Pages

Friday, 15 February 2013

பெண் என்பவள் பொருள் அல்ல சகமனுஷி...

தற்சமயம் என் மனதை மட்டுல்ல, முக்கியமாக தமிழக மற்றும் உலக மக்களின் மனதை பதை பதைக்க வைத்த சம்பவம் தான் விநோதினி மீது ஆசிட் வீச்சும் மரணமும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய இந்த கலந்துரையாடலை நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்,முக்கியமாக பெண்கள், குடும்பத் தலைவிகள் இதனை கேட்க வேண்டும் என்பது என் அவா..





இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் எவிடென்ஸ் அமைப்பை சேர்ந்த கதிர் அவர்கள், மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி, சமூக ஆர்வலர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..
அவர்களின் கருத்துக்களின் சுருக்கம்:
1.ஆணாதிக்கத்தின் உச்ச கட்டமே இந்த ஆசிட் வீச்சு.
2.சட்டங்களை கடுமைப் படுத்த வேண்டும்.
3.தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
4.ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.
5.குழந்தைகள் வளர்ப்பில் தாய்க்கு முக்கிய பொறுப்பு.
6.பாலின சமத்துவம் ஏற்பட வேண்டும்.

முன்பு டெல்லி நிகழ்வு அதன் பாதிப்பு மறைவதற்குள் இந்த ஆசிட் விச்சு இதற்கு அடுத்து இன்னுமொரு நிகழ்வு..இப்படி தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
நம்மால் முடிந்தது..குழந்தைகள் வளர்ப்பிலும், சமூக நலனிலும் அக்கறை காட்டுவது..!
பொறுத்திருப்போம்...

- ஆசியா உமர்.

6 comments:

  1. ;(((( மிகவும் வருத்தமான சம்பவம் இது.
    இனி இதுபோல் எங்கும் எதுவும் நடக்கவே கூடாது.

    //நம்மால் முடிந்தது..குழந்தைகள் வளர்ப்பிலும், சமூக நலனிலும் அக்கறை காட்டுவது..!//

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி வை.கோ சார்.

      Delete
  2. சம்பவம் கேள்விபட்டதிலிருந்து மனது துடித்துப்போனது ஆசியா .தண்டனைகளிலிருந்து யாரும் தப்பிக்காவண்ணம் சட்டங்களும் கடுமையாக இருக்கணும் .
    மற்றும் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் இருவரும் போதிய கவனமுடன் இருக்கணும் ஊடகங்களும் ..கொஞ்சமேனும் வருங்கால சமுதாயத்தை கருத்தில் கொண்டு நல்ல விஷயங்களை ஒளி பரப்பனும் ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏஞ்சலின்,என்ன செய்வது..சரியாகச் சொன்னீங்க,கலந்துரையாடலை முழுதாக பார்த்திருப்பீங்க,நன்றி பா.

      Delete
  3. மனதை பாதித்த விஷயம். பெண்களுக்கு தொடர்ந்து தீங்கிழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன....:( இனி இது போல் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை கொள்வோம் ஆதி,வருகைக்கு நன்றி.:(..

      Delete