Pages

Wednesday, 13 February 2013

சில சமையலறை டிப்ஸ்


1. மாவு வகைகளை வைக்கும் பொழுது புழு,வண்டு வராமல் இருக்க ஒரு பிரியாணி இலையை சொருகி வைத்தால் வராது. (கடலைமாவு,அரிசிமாவு,கோதுமை மாவு,மைதாமாவு உட்பட)
2.அரிசியில் வண்டு வராமல் இருக்க காய்ந்த மிளகாய் வற்றலை அரிசியுடன் போட்டு வைத்தால் வண்டு வரவே வராது.
3. கசகசாவை அரைக்க முதலில் வெது வெதுப்பான நீரில் அரைமணி முதல் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.முதலில் மிக்ஸியில் போட்டு கசகசாவை அரைத்து விட்டு  பின்பு மற்ற பொருட்களை சேர்த்து அரைத்தால் கசகசா நன்கு அரைபட்டு விடும்.
4.அவசரத்திற்கு ரசம் செய்ய மிளகு சீரகத்தூளை சம அளவு பொடித்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.
5.எந்தவொரு சமையலையும் அதிகம் செய்யும் பொழுது சாமான் அளவை அப்படியே கூட்ட தேவையில்லை, சிறிதளவு குறைத்து போடலாம்.
6.பிரஷர் குக்கர் உட்பக்கம் நாளடைவில் நிறம் மாறிவிட்டால் எலுமிச்சை அல்லது வினிகர் போட்டு கொதிக்க வைத்தால் நிறம் மாறி பளிச்சென்று மாறிவிடும்.உருளைக்கிழங்கு வேக வைத்தாலும் நிறம் பளிச்சென்று மாறிவரும்.
7.கட்லெட் செய்யும் பொழுது ஷேப் செய்த பிறகு ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்து எடுத்து செய்தால் நன்றாக வரும்.கட்லெட் கலவை இலகி விட்டால் ப்ரெட்டை நனைத்து நன்கு பிழிந்து சேர்த்து கலந்து சுட்டால் கட்லெட் உடையாது.ப்ரெட் இல்லாட்டி இருக்கவே இருக்கு மைதாமாவு.கொஞ்சம் கலந்து பாருங்க,ருசியாகவும் இருக்கும் பிரியவும் பிரியாது.
8.வடை ,பஜ்ஜி, போண்டா,பக்கோடா இவை செய்யும் பொழுது மாவு தளர்ந்து விட்டால் இருக்கவே இருக்கு அரிசி மாவு சிறிது சேர்த்து கலந்து சுட்டால் எண்ணெயும் குடிக்காது,முறுகலாகவும் வரும்.
9.கிரேவிக்கு முந்திரி பருப்பு சேர்க்காமல் தேங்காய் மட்டும் அரைத்து சேர்ப்பதாய் இருந்தால் கார்ன் ஃப்லோர் அல்லது அரிசி மாவு 1 டீஸ்பூன் அளவு கலந்து சேர்த்தால் குழம்பு தண்ணீர் பிரியாது.
10.காய்கறிகள் சமைக்கும் பொழுது  நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
11.அவசரத்திற்கு உயரத்தில் இருக்கும் பொருட்களை எடுக்க ஒரு சிறிய ஸ்டூலை சமையலறையில் போட்டு வைப்பது வசதியாக இருக்கும்.
12.சமையலறை வாஷ்பேசின் கீழ் ஒரு மிதியடி போட்டுக் கொண்டால் தண்ணீர் பட்டு அழுக்காவதை தவிர்க்கலாம். அருகில் ஒரு டவல் போட்டுக் கொண்டால் கழுவிய பின்பு கையை துடைக்க வசதியாக இருக்கும்.அணிந்திருக்கும் ஆடையில் துடைப்பது தவிர்க்கப்படும்.


-மீண்டும் விரைவில்..



14 comments:

  1. பயனுள்ள பகிர்வு, நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி,வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  2. அத்தனையுமே உபயோகமான குறிப்புகள். பெரும்பாலானதை நானும் கடைபிடிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி....

    பிரியாணி இலையை போட்டு வைப்பதை இன்று தெரிந்து கொண்டேன்.
    அரிசியில் வண்டு வராமல் இருக்க நான் கிராம்புகளை உபயோகித்து வருகிறேன்.

    தொடரட்டும் குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

      Delete
  3. துணைவியார் படித்தார்கள்... சிலவற்றை குறித்தும் கொண்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி, தனபாலன் சார்.

      Delete
  4. மிக பயனுள்ள பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேனகா வருகைகும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

      Delete
  5. அவசியமான குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி ஆசியா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா,மகிழ்ச்சி.

      Delete
  6. மிகவும் பயனுள்ள குறிப்புகள். நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  7. எல்லோருக்கும் தேவையான குறிப்பு.
    புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்களுக்கு எல்லாம் உதவியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜலீலா.

      Delete