Pages

Monday, 18 February 2013

அச்சு பிச்சு அவார்ட்ஆஹா ! எனக்கு வலைப்பூக்களில் ரொம்ப பிடிச்ச விஷயம் ஒருத்தருக்கொருத்தர்  விருது வழங்குவதும் பெறுவதும்.
சின்னப் பிள்ளையாய் இருந்தப்ப சாக்லேட் கவர், ஸ்டாம்ப் கலெக்‌ஷன், வாழ்த்து அட்டைகள் சேர்ப்பது இப்படி சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷப்பட்டதுண்டு.ஆனால் பாருங்க, இப்பவும் சந்தோஷம் தொடருது.
முதல் முதலாக எனக்கு மேனகா விருது வழங்கிய பொழுது அத்தனை சந்தோஷம்,எல்லாரும் விருது கொடுக்கிறாங்க, வாங்குறாங்க, நமக்கு யாரும் தரலியேன்னு யோசிச்சப்போ கிடைத்த விருது தான் சன்ஷைன் அவார்டு, விருதுகளை நானும் பலபேருக்கு கொடுத்து விட்டேன்.
இப்ப நானே போய் பெற்றுக் கொண்ட அவார்ட் தான் இந்த அச்சு பிச்சு அவார்ட்.
தோழி ஸாதிகாவின் என் பொக்கிஷம் பகிர்வில் திருமதி.  ரஞ்சனி நாராயணன் கருத்து தெரிவிச்சு இருந்தாங்க..பழகிய முகம் போல் இருக்கேன்னு போய் பார்த்தேன்,அங்கு தான் இந்த சுவாரசியமான அவார்டு பற்றி தெரிஞ்சிகிட்டேன்.பகிர்வைப்  பார்க்க கிளிக்.


நான் கருத்து தெரிவித்தவுடன் என் விருதுகள் ப்ளாக் வந்து கருத்து தெரிவித்து இந்த விருதினை வழங்கி சந்தோஷப்படுத்திய ரஞ்சனி அக்காவிற்கு மிக்க நன்றி.
அக்காவின் கருத்துரையைக் காண இங்கே செல்லவும்.

உங்களுக்கு இந்த விநோதமான வேடிக்கையான விருது வேண்டும் என்றால் நீங்க அபி ஆசாமியாக இருக்க வேண்டும். அபி யாருன்னு அறிய அக்காவின் மேலே சொல்லிய கிளிக் பகிர்வைப் பாருங்க..
தாராளமாக கருத்து தெரிவித்து விட்டு இந்த அவார்டை எடுத்து செல்லலாம்.
என்னைப் போல ஒரு சிலர் வீட்டு வேலைகள், பிள்ளைகள் கவனிப்பு என்று முடித்து அசந்து போய் வலைப்பூவிற்கு வரும் பொழுது ரொம்ப சீரியஸான இடுகை,அறிந்து ஆராய்ந்து கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து எழுதியவை, மண்டை காய்ஞ்சி வரும் பொழுது இன்னும் கொஞ்சம் கடுப்படிகிற மாதிரியான இடுகைகளை விரும்புவதில்லை. கதை,கவிதை,பொழுது போக்கு அம்சங்கள்,அனுபவப்பகிர்வுகள்,
விழிப்புணர்வு,வீட்டுக் குறிப்புக்கள்,  போன்ற லேசான விஷயத்தை வாசித்தோமா சந்தோஷமாக கருத்து சொன்னோமான்னு போகத்தான் விரும்புவோம்.
அப்படியிருக்கிற எனக்கு அக்காவின் இந்த இடுகை மிக பிடித்து போனதில் ஆச்சரியம் இருக்க முடியாது.ஏனெனில் நானும் சின்ன பிள்ளையாய் இருந்தப்போ கொஞ்சம் அச்சுபிச்சு தான்..
சும்மாவா, அச்சு பிச்சுன்னு இருந்தால் கூட அவார்டு உண்டு எனும் பொழுது அது ரொம்ப சந்தோஷப் படுத்துகிற விஷயம் தானே! ஹா ஹா...


13 comments:

 1. Replies
  1. வாழ்த்திற்கு நன்றி சீனி.

   Delete
 2. ”அ ச் சு வெ ல் ல த் தி ல்” இரண்டினை எடுத்து, வாயில் இருபுறமும் அடக்கிக்கொண்டது போன்ற இனிப்பான நகைச்சுவை பதிவாக உள்ளது இந்த
  “அ ச் சு ப் பி ச் சு” அவார்ட் என்ற பதிவு. பராட்டுக்கள். வாழ்த்துகள்..பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வைகோ.சார்.யாருடன் வேண்டுமானாலும் நீங்க இந்த அவார்டைப் பகிரலாம்.

   Delete
 3. அச்சு பிச்சு அவார்டுக்கு வாங்கியதற்கு வாழ்த்துகள்....:)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆதி! வாழ்த்திற்கு மிக்க நன்றி..

   Delete
 4. உண்மையிலேயே இந்த அவார்ட் மிக அழகாக இருக்கிறது ஆசியா? அப்புறம் எதற்காக இந்த 'அச்சு பிச்சு' என்று ஒரு பெயர்? எனினும் இனிய வாழ்ழ்த்துக்கள்!!

  என் பொருள் தான் எனக்கு மட்டும்தான் தொடர்பதிவிற்கு என்னை அழைத்ததற்கு அன்பு நன்றி ஆசியா! ஊரில் இருப்பதால் திரும்ப அமீரகம் வந்ததும் தொடர்கிறேன். ஒரு பொருள் மட்டும் தான் குறிப்பிட வேண்டுமா??

  ReplyDelete
  Replies
  1. அன்பு அக்கா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ,மகிழ்ச்சி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.
   அக்கா தொடர் அழைப்பில் நீங்கள் மிகவும் பாதுகாத்து வரும் பொருட்கள் எத்தனை இருந்தாலும் குறிப்பிடலாம்.லிஸ்ட்டில் நிறைய இருந்தாலும் நான் ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன், எழுதிய தோழிகள் லின்க் அந்த பகிர்வில் இணைத்துள்ளேன்.பாருங்கள் அக்கா.

   Delete
  2. வாழ்த்துக்கள் ஆசியா
   எந்த பதிவுக்குமே வர முடியல

   என்னையும் தொடர் பதிவில் அழைத்து இருக்கீன்க முடிந்தால் எழுதுகிறேன்

   அச்சு பிச்சு பேச்சு வழக்கில் சொல்வது

   Delete
  3. நன்றி ஜலீலா, வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.பரவாயில்லை ஜலீலா,நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்க.

   Delete
 5. வாழ்த்துக்கள் அக்கா....ரொம்ப சந்தோஷமா இருக்கு...கூடிய சீக்கிரம் உங்க தொடர்பதிவினை எழுதிவிடுகிறேன்....

  ReplyDelete
 6. வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி மேனகா.நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கபா.

  ReplyDelete
 7. அச்சுப்பிச்சு அவார்டுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete