Pages

Monday, 15 April 2013

பெண்களே உஷார்.. - 1


முக்கியமாக பெண்கள் குறித்த விழிப்புணர்வு பகிர்வுகள் இந்த பகுதியில் இடம்பெறும்.  முதல் பகுதியில்
மார்பபகப் புற்று நோய்   வருவதின் காரணம் குறித்து பார்ப்போம்.
தற்காலத்தில் அதிகமாக பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதை நாம் பரவலாக அறிந்து வருகிறோம்.
அதற்கு முக்கிய காரணம் ப்ளாஸ்டிக் பொருட்கள் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் முக்கிய காரணம் ப்ளாஸ்டிக் பாட்டிலில் காரில் விட்டுச் செல்லும் நீரை குடிப்பது என்று  தெரிவிக்கிறார்கள்.காரில் விட்டுச் சென்று பின் அந்த நீரை அருந்துவதால், காரின் வெப்பம் ப்ளாஸ்டிக்குடன் வேதியல் மாற்றம் புரிந்து டைஆக்ஸின் என்ற நஞ்சு பொருளை தண்ணீரில் உண்டாக்குகிறது.டைஆக்ஸின் என்ற நஞ்சு பொருள் தான் மார்பு புற்று நோய் திசுக்களில் அதிகம் காணப்படுவதாக ஆய்வு மூலம் கண்டறிந்து அறிவித்துள்ளார்கள்.

1.அதனால் பெண்களே தயவு செய்து காரில் விட்டுச் செல்லும் ப்ளாஸ்டிக் பாட்டில் நீரை அருந்துவதை தவிர்க்கவும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்களை காரில் நீர் எடுத்துச் செல்ல உபயோகிக்கவும்.


2.ப்ளாஸ்டிக் பாட்டிலை ஃப்ரீசரில்  வைத்து தண்ணீர் அருந்தாதீர்கள், இதுவும் கெடுதலாம்.

3.மைக்ரோவேவில் சமைக்க, சூடு படுத்த ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும்.உணவில் உள்ள கொழுப்பு ப்ளாஸ்டிக் பொருட்களில் சூடு செய்யும் பொழுது வெப்பத்துடன் மாற்றம் புரிந்து டைஆக்ஸின் என்ற மார்பு புற்று நோய்க்கு காரணமான நஞ்சு பொருளை அங்கும் உண்டாக்குகிறதாம். இப்படி சூடு செய்து அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது இந்த நோயால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அதிகம்.

4.ப்ளாஸ்டிக் ராப்ஸ்( wraps) உபயோகிக்காதீர்கள்.இன்ஸ்டெண்ட் சூப், நூடுல்ஸ் பேக் ஆகியவற்றை கூட அந்த பேக்கில் இருந்து எடுத்து  சமைக்கும் பாத்திரத்தில் மாற்றி சமைத்து சாப்பிடுவது நல்லது.


5.கிளிங் ராப் (cling film) உபயோகித்து மூடி மைக்ரோவேவில் சூடு படுத்தாதீர்கள்.சூடு செய்யும் பொழுது உற்பத்தியாகும் வெப்பத்தினால் ப்ளாஸ்டிக் உருகி சாப்பாட்டில் கலந்து நஞ்சுப் பொருட்களை உண்டாக்குகிறது.அதற்குப் பதிலாக மூட பேப்பர் டவலை பயன் படுத்தலாம்.

6.ப்ளாஸ்டிக் பொருட்களில் சூடான சாப்பாடை அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு கொடுத்தும் விடாதீர்கள்,எடுத்தும் செல்லாதீர்கள்.

மொத்தத்தில் சொல்லப் போனால் ப்ளாஸ்டிக் பாத்திரங்களை,பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் கவனத்திற்கு:
1.ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்  முடிந்த பின்பு, நாமே நம் மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.ஏதாவது சிறிய உருண்டையோ,கட்டியோ தென்பட்டாலும், காம்பில் நீர் வடிந்தாலும், இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

2.நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது ஒரு முறை மார்பக புற்று நோய் சோதனை செய்து கொள்வதும் அவசியம்.
வந்த பின்பு அல்லாடுவதை விட வரும் முன்பே உஷாராய் இருப்பது நல்லது.நாற்பது வயதிற்கு மேல் என்றில்லை,சந்தேகம் இருந்தால் எந்த வயதிலும்  பரிசோதனை மூலம் கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்தக் கூடியது தான் மார்பகப் புற்றுநோய்,எனவே பயப்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

-என்றென்றும் அன்புடன் 
ஆசியா உமர்.

படங்கள் - கூகிள் நன்றி.

18 comments:

 1. பெண்கள் மட்டும் அல்ல... அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான சில தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. Sis,Thanks a million for this important facts and info!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நிஷா,நாம் எல்லோருமே கவனமாக இருக்க வேண்டும்.

   Delete
 3. நல்லதொரு விழிப்புணர்வு ஊட்டும் இடுகை.நீங்கள் குறிபிட்டுள்ள பல தவறுகளை நான் அன்றாட வாழ்வில் சர்வசாதரணாமக நடைமுறை படுத்தி வ்ருகிறொம் என்பது உண்மைதானே?இனியாவது பாதுகாப்புடன் இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஸாதிகா.கருத்திற்கு நன்றி.

   Delete
 4. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி ஆசியா .
  பிளாஸ்டிக் மற்றும் மைக்ரோவேவ் ..கூடுமானவரை இவற்றையெல்லாம் தவிர்ப்பதே நல்லது .
  வருமுன் காப்பதே நல்லது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஏஞ்சலின் ,அந்தக் காலம் இதெல்லாம் இல்லாமல் எத்தனை ஆரோக்கியமாக இருந்தது.கருத்திற்கு நன்றி.

   Delete
 5. அக்கறையுடன் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு நன்றி ஆசியா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலஷ்மி.

   Delete
 6. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு, மிகுந்த அக்கறையுடன் பகிர்ந்திருக்கும் தகவல்கள். அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான சில தகவல்கள் தான். பாராட்டுக்க்ள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

   Delete
 7. மிக அருமையான விழிப்புணர்பு பகிர்வு,

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி ஜலீலா.

   Delete
 8. அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு பகிர்வு அக்கா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்.

   Delete
 9. தங்களின் சமூக அக்கறைக்கு மனமார்ந்த நன்றி .............

  ReplyDelete
  Replies
  1. செந்தில் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete