Pages

Tuesday, 5 February 2013

என் பொருள் தான் எனக்கு மட்டும் தான் - தொடர்பதிவு

தமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வும்..!
1. இந்த தொடர் பதிவில் அழைப்பை ஏற்று இடுகை இடுவோர் தாங்கள் மிகவும் நேசிக்கும் ஏதாவது ஒரு பொருள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தால்   அதனைப் பற்றி சுவாரசியமாகப் பகிரலாம்.அதன் படம் இணைக்க வேண்டும். தொலைந்து போன  மறக்க முடியாத பொருளாக இருந்தாலும் சரி...

2. நீங்கள் உங்கள் வலைப்பூ நட்பு வட்டத்தில் ஒரு சிலரை இதனை தொடர அழைக்கலாம். குறைந்தது 5 நபர்களை அழைக்க வேண்டும்.அழைக்கும் பொழுது அவரது வலைப்பூ லின்க் கொடுத்தால் மிக நல்லது.

இனி என் பகிர்வு..

இனி நான் அன்றாடம் உபயோகிக்கும் என்னிடம் நீண்ட நாட்களாக, இல்லையில்லை பல வருடங்களாக இருந்து வரும் ஒரு பொருளைப் பற்றி பகிரப் போகிறேன்.இது போல் தொடரை தொடர அழைக்கப் படுவோர் உங்கள் பொருட்கள் பற்றி பகிர வேண்டும். சரிதானே ? இனி என் பகிர்வு.


சீப்பு சீப்பு தான் சூப்பர் சீப்பு தான்....

நான் ரொம்ப பாதுகாப்பாக பல வருடங்களாக உபயோகித்து வரும் எனக்கு மிகவும் பிடித்தமான இந்த சீப்பையும் என்னையும் பிரிக்கவே முடியாது.
இந்த சீப்பை நான் 1984 ஆம் வருடம் திருச்சி மலைக்கோட்டை  வாசல் பக்கம் ஒரு கடையில் மூன்று ருபாய்க்கு வாங்கினேன்.அன்று முதல்  இதனை தான் உபயோகித்து வருகிறேன்.
நீங்களே அதன் வயதை கணக்கிட்டுக் கொள்ளுங்களேன்..

முதலில் 1985 திருச்சியில் என் அண்ணன் வீட்டில் இருந்து  கோவைக்கு என் கல்லூரி விடுதிக்கு  எடுத்து சென்றேன்,அங்கு நான்கு வருடங்கள் பயன்படுத்தி விட்டு பத்திரமாக ஊர் கொண்டு போய் எங்களோட நெல்லை பூர்வீக வீட்டில் வைத்து பயன்படுத்தி விட்டுதிருமணமாகிப் போகும் பொழுதும் பத்திரப் படுத்திக் கொண்டேன்.என் மகன் பிறந்த பின்பு தூத்துக்குடியில் குடியேறினோம், இடையில் என் மகளும் பிறந்தாள்.பிள்ளைகளோடு என் சீப்பையும் பாதுகாக்க தவறவில்லை.
அடுத்து அவர் யு.ஏ.இ வந்துவிட்டார். நாங்கள் மீண்டும் எங்கள் மாமா வீட்டில் இரண்டு வருடம்,அடுத்து 99 -2000 துபாய்க்கு வந்தது சீப்பு.
திரும்பவும் ஊரில் மாமா வீட்டில், பின்பு நாங்கள் கட்டிய வீட்டில் இருந்தோம்,அங்கும் எங்களோடவே தங்கிக் கொண்டது.
மீண்டும் விசிட்டில் அபுதாபி, அடுத்து மெக்கா மாநகரம்,மதீனா பயணம்,மீண்டும் அபுதாபி வாசம். தொடர்ந்து அலைனில் தற்சமயம் எங்களோடு வசிக்கிறது. இதற்கிடையில் எங்கும் வெளியூர் வெளிநாடு சென்றாலும் எங்களோடு பயணித்து பத்திரமாக என்னிடமே இருக்கும்.
ஒரு முறை பெங்களூர் அக்கா,அண்ணன் வீட்டிற்குச் சென்ற பொழுது அங்கு மறதியாக வைத்து விட்டு வந்து விட்டேன்.
என்ன செய்வது,மீண்டும் தேடிப் பிடித்து சாக்லேட் கலரில் ஒரு சீப்பு வாங்கினேன்.அதனை மிகப் பிரியமாகத் தான் உபயோகித்து வந்தேன்.ஆனால் என் பழைய  ப்ரிய சீப்பை பிரிய மனமில்லை.

உடனே அக்காவிற்கு போன் செய்து என்ன செய்வாயோ ஏது செய்வாயோ என் சீப்பு என்னிடம் உடனே வந்து சேரவேண்டும், என்றேன், என் அக்காவும் என் உணர்வுகளை உடனடியாகப் புரிந்து கொண்டு அனுப்பி வைத்தாள்.

இப்படியாகப்பட்ட அந்த சீப்பானது இன்று ஆனந்தத்தோடு எங்களோடு தான் வசிக்கிறது.

யாராவது விருந்தாளி வருகிறார்கள் என்றால் சீப்பை எடுத்து முதலில் பத்திரப்படுத்தி விடுவேன்,அவர்கள் உபயோகித்தால் கூட பரவாயில்லை,எங்காவது கைமறதியாக வைத்து விட்டால் என்ன செய்வது, இந்த சீப்பினால் என்னை என்னுடன் நெருங்கி பழகுபவர்கள் கூட சீப்பாக நினைத்து இருக்கலாம், அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதில்லை, எப்பவும் அன்பாக அமைதியாகப் பேசும் அவரின் தங்கை கூட இந்த சீப்பை ஒரு முறை மாடியில் வைத்து விட்டு கீழே தேடியதற்கு, உன் பொருள் உன்னை விட்டு எங்கும் போகாது தேடிப் பார் என்று எரிச்சல் பட்டது நினைவிற்கு வருகிறது.
இந்த சீப்பின் மகத்துவம் தெரியாதவர்கள் அதனை எடுத்து அவர்கள் தலையை வாறும் பொழுது ஏக்கத்துடன் பார்ப்பேன்..அவர்களுக்கு எங்கே தெரியும் ? இதன் வரலாறு..

ஆஹா ! அப்பேற்பட்ட அழகான அன்பான சீப்பை பார்க்க ஆசையா? 
இதோ உங்களுக்காக..28 வயாசாச்சு..அவ்வ்....
பார்த்து விட்டு சும்மா போகக் கூடாது, கருத்து சொல்லனும்.இத்தொடரை தொடர நான் அன்பாக அழைப்பது.

ஸாதிகா  -     என் பொக்கிஷம்
மனோ அக்கா
ஜலீலா - என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்
மகி - தொடர் பதிவு ,என் பொருட்கள்
அதிரா
ஃபாயிஜா - என் பொருள் எனக்கு மட்டும் தான் -தொடர் பதிவு
மேனகா - என்னுடைய பொக்கிஷங்கள்
வானதி -      என் பொருட்கள் தொடர்பதிவு
இமா - என் பொருள் எனக்கு மட்டும் தான்
ராமலஷ்மி
கோவை2தில்லி -     பொக்கிஷங்கள்
கோமதியக்கா ---      டிக் டிக் கடிகாரம் .அன்பைக் கூறும் கடிகாரம்
அமைதிச்சாரல்
ஏஞ்சலின் -  பொக்கிஷமான என் பொருட்கள்
ராதாராணி - தலைமுறை பேசும் பொக்கிஷம்

சகோ.ஸ்டார்ஜன்

சகோ.வைகோ. சார் -  பொக்கிஷம் -தொடர்  1) கலைமகள் கைக்கே சென்று வந்த பேனா.
2) பிள்ளைகள் கொடுத்துள்ள சில அன்புத்தொல்லைகள்.
3) பொக்கிஷமான ஒரு சில நினைவலைகள்
4) அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
5)ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள்
6) அம்மா உன் நினைவுகள் ..
7) அப்பா விட்டுச் சென்ற ஆஸ்திகள் 
8)என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
9)நானும் என் அம்பாளும் -அதிசய நிகழ்வு
10) பூஜைக்கு வந்த மலரே வா!
11) தெய்வம் இருப்பது எங்கே ?

சகோ.தனபாலன் சார்.

நட்பு வட்டங்கள் அனைவரையும் அழைக்க ஆசை தான், என்றாலும் நான் அழைத்தவர்கள்  குறைந்தது ஐந்து நபர்களை அழைக்க வேண்டுமே..
தொடரட்டும் இந்தத் தொடர்...
தொடர்பவர்கள் பகிர்வின் லின்க்கை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.எழுதியவுடன் அவரவர் பெயர் பக்கத்தில் தங்களின் பகிர்வை இணைத்து விடுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


47 comments:

 1. மிகவும் அருமையான அழகான பதிவு. பாரட்டுக்கள். வாழ்த்துகள்.

  மேலும் பல்லாண்டுகள் அதே சீப்புடன் சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறேன்.

  >>>>

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 2. என்னையும் தொடர் பதிவிட அழைத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,நேரம் கிடைக்கும் பொழுது முயற்சி செய்யுங்கள்.கருத்திற்கு மகிழ்ச்சி சார்.

   Delete
 3. aaha sippuku 28 vayasa..appadiye pudusa iruku.. ennaiyum alaithu irukega.. koodiya viraivil padivu poduheren..

  ReplyDelete
  Replies
  1. படத்தில் பளபளன்னு இருக்கு.ஆனால் நேரிலும் அழகாகத் தான் இருக்கும் ஃபாயிஜா.முடியும் பொழுது தொடருங்கள்.வருகைக்கு நன்றி.

   Delete
 4. Asiya Omar akka.. உங்க சீப்புல ஒரு பல்லுகூட போகலியே.. அவ்வளவு பத்திரமா வச்சிருக்கீங்க.. சுவாரசியமா இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. இப்படி வெள்ளை மனசாக கேட்ட கேள்வியை ரசித்தேன். தரமான ப்ளாஸ்டிக் சீப்பு,நல்ல கடையில் வாங்கியது.நன்றி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

   Delete
 5. Nice post. Enjoyed reading it. I have to think of something to write about it.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வானதி, வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.தொடரை நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்க.

   Delete
 6. ஆஹா! சூப்பரா இருக்கே! மனசுக்குப் பிடிச்சா சீப்பும் சீப் இல்லைதான். என் சீப்புக்கும் கிட்டத்தட்ட இதே வயது. ஆனால் இப்பிடி ஸ்டைலாக எல்லாம் இராது. :)

  ReplyDelete
  Replies
  1. இமா,மிக்க நன்றி,நீங்களும் தொடருங்களேன்,இந்த சீப்பின் அமைப்பில் அசந்து தான் பத்திரமாக வைத்திருக்கேன்,என் முடிக்கேற்ற சீப்பு.சீப்பு அப்படியே இருக்கு,ஆனால் முடி நான்கில் ஒரு பங்கு தான் இருக்கு!ஹா ஹா....

   Delete
  2. http://imaasworld.blogspot.co.nz/2013/04/blog-post_1.html
   ;)

   Delete
 7. ஆசியா, சீப்பைப்பற்றி அழகாய் எழுதி விட்டீர்கள்.
  இவ்வளவு வருடங்கள் இந்த சீப்பை பத்திரமாய் வைத்துக் கொண்டு இருப்பதற்கு உங்களை பாராட்ட வேண்டும். என்னையும் தொடர் பதிவு எழத அழைத்தற்கு நன்றி, மகிழ்ச்சி. முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதிக்கா வாங்க,நேரம் கிடைக்கும் பொழுது தொடரை எழுதுங்க,இப்படி ஒரு சாதாரண பொருளை பத்திரமாக வைத்துக் கொள்வது கஷ்டம் தான் அக்கா. நன்றிக்கா.உயர்வான பொருட்கள் கூட எத்தனையோ தொலைச்சிருக்கேன்.ஆனால் இது என்னவோ என்னிடம் தங்கியிருக்கிறது.

   Delete
 8. ஆஹா.... அந்த இருபத்தியெட்டு வயது அழகியைக் கண்ணாரக் கண்டேனே! :)

  அடுத்த தொடர் பதிவு.... ம்ம்ம்... என்ற அம்மணிய எழுத அழைச்சு இருக்கீங்க... பார்க்கலாம் என்ன் எழுதப் போறாங்கன்னு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அம்மணியை தொடரை விரைவில் தொடரச் சொல்லுங்க.நீங்களும் எழுதலாமே.

   Delete
 9. தற்சமயம் வேறு ஒரு இடத்தில், உறவினர் மடிக்கணினி மூலம் தான் இந்த இணையத் தொடர்பு... சில வேலைகள் முடிந்த பின், நேரம் கிடைக்கும் போது தொடர் பதிவு எழுத முயற்சி செய்கிறேன்... நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார் வருகைக்கு நன்றி.எப்பொழுது முடிகிறதோ அப்ப தொடரை எழுதுங்க.

   Delete
 10. சீப்புதானேன்னு ச்சீப்பா நினைக்காமல் அதைப் பாதுகாத்து வெச்சிருக்கறதுக்கே உங்களைப் பாராட்டணும்.

  நிச்சயமாத்தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றீ சாந்தி.நிச்சயமாகத் தொடரை தொடருங்கோ! மகிழ்ச்சி.

   Delete
 11. :) nice post Asiya Akka! Will try my best to continue! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகி.தொடரை எழுதுங்க,மிக்க ஆவல்.

   Delete
 12. அழகான சீப்பை பத்திரப்படுத்தி வைத்ததற்கு ஒரு பூங்கொத்து. ஆஹா! என்னையும் தொடர அழைத்ததற்கு நன்றிங்க. நிறைய பொருட்கள் நினைவுக்கு வருகிறது. பார்க்கலாம் எதை பற்றி என்ன எழுதறதுன்னு....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதி வருகைக்கும் பூங்கொத்திற்கும் மகிழ்ச்சி.நிச்சயம் மிக சுவாரசியமாக தொடர் இருக்கும் என்று நினைக்கிறேன்..

   Delete
 13. 28 வயது சீப்பு அடேங்கபா...ஸ்க்ராட்ச் இல்லாமல்,பல் விழாமல் நேற்றுத்தாக்ன் கடையில் இருந்து வாங்கி வந்தது போல் உள்ளதுநானோ வருடத்திற்கு நான்கு சீப்பு வாங்கிக்கொண்டுள்ளேன்.

  தொடர் அழைப்பாக என்னையும் அழைத்துள்ளீர்கள்.அவசியம் எழுதுகிறேன்.மிகவும் சுவாரஸ்யமான பதிவுதான்.

  ReplyDelete
  Replies
  1. அடடா, போட்டோ எடுத்த அவருக்கு தான் இந்த பாராட்டு,என் சீப்பை இத்தனை பளபளப்பாக எடுத்து தந்தமைக்கு.என் மகளுக்கும் ஒரு பின்க் கலர் சீப்பு வாங்கி கொடுதிருக்கிறேன்,அது வாங்கி ஆறே வருடங்கள் தான் ஆகிறது,அதுவும் பளபளனு தான் இருக்கு,அது அபுதாபியில் சஃபீர் மாலில் 2 திர்ஹம் கொடுத்து வாங்கினேன்,சீப்பு வாங்கும் பொழுது தரமான ப்ளாஸ்டிக்காக பார்த்தும்,தடவி பார்த்தால் உருத்தக் கூடாது.சில்க் மாதிரி தலையை வாறும் பொழுது இருக்கனும்.இது அடிக்கடி உபயோகிக்கும் பொருள் என்பதால் அது தொலைவதற்கு வாய்ப்பில்லையே தோழி.சீப்பு எப்படி ஸ்கராட்ச் ஆகும்?

   Delete
 14. ஆச்சரியம்! சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளீர்கள், ஆசியா. சிலபொருட்களோடு நம்மை அறியாமல் ஏற்படும் நெருக்கத்தால் பத்திரப்படுத்தி வருவது வழக்கம்தான் என்றாலும் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருளைக் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். தொடர அழைத்த அன்புக்கு நன்றி. முடியும் போது செய்கிறேன். மற்றவர் அனுபவங்களை வாசிக்கவும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலஷ்மி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.முடியும் பொழுது தொடரை தொடர்ந்து பகிருங்கள்.நானும் அனைவரின் ஆதர்ச பொருட்களை அறிய ஆவலோடு காத்து இருக்கிறேன்..

   Delete
 15. உங்க சீப்புக்கு இத்தனை வயசா?? சூப்பர்ர்,படிக்க சுவராஸ்யமா இருந்தது...புத்தம் புதுசு போல இருக்கு.நேரமிருக்கும் போது நிச்சயம் தொடர்கிறேன் அக்கா..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேனகா.நிச்ச்யம் எழுதுங்க,மிக்க ஆவல்.

   Delete
 16. http://mathysblog.blogspot.com/2013/02/blog-post_9.html

  ஆசியா, தொடர் அழைப்பு லிங், நேரம் இருக்கும் போது பாருங்கள்.
  நன்றி தொடர் அழைப்புக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக அருமை அக்கா.கருத்திட்டு விட்டேன்.உங்கள் பகிர்வின் லின்க்கை இந்த தொடரில் உங்க பெயர் பக்கம் பகிர்ந்துள்ளேன்,இந்த தொடரை பார்ப்பவர்கள் வாசிக்க வசதியாய்.சிரமம் பாராமல் எழுதி பகிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றியக்கா.

   Delete
 17. சுவாரசியாமான பதிவு தான் , சீப்பு இன்னும் புது சீப்பு போல் உள்ளது.
  என்னை யும் அழைத்து இரூக்கீங்க, இந்த வருடத்துக்குள் எழுத பார்க்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜலீலா.முடியும் பொழுது எழுதுங்க.

   Delete
 18. ஆசியா உங்களுக்கு இப்படி ஒரு புளொக் இருப்பதே இப்போதான் கண்டுபிடித்தேன்ன்... மிக அழகாக சொல்லிட்டீங்க அருமையான பதிவு... முடிந்த்வரை தொடர்கிறேன்ன்.. நன்றி அழைத்தமைக்கு..

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிரா வாங்கோ வாங்கோ,அழைப்பிற்கிணங்கி கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.தொடர்வீர்கள்,மிக்க ஆவல்.

   Delete
 19. ஒரு வழியா கண்டு பிடிச்சிட்டேன் :))
  இந்த தொடர் பதிவை நான் சமைத்து அசத்தலாமில் தேடோ தேடென்று தேடினேன்
  கடைசியா பூசார் பக்கம் நீங்க தந்த லிங்க் இங்கென்னை கொண்டு வந்தது ..
  ..28 வயசா !!! மஞ்சள் சீப்பு சூப்பரா இருக்கு ..அதன் அருமை பெருமைகளும் அழகா சொல்லியிருக்கீங்க ஆசியா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி,உங்கள் பகிர்வையும் இங்கே இணைத்து விட்டேன்,ஏஞ்சு..

   Delete
 20. இந்த புளொக்கிற்கு இன்றுதான் வருகிறேன் ஆசியா..இத்தனைநாளா இதை நான் பார்க்கவில்லை...தொடர் பதிவின் மூலமா எல்லாரையும் மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்..:)என் பதிவும் பகிரப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி..
  ஒரு சீப்பு வாங்கினா 6மாதத்துல எப்பிடியோ தொலைந்து விடும் எனக்கு. ஆனா 28 வருஷமா ஒரே சீப்பை உபயோகிப்பது ஒரு சாதனைதான். சில நேரங்களில் சீப்பு அமைவது தலையை ஊசிபோல குத்தாமல் முடியையும் சிக்கு இல்லாமல் ஒன்று போல் இழுக்க வரும். அந்த நேரங்களில் இந்த சீப்பை பத்திரமா வைக்க நினைப்பு வரும்,ஆனாலும் எப்பிடியோ தொலைந்து விடும்.நீங்க இந்த மஞ்சள் சீப்பை சுத்தமா பராமரித்து 28 வருடங்களாக உபயோகிப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த சீப்பும் தலைமுறை பேச வாழ்த்துக்கள் ஆசியா..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி ராதா,கருத்திற்கு மகிழ்ச்சி ராதா.

   Delete
 21. வளமான எழுத்து நடை. பாராட்டுக்கள். உங்கள் பழைய பதிவுகளை தேடி படிக்கக் தூண்டுகிறது. 
  சீப்பு எப்படி இவ்வளவு சுத்தமாக கலர் கூட  மங்காமல் இருக்கிறது?

  ReplyDelete
 22. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அப்பாதுரை.நான் எழுதுவது மிகக் குறைவே,ஒரு சில பகிர்வுகள் என் சமைத்து அசத்தலாமிலும் இருக்கு.தரமான பொருட்கள் நீண்ட நாட்கள் ஆனாலும் பாதுகாத்து வந்தால் அப்படியே தானே இருக்கும்!

  ReplyDelete
 23. http://sashiga.blogspot.fr/2013/03/blog-post.html akka check this link,i completed this chain post...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேனகா, பகிர்வுக்கு மகிழ்ச்சி.உங்கள் பொக்கிஷங்கள் தொடரையும் உங்கள் பெயர் பக்கம் இங்கு இணைத்து விட்டேன்..

   Delete
 24. //வை.கோபாலகிருஷ்ணன் 5 February 2013 12:18
  என்னையும் தொடர் பதிவிட அழைத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.முயற்சிக்கிறேன்.

  Asiya Omar 5 February 2013 12:31
  நிச்சயம் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,நேரம் கிடைக்கும் பொழுது முயற்சி செய்யுங்கள்.கருத்திற்கு மகிழ்ச்சி சார்.//

  தங்களின் நம்பிக்கையின்படி நான் நேற்றுடன் “என் பொக்கிஷம்” பற்றிய பதிவுகளை எழுதி வெளியிட்டு நிறைவு செய்துவிட்டேன்.

  மொத்தம் பகுதி-1 முதல் பகுதி-11 வரை.

  இந்த தொடர்பதிவினை தொடர்ந்து எழுத என்னைத் தூண்டியதற்கு மிக்க நன்றி.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. வை.கோ சார் கவனித்தீர்களா? எல்லாப் பகிர்வின் லின்க்கையும் இந்த இடுகையில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.கருத்திற்கு மகிழ்ச்சி சார்.

   Delete