Pages

Monday, 4 March 2013

கம்ப்யூட்டரை விட வேகம்டா நீ..!


கணினியை விட வேகமாக இருக்க முடியுமா? அது தான் அவள்.
பாவம் கணினி அவளிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு,அப்பப்பா! அம்மம்மா! அதற்கு வாய் இருந்தால் கூட அழும்..
என்ன செய்வது அவளுக்கு அது தான் பல நேரங்களில் பொழுதை போக்க உதவுகிறது..
நமக்கெல்லாம் இரண்டு கை,ஆனால் அந்தக் கணினிக்கு எத்தனை கை ? அந்த ஆணடவனுக்கே வெளிச்சம். அவள் இரண்டு கையால் வேலை செய்தாலே பத்து கையால் வேலை செய்வது போல் அத்தனை பர பரப்பு அவளுக்குள். பாவம் அவளிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் விழி பிதுங்கும் கணினிக்கு என்று தான் விடுமுறையோ!

இப்படியாகப் பட்ட கணினி யால் இல்லை இல்லை அவளால் அந்த
கணினிக்கு இல்லாத நோய் எல்லாம் வரும், அவையும் அடிக்கடி சரி செய்யப்படும், கணினிக்கு காய்ச்சல் வருமா? தலவலி வருமா? வயிற்று வலி வருமா? தூக்கம் வருமா?வராதா ? எதைப் பற்றியும் அவள் யோசிப்பதில்லை.

அந்தக் கணினி அடிக்கடி ICU வரை கூட போய் வருவதுண்டு,ஒரு முறை கோமாவிற்கே போய் மீண்டும் பல வேண்டுதலுக்கு பின் நினைவு திரும்பினாள்  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கணினிக்கு அவள்  செய்த கொடுமையைப் போல் வேறு யாரும் செய்திருக்க முடியாது.அக்கு வேறு ஆணி வேறாக பின்னி பெடல் எடுத்து பெண்டு நிமிர்த்தி என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை செய்தாலும் தன்னால் முடிந்தளவு உதவிக் கொண்டு தான் இருந்தது.ஒரு நாள் தள்ளாத வயதில் அதன் சேமிப்பை எல்லாம் அவளிடம் தெரிவிக்காமல் மரித்துப் போனது.:(  ...
மீண்டும் ஒரு கணினி வீடு தேடி வந்தது.பட்ட பின்பே அவளுக்கு புத்தி வந்தது, இனியாவது அந்தக் கணினிக்கும்  உயிர் உண்டு என்பதை உணர்ந்ததால்  இப்ப வீட்டில் கணினி தான் மகாராணி போல் இருக்கா...
தலைப்பிற்கும் எழுதியதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பது தெரிகிறது, எங்க வீட்டில் என் காதில் அடிக்கடி வந்து விழும் வார்த்தைகள் தான் அது.
கணினியே வேகம், நாம் சொல்வதை செய்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து அவளை விட வேகமாய் ஆணை பிறப்பிக்காதீர்கள், பத்து ஜன்னல்களை ஒன்றாக திறக்காதீர்கள். மூடுவதில் திறப்பதில் அதிக கவனமும் பொறுமையும் தேவை. ஒரு நாள் அவளுக்கு நேர்ந்தது   போல் உங்களுக்கும் நேரலாம்...

12 comments:

 1. :) என் கணினி இப்போது தட்டுத் தடுமாறி வேலை செய்துட்டு இருக்கிறது ஆசியாக்கா! :)

  நல்ல பதிவு. மகாராணிய பத்திரமாப் பாத்துக்குங்கோ!

  ReplyDelete
  Replies
  1. மகி,கவனம் எல்லாவற்றையும் பத்திரப்படுத்திக்கோ!வருகைக்கும் கருத்திற்கும் நன்றிபா.

   Delete
 2. அனுபவ யோசனைகள்... எதற்கும் கவனம் வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்,நீங்க தான் எக்ஸ்பர்ட் ஆச்சே!ஆமாம் ஆனால் இந்த அவசரத்தால் தான் என்னவெல்லாமோ நடந்து விடுகிறது.

   Delete
 3. சுவாரஸ்யம் பட விவரிப்பு படிக்கவே நன்றாக உள்ளது.எங்க வீட்டிலும் இதே கதைதான்.நிறைய விண்டோஸை ஓபன் செய்து ஸ்ட்ரக் ஆகி பெரிய தலைவலிதான்.மகன் தான் அவ்வப்பொழுது அக்குவேறு ஆணி வேறாக பி.சியை பிரித்துப்போட்டு ரிப்பேர் செய்து உயிரூட்டுவார்.படிப்பு நிமித்தம்,வேலை நிமித்தம் வெளியூர்,வெளிநாடு சென்ற பின் என்ன செய்யப்போகிறோனோ????:(

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
   //படிப்பு நிமித்தம்,வேலை நிமித்தம் வெளியூர்,வெளிநாடு சென்ற பின் என்ன செய்யப்போகிறோனோ????:(//
   நீங்களே எல்லாம் கத்துக்குவீங்க..

   Delete
 4. //கணினியே வேகம், நாம் சொல்வதை செய்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து அவளை விட வேகமாய் ஆணை பிறப்பிக்காதீர்கள், பத்து ஜன்னல்களை ஒன்றாக திறக்காதீர்கள். மூடுவதில் திறப்பதில் அதிக கவனமும் பொறுமையும் தேவை. //

  நல்லதொரு விழிப்புணர்வுப்பகிர்வு. நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி சார்.பாவம் என்னால் அவரின் ஃபைல்கள் நிறைய காணாமல் போய்விட்டது,இப்ப அதனால் ஆளுக்கொரு கணினியாகிவிட்டது.தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 5. நல்லதொரு பகிர்வு. கவனமாக கையாண்டால் தான் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதி.ஆமாம் மிக கவனமும் கொஞ்சம் பொறுமையும் அவசியம்பா.

   Delete
 6. மிகச்சரியா சொல்லி இருக்கீங்க ஆசியா

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி ஜலீலா.

   Delete