Pages

Monday, 22 April 2013

அழகு டிப்ஸ் / Beauty Tips



என் டைரியில், சில சமயம் நான் வாசிக்கும்  புத்தகங்களில் பார்க்கும் உபயோகமான டிப்ஸ்களை குறித்து அல்லது கட் செய்து வைப்பதுண்டு, அவற்றில் சில அழகு குறிப்புக்கள் இங்கு பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலேயே பேசியல் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த டிப்ஸ் பயன் படுத்தி பயன் பெறலாம்..பவளம் போல் முகம் ஜொலிக்குமாம்.முயற்சி செய்து பாருங்க.

1. ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ்பேக் :
6 ஸ்ட்ராபெர்ரி பழங்களோடு ஒரு ஸ்பூன்ஆரஞ்சு ஜூஸ்,2 டீஸ்பூன் ப்ரெட் கிரெம்ஸ், 2 ஸ்பூன் ஃபுல்லர்ஸ் எர்த், சில துளிகள் ரோஸ் வாட்டர் இவற்றை சேர்த்து கெட்டியாக கலந்து முகம்,கழுத்தில்  பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

2.கேரட் ஃபேஸ்பேக்:
முக்கால் கப் தயிர்,ஒரு கேரட்,பீச் பழம் -பாதி, வெள்ளரி - பாதி மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும்.பலன் முகம் சாஃப்டாக ஈரத்தன்மையுடன் இருக்குமாம்.


3.அவகடோ ஹேர் பேக்:
ஒரு சிறிய அவகடோ பழம்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து முடியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.ஈரத்தனமையுடன் மென்மையாகவும் திடமாகவும் முடி இருக்குமாம்.


4.க்ரேப் ஃப்ரூட்  ஃபேஸ்பேக் :
க்ரேப் ஃப்ரூட் ஜூஸ்4 டேபிள்ஸ்பூன் ,2-3 டேபிள்ஸ்பூன் ஒட்ஸ் சேர்த்து குழைத்து பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு கழுவவும்.


5.பப்பாயா பம்ப்கின் மாஸ்க்:
அரை பப்பாளி பழம்,ஒரு கப் மஞ்சள் பூசணி சேர்த்து மசித்து முகத்தில்  பூசி விரல்களால் வட்டமடிக்கவும்.5 நிமிடம் கழித்து கழுவவும்.

 


இவை யாவும் பெர்சனல் கேர் என்ற புத்தகத்தில் பார்த்து எடுத்த குறிப்பு.நான் எதையும் உருப்படியாக செய்ததாக சரித்திரமே இல்லைபா.என்னிடம் சந்தேகம் எல்லாம் கேட்க கூடாது.சொல்லிட்டேன் ஆமா...
ஆனால் இவை யாவும் நாம் உட்கொள்ளும் பழம்,உணவு வகைகள் தான்,அலர்ஜி இருக்காது.எனவே தாராளமாக முகத்தில் பூசி அழகை அள்ளிக் கொள்ளலாம்.



- இன்னும் நிறைய டிப்ஸ்கள் கொடுக்க உத்தேசம்.

படங்கள்  :  நன்றி கூகிள்.

10 comments:

  1. Replies
    1. உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வை.கோ சார்.மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. அழகான படங்களுடன் அருமையான டிப்ஸ்கள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. அருமையான டிப்ஸ்கள்... நன்றி அக்கா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி விஜி.

      Delete
  4. அனைத்து குறிப்புகளும் மிக அருமை ஆசியா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete
  5. கோடைக்கேற்ற குளு குளு டிப்ஸ்:)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஸாதிகா.

      Delete