Pages

Wednesday, 13 March 2013

ஹட்டா அணை (யு.ஏ.இ) / Hatta Dam (U.A.E)

 விடுமுறை நாட்களில் பொழுது போகவில்லை என்றால் ஒரு லாங் ட்ரைவ் போனால் கொஞ்சம் மனசுக்கு இதமாக இருக்கும்.அப்படி போன ஒரு இடம் தான் இந்த ஹட்டா அணைக்கட்டு.இந்த ஹட்டா கிராமம், அல் ஐனில் இருந்து 125 கிலோ மீட்டர்  தொலைவு தான்,அதனால் போய் வந்தது அத்தனை சிரமமாகத் தெரியவில்லை.நாங்கள், சென்ற டிசம்பர் பள்ளி விடுமுறையின் போது சென்று வந்தோம். ஃபைலில் தூங்கிக் கொண்டிருந்த மகன் எடுத்த புகைப்படங்களைப் பகிரஆசை.

ஆனால் பாருங்க,நாங்கள் சென்ற சமயம் ஹோவென்று ஆள் அரவமில்லாமல் இருந்தது.நான் காரை விட்டு இறங்கினேனோ இல்லையோ யாரையும் எதிர்பார்க்காமல் திறந்த வெளியை பார்த்தவுடன் மடமடவென்று நடக்க ஆரம்பித்து விட்டேன்.ரொம்ப தூரம் போன பின்பு தான் திரும்பி பார்க்கிறேன் ஒருவரையும் காணவில்லை.அணைஅழகை ரசிக்க  கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும்.சரி பின்னாடி வரட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன்.


 நானும் ஒரு முனையில் இருந்து மறுமுனை வந்து விட்டேன்.அப்பவும்,அப்பாவும் பிள்ளைகளும் வந்து சேரவில்லை.
 நானும் சுற்றி முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை.எங்களை யாரும் அடித்துப் போட்டால் கூட கேட்க யாரும் இல்லை.பயம் லேசாக எட்டிப் பார்த்த்து..
ஒரு வழியாக மூவரும் வந்து சேர்ந்தார்களோ இல்லையோ அப்பாடன்னு இருந்தது.இவர் வேறு மக்கள் இருவரையும் இறங்கி போய் தண்ணீரை தொட்டு விட்டு வாங்கன்னு சொல்லவும் பிள்ளைகளும் இறங்கிட்டாங்க.எனக்கு பக்கென்று ஆகிவிட்டது.
 இறங்கி நடக்கிறாங்க,நடக்கிறாங்க நடந்து கிட்டே இருக்காங்க..இவரும் கையை ஆட்டி போங்க போங்கன்னு சைகை காட்டி உற்சாகம் மூட்ட கீழே போய்ட்டாங்க,(தடை செய்யப்பட்ட பகுதி)

 அம்மாடி எனக்கு நெஞ்சே பிளந்து விடும் போல் இருந்தது.அவ்வளவு தான் இறைவனை அழைப்பதை தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை.
 அப்படியே ஏரியின் அழகை நீங்க ரசித்து கிட்டே வாங்க..
நான் சொன்னதில்  பயந்து போயிட்டீங்க போல..விட்டுத் தள்ளுங்க,இப்படி ஏதாவது அடிக்கடி நடக்கும்.

 பிள்ளைகளை அனுப்பி விட்டு இவரால் இங்கு இருக்க முடியலை அவரும் இறங்கி போய்விட்டார்.மறுபடியும் தனியாக நான் மேலே நின்று கொண்டிருந்தேன்.எனக்குத் துணை எல்லாம் வல்ல இறைவனே !நானும் இறைவனும் மனம் விட்டு பேசிக் கொண்டோம்.வேறு என்ன செய்வது..
அப்பாடா ஒரு வழியாக மூவரும் திரும்பி வர மகன் வேறு அம்மா,படம் எடுக்க சொல்லிட்டாங்களேன்னு வளைச்சு வளைச்சு பட எடுக்க நேரமோ போய்கிட்டே இருக்கு.பாவம் இறங்கும் பொழுது ஈசியாக இறங்கினவர்களால் வேகமாக ஏற முடியலை.ஒரு வழியாக வந்து சேர பசியும் எடுக்க ஆரம்பித்தது.

 அதோ அங்கே தெரிகிற ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜில் ஹில் பார்க் இருக்கு அங்கே போய் அமர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லவும் நான் கிளம்புவோம் கிளம்புவோம் என்று ஒரே பர பரப்பு..வரும் பொழுது அத்தனை வேகமாக எங்களை விட்டுவிட்டு ஓடி வந்தீங்க,இப்ப என்னம்மா பொறுங்கன்னு என் மகன் மீண்டும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

 எல்லோரும் கிளம்பி காரில் ஏறிய பின்பு தான் எனக்கு பட படப்பே அடங்கியது.
 ஒருவழியாக அந்த ஹில் பார்க்கை வந்தடைந்தோம்.

வீட்டில் சமைத்து வெளியே எடுத்துப் போய் எங்காவது பார்க்கில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வர எனக்கு மிகவும் பிடிக்கும்.நாங்கள் புளியோதரையும் 
சிக்கன்,சிப்ஸ் என்று கட்டி எடுத்துக் கொண்டு போயிருந்தோம்.இங்கு ஒரு டிப்ஸ் சொல்றேன். அலுமினியம் ஃபாயிலில் தனித் தனியாக சாப்பாடை மடித்து ஒரு பெரிய ஹாட் பேக்கில் அடுக்கி எடுத்து செல்லுங்கள். நான்கு மணி நேரம் ஆனாலும் சுடச் சுட ஃப்ரெஷாக இருக்கும்.ஆளுக்கொரு பார்சலை எடுத்து கையில் கொடுத்தால் முடிந்தது.பேப்பர் விரித்தோ ப்லேட்டில் வைத்தோ விருப்பம் போல் சாப்பிட வேண்டியது தான்..

 
 பார்க்காவது சமதளத்தில் இருந்ததா,அதுவும் இல்லை,மலை மீது அதனைச் சுற்றி அமைந்த பார்க்.அங்கங்கு கூடாரம்.நாங்கள் ஒரு கூடாரத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்தோம்.அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது.


பொதுவாக அமீரக பார்க்களில் பார்பிகியூ அடுப்பு எப்படியும் இருக்கும். இந்த பார்க்கிலும் எல்லா கூடாரத்திலும் இருந்தது.உள்ளூர் மக்கள் கூட்டம் வர வர ஒரே பார்பிகியூ மணம் தான்.கபாப்,டிக்கா என்று அந்த ஏரியா முழுவதும் அட்டகாசமான வாசனை.
நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு அப்படியே அங்கு இருந்த பெஞ்ச்சிலும் கொண்டு சென்ற நாற்காலியிலும் அமர்ந்து ஒரு சிறிய துக்கம் போட்டு விட்டு,ஃப்லாஸ்க்கில்  எடுத்து சென்ற சுலைமானி டீயை குடித்து விட்டு ஃப்ரெஷாக கிளம்பி அல் அயினை நோக்கி மகிழ்ச்சியாக திரும்பினோம்.
இதுவும் ஒரு மறக்க முடியாத பயண அனுபவம் தான்.மனோ அக்கா பயண அனுபவம் பற்றி எழுத சொல்லவும் இதுவும் நினைவு வந்தது.

நாங்கள் சாப்பிடும் பொழுது என் மகன் தன் சாப்பாட்டில் பாதியை இந்த பூனைக்குத் தான் கொடுத்தான்,அந்த பாசத்தில் அது நாங்கள் கிளம்பும் வரை எங்களுடனேயே இருந்து வழியனுப்பி வைத்தது.

-பயணங்கள் தொடரும்.

25 comments:

 1. /ன் சாப்பாட்டில் பாதியை இந்த பூனைக்குத் தான் கொடுத்தான்,அந்த பாசத்தில் அது நாங்கள் கிளம்பும் வரை எங்களுடனேயே இருந்து வழியனுப்பி வைத்தது./ hahaha! உங்க பதிவில ஹைலைட்டே இதான்! பூஸக்கா வருவாங்க, வெயிட் பண்ணுங்க! :))))


  நல்ல பதிவு ஆசியாக்கா! ஆளரவமே இல்லாம கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு படங்களைப் பார்க்கவே! ஹோப் யு ஹேட் அ நைஸ் அவுட்டிங்!

  ஃபாயில் பேப்பர் ஐடியா நானும் செய்வேன். ஈஸியா இருக்கும்.:)

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி மகி,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 2. ஒரு டவுட்ட்ட்ட்ட்ட்..பூஸார் புளியோதரையும் சாப்ட்டாரா என்ன? ;))))

  ReplyDelete
  Replies
  1. இல்லை மகி,ஒன்லி சிக்கன், போட்ட புளியோதரையை தொட்டே பார்க்கலை.கரெக்டா பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்க..மகி.

   Delete
  2. பூனை பசித்தாலும் புளியோதரை தின்னாது -இது புது மொழி..மகி.

   Delete
 3. Thanks for this virtual tours..Enjoyed your entire post..

  ReplyDelete
  Replies
  1. சரஸ் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி..

   Delete
 4. nalla
  pakirvu..


  anaiyin
  azhakil layiththen...

  iraivan epperpatta padaippaali...!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சீனி..

   Delete
 5. அசர வைக்கிறது ஹட்டா அணை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
  2. அழகான படங்கள் + அற்புதமான விளக்கங்கள்.;

   பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

   Delete
  3. //பூனை பசித்தாலும் புளியோதரை தின்னாது -இது புது மொழி..//

   மிகவும் ரஸித்தேன். சிரித்த்து மகிழ்ந்தேன். ;)))))

   Delete
  4. வை.கோ சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.உங்களுக்காக பூனை சாப்பிடும் படத்தை இணைத்திருக்கிறேன், பாருங்க சார்,புளியோதரையை விட்டு விட்டு சிக்கனை எப்படி சாப்பிடுகிறதுன்னு..ஹா.ஹா..அது தான் அந்த புது மொழி..

   Delete
  5. ;))))) எனக்குப்புளியோதரை மட்டும் தான் பிடிக்கும். மீதியெல்லாம் ஒன்றுமே பிடிக்காதூஊஊஊஊ, பூனை உள்பட.

   ஆனாலும் பூஸாரைக்கொஞ்சம் பிடிக்குமாக்கும். [அப்புறம் அவங்க கோச்சுப்பாங்க, எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]

   Delete
 6. காலம் காலமாக அங்கிருக்கும் உறவுகள் கூட இந்த ஹட்டா அணையைப்பற்றி சொன்னதில்லை.படங்களை வெகு நெரம் பார்த்து ரசித்தேன் ஆசியா.

  ReplyDelete
 7. மிக்க நன்றி ஸாதிகா. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.சும்மா அப்படியே ஒரு ரவுண்ட் போய் வரலாம்.அந்த டேமில் ரெஸ்ட்ரூம்,டாய்லட் வசதி எதுவும் செய்யப்படவில்லை,அதனால் அதிக மக்கள் நடமாட்டம் இல்லை எனலாம்.மற்ற வசதிகளுக்கு ஊருக்குள் வர வேண்டும்.

  ReplyDelete
 8. அணையின் அழகை ரசித்தேன். படங்கள் அழகு. இதுவும் பக் பக் அனுபவமா...:) இந்த மாதிரி ஒருநாள் வெளியே போய் விட்டு வந்தால் மனசுக்கு உற்சாகமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதி.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 9. Wow,Lovely photos and beautifully written travelogue.I wish to see this place oneday :)

  ReplyDelete
  Replies
  1. Thanks Nisha.S for your lovely comment.

   Delete
 10. இது எப்ப எடுத்தது ஆசியா

  நாங்க துபாய் வந்த புதிதில் போனோம் ஆனால் தண்ணீரே இல்லை

  ReplyDelete
 11. நாங்க போய் வந்து மூன்று மாதம் இருக்கும்,சென்ற டிசம்பரில் மகன் வந்திருந்த சமயம்,தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது,ஆனாலும் பாலைவனத்தில் இந்த தண்ணீரே பெரிசு தான் ஜலீலா.

  ReplyDelete
 12. அருமையான பயணக் கட்டுரை அக்கா.

  ReplyDelete
  Replies
  1. இது கட்டுரையா? சகோ..சும்மா போய் வந்ததை பகிர்ந்திருக்கேன்,அவ்வளவே! கருத்திற்கு நன்றி.

   Delete