Pages

Saturday, 30 March 2013

துபாய் மிராக்கிள் கார்டன் / Dubai Miracle Garden (DMG)

இந்த வாரம் துபாய் சென்ற பொழுது மிராக்கிள் கார்டன் போய் வந்தோம். உலகத்தில் உள்ள மிகப் பெரிய இயற்கை மலர் தோட்டம் லிஸ்டில் இதுவும் இடம் பிடித்துள்ளது. 45 மில்லியன் மலர்களுக்கும் மேல் உள்ளதாக கணக்கீடு சொல்கிறது. வித விதமான லேண்ட்ஸ்கேப்,எங்கிருந்து பார்த்தாலும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகும் மனதிற்கு இதத்தையும் தந்தது எனபதை சொல்லவும் வேண்டுமோ!
இது தான் நுழைவு வாயில்.நுழைவுக் கட்டணம் 20 திர்ஹம்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றி வரலாம்.எல்லா வசதியும் இருக்கு,குழந்தைகளுடன் போய் வரலாம்..

நான் கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு.




































































வரிசையாக  இருக்கும் கூடாரங்களில்  அமர்ந்து இளைப்பாறிக் கொள்ளலாம்,சின்ன சின்ன ரெஸ்டாரண்ட்களும் இருக்கு.

நிகழ்ச்சிகள் நடத்த அமைத்த மேடையும், இருக்கைகளும்..





எந்த படத்தை பகிர எந்த படத்தை விட என்று தெரியவில்லை, எடுத்த நூற்றுக்கு மேல் உள்ள படத்தையும் பகிர ஆசை தான்.முடிந்தால் ஸ்லைட் ஷோவாக பின்பு பகிர்கிறேன்..க்லோசப் படங்களில் நாங்களும் இருப்பதால் நிறைய படங்கள் பகிர முடியலை.






இது இன்னொரு வாயில் இந்த  வழியாக போய்விட்டு .நாங்க மெயின் எண்ட்ரெண்ட்ஸ் வழியாக திரும்பி வந்தோம்.மெதுவாக நடந்து நடந்து ரசித்து விட்டு வரலாம்.இவ்வளவு வித விதமான மலர்களை இந்த பாலைவன பூமியில் ஒரே இடத்தில் பார்ப்பது மனதிற்கு மிக சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியும் தந்தது.ஆனால் நுழைவுக் கட்டணம் தான் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றியது.அல் ஐன் பாரடைஸ் (பார்க்க கிளிக்கவும்)இலவசம்.ஆனால் எங்களுக்கு தெரிந்தவர்கள் அல் ஐன் வருபவர்கள் அல் ஐன் பாரடைஸ் பற்றி விசாரிக்கும் பொழுது இப்ப அல் ஐனில் இல்லை மூடப் பட்டு விட்டது என்று சொல்லுவதோடு, அதனை விட பெரிதாக துபாய் மிராக்கிள் கார்டன் வந்து விட்டது என்பதை சொல்லி மட்டுமே வந்தோம், சரி நாமும் போய் பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பி சென்று வந்தது தான் இந்த பகிர்விற்கு காரணம். படங்கள் சுமாராக இருந்தாலும்,நேரில் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

10 comments:

  1. படங்கள் சிறிதாக இருந்தாலும், இடங்கள் அருமை...

    பூக்களின் படைப்புகள் அட்டகாசம்...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மகிழ்ச்சி தனபாலன் சார்..

    ReplyDelete
  3. அழகான இடம். மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ராமலஷ்மி.நீங்கள் கிளிக்கியிருந்தால் மிக அழகான பகிர்வாய் இருந்திருக்கும்.. ;) !

      Delete
  4. மிராக்கிள் கார்டன்..பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது.உண்மையில் பெயருக்கேற்றவாறு அதிசய கார்டன் தான்.கேள்விப்படவே இல்லையே இப்படி ஒரு கார்டன் இருப்பது பற்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த கார்டன் இப்ப டெவலப்பானது தான் ஸாதிகா.வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  5. மிகவும் அருமையான பதிவு. வியக்க வைக்கும் படங்கள். பார்த்துப் பரவஸமடைந்தேன்.

    அற்புதமான காட்சிகளை வீட்டிலிருந்தே கண்டு மகிழும் வாய்ப்பினை அளித்துள்ளீர்கள். ;))))) மகிழ்ச்சி.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றியோ நன்றிகள் வை.கோ.சார்..

      Delete
  6. ரொம்ப சூப்பராக இருக்கு

    ReplyDelete
  7. படங்களை பார்க்கும் போதே அந்த இடத்தின் அழகான சூழ்நிலை தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete