித்த தரையை உபயோகிப்பது எனக்கு ரொம்ப மகிழ்வான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும்,டிப்ஸ்க்கும் நன்றி ஸாதிகா, நான் நார்மல் எடை,சைஸில் உள்ள ப்லான்கெட்,கில்டை வாசிங் மெஷினில் தான் போடறேன்.ஒரு பெரிய கில்ட்டை பாத் டப்பில் போட்டு அலசுகிறேன் என்று இறங்கி நான் பட்ட பாடு இருக்கே அம்மாடி,தண்ணீரில் முக்கியவுடன் யானை கனம்.அதனை பிழி பிழின்னு பிழிந்து தண்ணீர் வடிய வைத்து காய போட்டு எடுப்பதற்குள் பெண்டு கழன்று விட்டது..இங்கு பாலையில் அடிக்கிற வெயிலைப்போலவே குளிரும் அதிகம்,இவைகளை
      உபயோகிக்காமல் இருக்கவும் முடியாதே!

      Delete
  4. ஆஹா நீங்களே செய்றீங்களா பரவாயில்லைக்கா...இங்க வாக்குவம் போடுவதோடு சரி,தனியாக எடுக்க முடியாது....பயன்படும் பதிவு.உங்க வீடு அழகா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேனகா.

      Delete
  5. மிகவும் பயனுள்ள சுத்தமான பதிவு. இதைச்சொல்லியுள்ள உங்களை ரத்தினக்கம்பளம் [ரெட் கார்பெட்] விரித்து வரவேற்க வேண்டும் போல உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி வை.கோ சார் இது மிகப் பெரிய வார்த்தை..நான் மிகச் சாதாரண பகிர்வைத் தான் பதிவிட்டிருக்கிறேன்...

      Delete
  6. ரொம்ப அருமையாக போட்டு இருக்கீங்க
    இத கழுவி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே/

    முன்பு ரொம்ப வருடம் முன் வராண்டாவில் போட்டு பாய் கழுவிய ஞாபகம் வருது.
    எங்க உம்மா என்ன நீங்க சொல்வது போல் தான் செய்வார்கள்.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜலீலா..

    ReplyDelete
  8. கார்ப்பெட் டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு...

    கார்ப்பெட் அலசும் முறை சொல்லியிருக்கீங்க... நன்று...

    அக்கா... மீண்டும் அபுதாபி மாறுதலாயாச்சு... அலைனில் இரண்டு மூன்று இடங்களில் முயற்சிக்கிறேன்... கிடைத்தால் மீண்டும் அலைன்...

    பார்க்கலாம் அக்கா... இறைவன் என்ன நினைக்கிறான் என்று....

    ReplyDelete
    Replies
    1. நல்லது குமார்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete