Pages

Monday, 22 April 2013

அழகு டிப்ஸ் / Beauty Tipsஎன் டைரியில், சில சமயம் நான் வாசிக்கும்  புத்தகங்களில் பார்க்கும் உபயோகமான டிப்ஸ்களை குறித்து அல்லது கட் செய்து வைப்பதுண்டு, அவற்றில் சில அழகு குறிப்புக்கள் இங்கு பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலேயே பேசியல் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த டிப்ஸ் பயன் படுத்தி பயன் பெறலாம்..பவளம் போல் முகம் ஜொலிக்குமாம்.முயற்சி செய்து பாருங்க.

1. ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ்பேக் :
6 ஸ்ட்ராபெர்ரி பழங்களோடு ஒரு ஸ்பூன்ஆரஞ்சு ஜூஸ்,2 டீஸ்பூன் ப்ரெட் கிரெம்ஸ், 2 ஸ்பூன் ஃபுல்லர்ஸ் எர்த், சில துளிகள் ரோஸ் வாட்டர் இவற்றை சேர்த்து கெட்டியாக கலந்து முகம்,கழுத்தில்  பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

2.கேரட் ஃபேஸ்பேக்:
முக்கால் கப் தயிர்,ஒரு கேரட்,பீச் பழம் -பாதி, வெள்ளரி - பாதி மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும்.பலன் முகம் சாஃப்டாக ஈரத்தன்மையுடன் இருக்குமாம்.


3.அவகடோ ஹேர் பேக்:
ஒரு சிறிய அவகடோ பழம்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து முடியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.ஈரத்தனமையுடன் மென்மையாகவும் திடமாகவும் முடி இருக்குமாம்.


4.க்ரேப் ஃப்ரூட்  ஃபேஸ்பேக் :
க்ரேப் ஃப்ரூட் ஜூஸ்4 டேபிள்ஸ்பூன் ,2-3 டேபிள்ஸ்பூன் ஒட்ஸ் சேர்த்து குழைத்து பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு கழுவவும்.


5.பப்பாயா பம்ப்கின் மாஸ்க்:
அரை பப்பாளி பழம்,ஒரு கப் மஞ்சள் பூசணி சேர்த்து மசித்து முகத்தில்  பூசி விரல்களால் வட்டமடிக்கவும்.5 நிமிடம் கழித்து கழுவவும்.

 


இவை யாவும் பெர்சனல் கேர் என்ற புத்தகத்தில் பார்த்து எடுத்த குறிப்பு.நான் எதையும் உருப்படியாக செய்ததாக சரித்திரமே இல்லைபா.என்னிடம் சந்தேகம் எல்லாம் கேட்க கூடாது.சொல்லிட்டேன் ஆமா...
ஆனால் இவை யாவும் நாம் உட்கொள்ளும் பழம்,உணவு வகைகள் தான்,அலர்ஜி இருக்காது.எனவே தாராளமாக முகத்தில் பூசி அழகை அள்ளிக் கொள்ளலாம்.- இன்னும் நிறைய டிப்ஸ்கள் கொடுக்க உத்தேசம்.

படங்கள்  :  நன்றி கூகிள்.

Saturday, 20 April 2013

பெண்களே உஷார் - 2 - தங்கநகை விற்பனையில் மோசடி

தங்கம் விலை தற்சமயம் குறைந்து இருப்பதால் மக்கள் நகை வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே இப்போதைய நிலை.தங்க நகை விற்பனையில் பலவகையான மோசடி நடக்கிறது.அதனைக் குறித்த பகிர்வு தான் இது.

தங்க நகை விற்பனையில் முதாலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.

ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

மூன்றாவது மோசடி தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது.
ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான்.
ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.
துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள்.

மாறாக நாம்  நகையை விற்கச்சென்றால் அதில் 10- 20  சதவிகிதத்திற்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை.


தங்கம் விலை குறைந்து விட்டதே என்று காயின்,பிஸ்கட் ஆக வாங்கி சேமித்துக் கொண்டு நகை தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்கப் போனால், இப்போதைக்கு காயின்,பிஸ்கட் விற்பனைக்கு இல்லை.நகைகள் தான் வாங்க முடியும் என்று ஏகப்பட்ட கூலி,சேதாரம் என்று போட்டு அவர்கள் அடிக்கும் கொள்ளையை அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெண்கள் கவனத்திற்கு:
தங்கநகை விற்பனை என்பது ஒரு சூதாட்டம் போலத்தான், நகை வாங்கும் பொழுது வீட்டிலேயே தீர்மானித்து விட்டு கடைக்கு சென்ற பின்பும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து விட்டு வாங்குங்கள். நகை விற்பனையாளர்கள் பலே கொள்ளைக் காரர்கள்.இவர்கள் நம்மிடம் முகமூடி போடாமல் கொள்ளை அடிப்பவர்கள்.சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அமைதியாக கணக்கு போட்டு பாருங்கள்,நமது திட்டப் படி அமைந்தால் வாங்குங்கள்,இல்லாவிடில் நகர்ந்து விடுங்கள்.பேச்சில் மயங்கி பணத்தை இழந்து விடாதீர்கள்.சில சமயம் திருமணத் தேவைகளுக்கு நிச்சயம் நகை வாங்க வேண்டிய சூழல் வரும்.அதற்கு திட்டமிட்டு நிதானமாக வாங்குவது நல்லது.கூட்ட நாட்களை தவிர்த்து விடுங்கள்.சேல்ஸ் மேன் கணக்கு போட்டு மொத்த தொகையை சொன்னாலும் நீங்களும் கணக்கை சரி பார்த்து பணத்தை செட்டில் செய்யுங்கள். இதில் கௌரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
வாங்கிய நகைகளை வீட்டில் வந்து சரி பாருங்கள்.கடையில் கணக்கு பார்த்தாலும் வீட்டிலும் வந்து ஒரு முறை கணக்கை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.நகை வாங்கிய  பில்லை பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள்.ஏதாவது பிரச்சனை என்றால் அதே கடைக்கு சென்று சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

தற்சமயம் இத்தனை சதவிகிதம் கூலி என்று நிர்ணயித்து விட்டு அடிக்கும்கொள்ளைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ஆண்டிக் டிசைன் என்றும்,கல்கத்தா மேக், ஹேண்ட் மேட்,மெஷின் கட்,டர்க்கி,மேக்,சிங்கப்பூர் மேக், ப்ராண்ட்டட் நகை என்று வகை வகையாக ஆசை காட்டி கொள்ளையடிக்கப் படுகிறோம். ஒரு சிலர் நகையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப் படுவார்கள்.உள்ளதும் போச்சு என்று ஆகிவிடும்.ஏகப்பட்ட கூலி,சேதாரம் கொடுத்து வாங்கி அதனை அவசரத்திற்கு திரும்பி கொடுக்கப் போனால் நஷ்டம் தாண்.பணத்தை வைக்க இடமில்லாதவர்கள் வேண்டுமானால் மாற்றி மாற்றி வாங்கிக் கொள்ளலாம், தங்கத்தில் முதலீடு செய்யலாம்.கடன் உடன் பட்டு நகை வாங்க வேண்டுமா என்று யோசித்து பாருங்கள்.வியாபார நோக்கத்துடன் முதலீடு செய்வபவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்.

நகை என்பது ஆபத்தை வரவழைக்கக் கூடியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அதிகம் நகை அணிபவரையும் பாருங்கள்,சிம்பிளாக நகை அணிபவரையும் பாருங்கள் எது அழகு என்பது தெரியும்.போதும் என்ற மனமிருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

பேஸ்புக் பகிர்வில் நகை விற்பனை மோசடி குறித்த  விஷயங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது, அதனையொட்டி எழுதிய பகிர்வு தான் இது.உங்களுக்கு எதுவும் தனிப்பட்ட மோசடி அனுபவம் ஏற்பட்டு இருந்தாலும் கருத்தில் தெரிவிக்கலாம்.

Monday, 15 April 2013

பெண்களே உஷார்.. - 1


முக்கியமாக பெண்கள் குறித்த விழிப்புணர்வு பகிர்வுகள் இந்த பகுதியில் இடம்பெறும்.  முதல் பகுதியில்
மார்பபகப் புற்று நோய்   வருவதின் காரணம் குறித்து பார்ப்போம்.
தற்காலத்தில் அதிகமாக பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதை நாம் பரவலாக அறிந்து வருகிறோம்.
அதற்கு முக்கிய காரணம் ப்ளாஸ்டிக் பொருட்கள் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் முக்கிய காரணம் ப்ளாஸ்டிக் பாட்டிலில் காரில் விட்டுச் செல்லும் நீரை குடிப்பது என்று  தெரிவிக்கிறார்கள்.காரில் விட்டுச் சென்று பின் அந்த நீரை அருந்துவதால், காரின் வெப்பம் ப்ளாஸ்டிக்குடன் வேதியல் மாற்றம் புரிந்து டைஆக்ஸின் என்ற நஞ்சு பொருளை தண்ணீரில் உண்டாக்குகிறது.டைஆக்ஸின் என்ற நஞ்சு பொருள் தான் மார்பு புற்று நோய் திசுக்களில் அதிகம் காணப்படுவதாக ஆய்வு மூலம் கண்டறிந்து அறிவித்துள்ளார்கள்.

1.அதனால் பெண்களே தயவு செய்து காரில் விட்டுச் செல்லும் ப்ளாஸ்டிக் பாட்டில் நீரை அருந்துவதை தவிர்க்கவும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்களை காரில் நீர் எடுத்துச் செல்ல உபயோகிக்கவும்.


2.ப்ளாஸ்டிக் பாட்டிலை ஃப்ரீசரில்  வைத்து தண்ணீர் அருந்தாதீர்கள், இதுவும் கெடுதலாம்.

3.மைக்ரோவேவில் சமைக்க, சூடு படுத்த ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும்.உணவில் உள்ள கொழுப்பு ப்ளாஸ்டிக் பொருட்களில் சூடு செய்யும் பொழுது வெப்பத்துடன் மாற்றம் புரிந்து டைஆக்ஸின் என்ற மார்பு புற்று நோய்க்கு காரணமான நஞ்சு பொருளை அங்கும் உண்டாக்குகிறதாம். இப்படி சூடு செய்து அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது இந்த நோயால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அதிகம்.

4.ப்ளாஸ்டிக் ராப்ஸ்( wraps) உபயோகிக்காதீர்கள்.இன்ஸ்டெண்ட் சூப், நூடுல்ஸ் பேக் ஆகியவற்றை கூட அந்த பேக்கில் இருந்து எடுத்து  சமைக்கும் பாத்திரத்தில் மாற்றி சமைத்து சாப்பிடுவது நல்லது.


5.கிளிங் ராப் (cling film) உபயோகித்து மூடி மைக்ரோவேவில் சூடு படுத்தாதீர்கள்.சூடு செய்யும் பொழுது உற்பத்தியாகும் வெப்பத்தினால் ப்ளாஸ்டிக் உருகி சாப்பாட்டில் கலந்து நஞ்சுப் பொருட்களை உண்டாக்குகிறது.அதற்குப் பதிலாக மூட பேப்பர் டவலை பயன் படுத்தலாம்.

6.ப்ளாஸ்டிக் பொருட்களில் சூடான சாப்பாடை அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு கொடுத்தும் விடாதீர்கள்,எடுத்தும் செல்லாதீர்கள்.

மொத்தத்தில் சொல்லப் போனால் ப்ளாஸ்டிக் பாத்திரங்களை,பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் கவனத்திற்கு:
1.ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்  முடிந்த பின்பு, நாமே நம் மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.ஏதாவது சிறிய உருண்டையோ,கட்டியோ தென்பட்டாலும், காம்பில் நீர் வடிந்தாலும், இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

2.நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது ஒரு முறை மார்பக புற்று நோய் சோதனை செய்து கொள்வதும் அவசியம்.
வந்த பின்பு அல்லாடுவதை விட வரும் முன்பே உஷாராய் இருப்பது நல்லது.நாற்பது வயதிற்கு மேல் என்றில்லை,சந்தேகம் இருந்தால் எந்த வயதிலும்  பரிசோதனை மூலம் கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்தக் கூடியது தான் மார்பகப் புற்றுநோய்,எனவே பயப்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

-என்றென்றும் அன்புடன் 
ஆசியா உமர்.

படங்கள் - கூகிள் நன்றி.

Saturday, 13 April 2013

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
சித்திரை மகளே வருக
சிரித்து மகிழவே வரம் தருக
சீரிய நோக்கம் சிறப்புறவும்
சின்ன சின்ன ஆசை நிறைவேறவும்
சிந்தனையில் தெளிவும்
சிக்கலின் அழிவும்
சினம் இல்லா வாழ்வும்
சிற்றின்ப வெறுப்பும்
சிறுக சிறுக சேமிப்பும்
சீமை சென்றாலும்
சீர்மிகு செந்தமிழ்நாட்டின்
சிறப்பை போற்றவே
சின்னதாய் வலையைப்பின்னி
சினேகமாய் வந்துலாவும் வலையுலக 
சிங்கங்களே
,
 உங்கள் அனைவருக்கும்
சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


--ஆசியா உமர்.

இது ஒரு ரீபோஸ்டிங்.முன்பு சமைத்து அசத்தலாமில் பகிர்ந்தது.அதனையே இந்த வருடமும் பகிர்கிறேன்.
அன்பு நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.